INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Tuesday, October 27, 2009

Legends Among Kallars - 4


வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்.

அரித்துவாரமங்களம், இவ்வூரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்(1870) பிறந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்(1920) இயற்கையெய்திய கோபாலசாமி இரகுநாதஇராசாளியார்.

இராசாளியார்.அவர்களின் வாழ்க்கை இற்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடமாகவும் வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் அமைந்துள்ளது. தன் மாமன் வேலு வாண்டையாரின் திருமகள் பெரியநாயகியம்மையை வாழ்க்கைத் துணையாக ஏற்று வையகம் போற்ற வாழ்ந்தார். இளம் வயதில் தந்தையை இழந்த நிலையில் கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல் குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டார். தமிழ் மொழியின்பாலும் இலக்கியங்களின்பாலும் மிகவும் ஈடுபாடு கொண்ட இராசாளியார் பண்டைய இலக்கியநூல்கள் பலவற்றை தேடிப்பெற்று தம் ஊரிலேயே ஒரு நூலகம் அமைத்தார். தமிழார்வம் காரணமாக தன் செல்வச்செழுமையை பயன்படுத்தி கிடைப்பதற்கரிய பல சுவடிகளைப் பெற்று தம் நூலகத்தை மிகச் சிறந்த நூலகமாக அமைத்தார். இங்கு வருகை தந்த திருவாடுதுறை ஆதினகர்தர் நூலகத்திலுள்ள அரிய நூல்களையும் சுவடிகளையும் பார்த்து இந் நூலகத்திற்கு சரஸ்வதி மகால் எனவும் பெயர் இட்டார். தமிழ்த் தாத்தா என்று அழைக்கபடும் உ.வே.சாமிநாத ஐயர் புறநானூறு ஒலைச்சுவடிகளை இராசாளியார் அவர்களிடம் தான் பெற்று அச்சிட்டார் என்பது வரலாறு.இராசளியார் அவர்களின் தமிழார்வமும் மொழிப்பற்றும், அறிவுப்பசியும் அதைத்தீர்துக்கொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் எங்கு கூட்டங்கள் நடந்தாலும் சென்று பங்கேற்கும் பாங்கும் தனிச்சிறப்பாகும். நான்காம் தமிழ் சங்கம் எனப்போற்றப்படும் இன்றைய மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பாண்டித்துரை தேவருடன் இனைந்து உருவாக்கியதில் இராசளியார் பங்கும் ஒரு வரலாறு. இராசளியார் தஞ்சையில் இருந்த போது தஞ்சைத் தமிழ் சங்கம் செயல்பாடற்று போனது குறித்து கவலையுற்ற புலவர் பலர் இராசளியார் அவர்களிடம் தூண்டியதன் விளைவாக கரந்தையில் புதிய தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதும் வரலாறு.கரந்தை தமிழ்ச்சங்க நூலகத்திற்க்குத் தம் நூலகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நூல்களையும் வழங்கி, குன்னூரில் ஒரு நூலகத்தையும் அமைத்து அங்கு தொல்காப்பியருக்குச் சிலையும் நிருவி தமிழ் வளர்த்தார் பண்டிதர் இராசளியார். இவ்வாறு இலக்கியம், சமயம், அரசியல், ஆகிய துறைகளில் ஈடுபட்டு புகழ் பெற்ற இராசளியார் குற்றபரம்பரை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துத் தம் சமூக மக்களின் மேன்மைக்கு வழி செய்தார். செல்வத்துப் பயனே ஈதல் என்பதற்கிணங்க வள்ளமை மிக்க நள்நிதிச் செல்வராகத் திகழ்ந்தார். இவர் வாழ்வு போற்றுவதற்க்கும், பின்பற்றுவதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment