INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, June 12, 2021

கள்ளர் குல அரச பரம்பரை

 கள்ளர் குல அரச பரம்பரை


மூவேந்தரும் ஒரே குடிவழியினர்

பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும்  பாடல் தெரிவிக்கிறது.

தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை 
மாறன் வழுதி மாறன் திரையன் 
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர் 
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே    (.வே..பாயிரம்)

பாண்டியர்

மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு
ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர். கடல் கடந்த தொலைவிடங்களிலிருந்து நெற்பயிர் கொண்டு வந்து பயிர் செய்ததால் சொல் - சொல்லர் -
சோலர் - சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது.

மாறன் வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.

பாண்டியர் வரலாறு மீட்டமைப்பது

பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள்  ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.

இந்நிலையில் 1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரியவனுக்குப் பட்டம் கட்டி வந்த வழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தனர். பாண்டியரின் ஐவகைப் பிரிவில் கொடி என்றும் பிதிர் என்றும் பிரிக்கப்பட்ட வண்ணம் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை.  . இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா
இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது.

இந்நூலில் பெயர் தெரிந்த பாண்டியர்களின் ஆட்சிக் காலம் கலியாண்டுக் கணக்கில் குறிக்கப்பட்டுள்ளது.

காசுமீர வரலாற்றை இராச தரங்கிணி குறிப்பிடுவது போல் நெடிய பாண்டியர் மரபை நற்குடிவேளாளர் வரலாறு  குறிப்பிடுவது,  நெடிய மூவேந்தர் வரலாற்றை மீட்டமைப்பதற்கு ஓரளவு துணை செய்கிறது. இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும்,  வெற்றிவேள்செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி
வருகிறது. இந்நூலில் கண்ட குறிப்புகளின் வண்ணம் விடுபட்ட பாண்டியன் பெயர்களையும் சேர்த்தால் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை 1000 ஆண்டுக் கால பாண்டியர் தலைமுறைகளைக் கண்டறிய முடிகிறது.

1000 ஆண்டுகளில் 40 தலைமுறை குறிப்பிடப்படுகிறது. ஒரு தலைமுறைக்குச் சராசரி 25 ஆண்டுகள் என்பது இயல்பான நிகழ்ச்சி ஆகும். இவர்களுள் கடைக் கழக நூல்களில் 20 பாண்டியர் பெயர்கள் மட்டும் உள்ளன.

சோழர்
சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் அல்லது முக்குலத்தோரின் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. சோழர்கள் கள்ளர்கள் என்பதற்கு பல அதாரங்கள் உள்ளன தொல்லியல் துறையும் பல வரலாற்று ஆசிரியர்களும் இதை உறுதி செய்கின்றனர். இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, சுராதி ராசன் முதலாகவரு சோழன் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சோழர்களுக்கு வழங்கப்பட்ட அத்துணை பட்டப்பெயர்களும் இன்று கள்ளர்களுக்கே வழங்கப்படுகின்றன(தேவர்,மேல்கொண்டான், சோழங்கன், சோழகங்கன், நாடாள்வார்.) சோழர்கள் பலர் திருமணம் செய்து கொண்டது மழவராயர் குடும்பத்தில் அந்த மழவராயரும் கள்ளர் தான். மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்: 'இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் எனவே டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள். திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், 'சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை' என்பர். (செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்--175 இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் சோழர்கள் கள்ளர்கள் வகுப்பினரே என்பதில் சந்தேகம் இல்லை

சேரர்
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள் 
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள் 
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்

அரசர்களின் ஆட்சியாண்டுகள்

* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்

பல்லவர்
"பல்லவர் யாவர்? எங்கிருந்து வந்தனர்? தென்னாட்டு மன்னர்களில் எங்ஙனம் தலைமை யெய்தினர்? கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன்.
இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை. தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப்பொருளதே யென்கினறனர். எனவே பல்லவர்கள் சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். கள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்களில் ஒரு பிரிவினர் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பின ரென்றும, ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திரப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள்தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து. மகாராட்டியர் செளத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒருவரியும்வாங்கி வந்திருக்கின்றனர். பல்லவரும் எதிரிகளாகிய தமிழ் மன்னர்களின் வலிமைக்கேற்பத் தமது ஆட்சியை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர் இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது.

கல்பாக்கத்திற்கு அருகில் உள்ள வயலாறு என்ற ஊரில் உள்ள கோவில் ஒன்றில் 54 பல்லவ மன்னர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.உலகில் உள்ள கல்வெட்டுகளில் இதுவே முக்கியமானதாகும்.கி.பி 3ம் நூற்றாண்டில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் டி.வி.

வசையின்றி இசைகொண்டு வாழ்ந்தவர்கள் கள்ளர் என்பர்.
சோறுடைத்து சோணாடு என்ற சோழநாட்டின் தலைநகரை பீடார் உறந்தை என்பர்
காவிரியின் கழிமுகத்தே சோழ்னின் கடற்கரை கோநகர் பட்டினமாம் ஒலிபுனல் புகார் என்பர்
நன்னன் பெருமான் நல்லாட்சி தந்தவூர் பாழிப்பேரூர் என்பர்
மலையமான் மலடர் கோமான் காரிவள்ளல் வாழ்ந்த வளமான ஊர் திருக்கோயிலூர்ப் பேரூர் என்பர்
அதியமான் நெடுமான் அஞ்சி ஆய்ந்தவூர் தகடூர் என்பர்
தொண்டைமானின் தொன்மையும் வளமையும்கொண்ட ஊர் காஞ்சி என்பர்
வையாவிக் கோப்பெரும் போகனின் வளநகரை பொதினி என்பர்
பல்லோருக்கும் வாரி வழங்கிய பாரிவள்லல் வழ்ந்த ஊர் பறம்புமலைப் பேரூர் என்பர்
ஓரிவள்லல் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த ஊர் கொல்லிமலைப் பேரூர் என்பர்
வேளீர்கோன் குடியமர்ந்த குன்றமும் அழுந்தூர் என்பர்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்ற எந்த பேதமும் இன்றி ஒரே தளத்தில் நின்று பெருமை கொள்ளத்தக்க மகத்தான நான்கு பெரும்
சொத்துக்த்துக்கள் நம்மிடம் உண்டு. அவை யாவன
1. சோழர் கலாச்சாரம்
2. பாண்டியர் வீரம்
3. சேரர் இலக்கியம்
4. பல்லவர் கலை வண்ணன்ம்
ஒரு நாட்டின் சமூக வளத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்நாட்டு குல மக்களின் இலக்கிய வளத்தை ஆராய்ந்து படித்தால் போதும் என்பார்கள். கள்ளர் குலத்தின் தொன்மை, நாகரிக மேன்மை, மனித நேயம், புலமை எவ்வளவு உயர்வானது என்று புரிந்துவிடும். தத்துவமா? அன்பா? பாசமா? தியாகமா? வீரமா? சோகமா? அரக்கத்தனமா? சாகசமா? இப்படி மனிதனுக்குள் இருக்கும் அத்தனை குணங்களையும் கள்ளர் குல இதிகாசங்கள் கொண்டுள்ளன. இவை தாண்டி இன்று வரை எந்த ஆட்சியும் புதிய சான்றுகளை படைக்கவில்லை என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லலாம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இது மாறப்போவதுமில்லை.

01. சோழர்
02. பாண்டியர்
03. சேரர்
04. பல்லவர்
05. தொண்டைமான்
06. வேளிர்
07. அதியமான்
08. மலையமான்
09. சேதிராயர்
10. காரி
11. ஓரி
12. ஆய்
13. நள்ளி
14. பலுவேட்டரையர்
15. வல்லவராயர்
16. கண்டியர்
17. முனியரையர்
18. புவிராயர்
19. வனடராயர்
20. நிலக்கிலார்
21. கலியராயர்
22. வேலர்
23. காடவராயர்
24. அழிசி
25. விச்சிக்கோ
26. விச்சிக்கோ நன்னன
27. அன்னி
28. பொறையாற்றுக் கிழான் நற்றேர்ப்பெரியன்
29. பரதவர் கோமான் மத்தி
30. கண்ணனெழினி
31. அகுதை
32. அவியன்
33. கரும்பனூர் கிழான்
34. ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
35. ஓய்மான் வில்லியாதன்
36. ஆதனுங்கன்
37. கள்வர் கோமான் புல்லி
38. கட்டி

சங்ககால தமிழகத்தில் வேந்தர், வேளிர்களை அடுத்து நிலையில் குறுநில மன்னர்கள் இருந்தனர். இக்குறுநில மன்னர்கள் வேந்தர்கள் ஆட்சிக்கு உட்பட்டு அவர்களுக்கு வரி செலுத்துபவராகவும், அவர்கள் அரசியலில் தாமும் பங்கேற்று, போர்காலங்களில் வேந்தர்களுக்கு படைத்தலைவராகவும் இருந்தனர்.

வேள் பாரி
பறம்புமலையை ஆட்சி செய்த மன்னன். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். இவர் குறுநிலமன்னர்களில் ஒருவர் ஆவார். பாரி வேளிர்குலத்தைச் சார்ந்தவர்; எனவே, இவரை 'வேள்பாரி' என்றும் அழைப்பர். பாரி பறம்பு மலையையும் அதனைச்சூழ்ந்த நாட்டையும் ஆண்டவர். இந்தப் பறம்புநாடு முந்நூறு(300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை இக்காலத்தில் 'பிரான்மலை' என்று வழங்குகின்றது. அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும். இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு. பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது. பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராக சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்து மதுரை செல்லும்வழியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; 'பொய்யாநாவிற்கபிலர்' என்று புகழப்படுபவர்.இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.

பாரி தமிழ்வேந்தர் மூவராலும் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். பாரிக்கு இருமகளிர் உண்டு.அங்கவை சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

வள்ளல்கள் எல்லோரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான்ஏறிவந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலால் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தன்ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற சுந்தரர் -'திருத்தொண்டத்தொகை' என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர்- பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப்பற்றிய பாடல்கள் 'புறநானூறு' என்னும் சங்கத்தொகை நூலில் உள்ளன. அவற்றை இனிக்காணலாம்.

தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர். பறம்புமலையை ஆட்சி செய்தகுறுநில மன்னனாக விளங்கிய பாரி வள்ளலின் பெருமை தமிழகம் முழுவதும் பரந்திருந்தது. கொடைத் திறத்திற்கு இவனையே ஒரு வரம்பாக எடுத்துக் காட்டினர் கவிஞர். “கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடினார் சுந்தரமூர்த்தி. இங்ஙனம் ஆன்றோர் புகழும் பேறு பெற்ற பாரி வள்ளல் சைவ சீலனாக விளங்கினான்.

அவ்வள்ளலுக்குரிய பறம்பு நாட்டிற் காணப்படும் பாரீச்சுரம் என்னும் சிவாலயம் அவன் எடுத்த திருக்கோயிலாகக் கருதப்படுகின்றது.120 பாரீச்சுரம் என்பது பாரியால் வழிபடப்பெற்ற சிவபிரான் கோயில் கொண்டதலம் என்ற பொருளைத் தரும். அப் பாரீச்சுரம் தேவாரப் பாடல் பெற்ற கொடுங் குன்றத்திற்கு அருகேயுள்ளது. எனவே, இக் காலத்திற் பிரான்மலை யெனப்படும் கொடுங்குன்றத்தைத் தன்னகத்தேயுடைய பறம்பு நாடே பாரியின் நாடென்பதும், அங்குள்ள பாரீச்சுரம் அவன் எடுத்த
திருக்கோயில் என்பதும் இனிது விளங்கும்.

