INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Wednesday, October 28, 2009

Living Legends Among Kallars. 2


கவிஞர் கோ. வேணுகோபாலன்.
680. 19ஆவது தெரு. பி.வி. காலனி. சென்னை 600 039.
கைபேசி 0091 9840749965.
தரைவழிப்பேசி 0091 44 25520866.
பர்மிய நாட்டில் கோவிந்தசாமி மாதுரார் - திருமதி சாலாட்சி தம்பதிகளின் மகனாக பிறந்தவர் வேணுகோபாலன். பல்வேறு இலக்கிய நயம் செறிந்த நூல்களை படைத்தவர். சொந்தஊர் ஒரத்தநாடு மாவட்டதின் தென்னமநாடு கிராமம். கடல் கடந்து ஆண்டுகள் பல வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த பர்மிய மண்ணிலும் தமிழ்ப்பணியில் தளராது உழைத்து தாய்த் தமிழகத்தில் குடியிருக்க மீண்ட பின்பும் குன்றாதத் தமிழார்வத்துடன் இயங்கி வரும் கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி சர்வதேச கள்ளர் பேரவையில் தமிழக சிறப்பு அங்கத்தினரரக அரவனைத்துகொள்வோம்.
கோ. வேணுகோபாலன் மாதுரார் அவர்களின் படைப்புகள்.
1. சோழ மண்டலப் பாடல்கள்.
2. தேன் முகில்.
3. வேலும் தமிழும்.
4. மண்ணின் மைந்தன். ( நாடகம் )
5. நினைத்ததே நடக்கும். ( நாடகம் )
6. நேதாஜி கீதம். ( ஒலிநாடா )

No comments:

Post a Comment