வள்ளல்களிலியே இவர்தான் பெரிய வள்ளலாக சிறப்பு பெற்றிருக்கிறார். இவர் ஆண்ட நாடு பறம்பு மலை. தற்காலத்தில் பிரான்மலை என அழைக்கப்படுகிறது. இந்த பிரான்மலை இப்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் இருக்கிறது. உறங்காப்புளி என்னும் புளிய மரம் இங்கு விசேசம். சாதாரண புளியமரங்கள் இரவில் இலை மூடி உறங்கும். உறங்காப்புளி எப்பொழுதும் இலை திறந்தே இருக்கும். முல்லைக்கு தேர் கொடுத்தவன் என்று அறியப்பட்டவன்

வேள் பாரி 
புறநானூறு – கபிலர் 105 – 111, 113 – 120, 236 –
வேள் பாரியின் பெண்கள் – 112

காரி
கடையெழு வள்ளல்களுள் ஒருவர். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர்.

உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.

காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

கடைவள்ளல் எழுவரில் காரி என்பவன் ஒருவன். அவன் சிறந்த குதிரை வீரன். சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரி என்று அவன் குறிக்கப்படுகின்றான். சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள கார்குடி என்னும் ஊர் அச்சிற்றரசனோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது.122 சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.

மலயன்.
மலையமான் திருமுடிக்காரி என்பது இவன் முழுப்பெயர் ஆகும். இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. மலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரர். 'தடக்கை வேல் காரி' என்று சிறப்பிக்கப் படுபவர்; உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது வளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது.

மலையமான் திருமுடிக்காரி 
புறநானூறு – கபிலர் 121 – 124
தேர்வண் மலையன் வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் 125
மாறோக்கத்து நப்பசலையார் 126

ஓரி
திருமுடிக் காரியின் பெரும் பகைவன் ஓரி என்பவன். அவன் வில்லாளரிற் சிறந்த வீரன்; சிறந்த கொடையாளன். வல்லில் ஓரி என்று பண்டைப் புலவர்கள் அவனைப் பாராட்டினார்கள். கோவை நாட்டுப் பவானி வட்டத்தில் ஓரிசேரி என்னும் ஊர் உள்ளது. கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவன் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்படுவான். வன்பரணர் இவனைத் தன் பாடல் (புறநானூறு 153) ஒன்றில் 'ஆதன் ஓரி' என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் இவன் தந்தை பெயர் ஆதன் என்பதை அறியலாம்.
இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான்.நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன.

ஓரி அக்கொல்லிமலையை அப்பொழுது ஆண்டு கொண்டிருந்தவன். அவனது வில் திறனால் வல்வில் ஓரி எனப்பட்டான். மிக வேகமாகச் செல்லும் ஓரி என்றே பெயர் பெற்ற குதிரையை உடையவன். ஓரி இசையிலும் நாட்டியத்திலும் மிகமிக ஈடுபாடு கொண்டவன். அவனிடம் வந்த கூத்தர்களுக்கு பொன்னினால் குவளைமலர் செய்து வெள்ளி நாரிலே தொடுத்து மாலையாக அணிவித்து ஏராளமான செல்வத்தை அளிப்பான். நாட்டியம் புரிவோருக்கும் இசை வாணருக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்ததாலேயே கடையேழு வள்ளல்களில் ஒருவனாக புலவர்களால் பாடப்பட்டான். அவன் கொடுத்த செல்வத்தால் கூத்தரும் விறலியரும் ஆடலையும் பாடலையும் கூட மறந்து விடுவாராம். அவன் மீது ஒரு வண்ணம் இசை பாடினான் ஒரு பாணன். உடனிருந்த விறலியர் யாழ் இசைத்தனர். சிறுபறையையும் பெருவங்கியம் என்னும் கருவியையும் இசைத்தனர். அவனை 21 பாடல் துறைகளிலும் பாடல் இசைத்துப் பாடினராம். பாணன் "அப்பேர்பட்ட பெருமகனே" எனப் பாட தன் பெயர் கேட்க நாணி ஏராளமான செல்வம் கொடுத்தானாம். ஆதலால் மிகச் சிறந்த புரவர்களாகிய கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், கல்லாடனார் போன்றோர் அவனைப் பாடினர். அவனது கொல்லி மலையை "ஓரி கொல்லி" என்றும் பாடினர். இவ்வளவு புகழ்வாய்ந்த ஓரி ஏனோ சேரனோடு பகமை பூண்டான். ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்து இறவாப் புகழ் கொண்டானே அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அது கொல்லி மலைக்கு வடக்கே 60 கல் தொலைவில் உள்ளது. அதியமானும் சேரனுடன் பகைமை பூண்டான். அதியமான், ஓரி, சோழன் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இணைந்து சேரல் இரும்பொறையை ஒடுக்க விரும்பினர். அதனால் இருதரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. முதலில் மலையமான் திருமுடிக்காரி கொல்லி மலைமீது படையெடுத்து ஓரியோடு போரிட்டான். பேராற்றல் மிகுந்த காரியோடு ஓரியால் சமமாகப் போரிட முடியவில்லை. போரில் ஓரியைக் கொன்று கொல்லிமலையைக் கைப்பற்றி சேரனிடம் ஒப்படைத்தான் காரி.

நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த    
ஓரிக்குதிரை ஓரியும்     [107-111]

கருத்துரை
நெருக்கமான கிளைகளில், நறுமணம் வீசும் அரும்புகளைக் கொண்டுள்ள இளமையான உயர்ந்த புன்னை மரங்களையுடைய சிறிய மலைகளைக் கொண்ட நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்கு அளித்தவன். காரி என்னும் குதிரையில் ஏறிவரும் காரி என்ற வள்ளலோடு போரிட்டவன். பிடரிமயிர் அமைந்த குதிரையினை உடையவன். இத்தகைய ஓரியும்,

சொற்பொருள் விளக்கம்
நளிசினை – நெருக்கமான கிளை, நறும்போது – நறுமணம் வீசும் அரும்பு, கஞலிய – விளங்கிய, நாகு – இளமை, முதிர் – உயர்ந்த, நாகத்து – புன்னை மரத்தை, குறும்பொறை – சிறிய மலை, நல்நாடு – நல்லநாடு, கோடியர்க்கு – கூத்தருக்கு, ஈந்த – வழங்கிய, காரக்குதிரை – காரி என்னும் குதிரையினையுடைய, காரியொடு – காரி என்ற வள்ளலொடு, மலைந்த – போரிட்ட, ஓரிக் குதிரை – பிடரிமயிரினையுடைய குதிரை,
என ஆங்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்  [111-112]

கருத்துரை
என்று பிறருக்குக் கொடுக்கும் தன்மையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட ஏழு வள்ளல்களும், தமக்கு எதிராக எழுகின்ற போரினை வென்ற கணைய மரத்தை ஒத்த தோளமைந்தவர்கள்.
சொற்பொருள் விளக்கம்
என ஆங்கு – என அக்காலத்து (சிறப்பாகச் சொல்லப்பட்ட) எழுசமம் – எதிராக எழுகின்ற போர், கடந்த – வென்ற, எழு – கணைய மரம், கடந்த – வென்ற, எழு – கணை மரம், உறழ் – ஏத்த, திணி தோள் – திண்ணிய தோள்.
வல்வில் ஓரி
புறநானூறு – வண்பரணர் 152, 153,
கழைதின் யானையார் 204

ஆய்
கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.பெறுவதற்கு அரிய சிறந்த மணியையும், ஆடையையும் இவன் பெற்றிருந்தான். சிவபெருமான் மீது கொண்டிருந்த பேரன்பால் அவற்றை இறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இவன், 'ஆர்வ நன்மொழி ஆய்' என்று அழைக்கப்படுகிறான். அள்ளிக் கொடுத்து அயராதவன் அய்கண்டபிரான் வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான். அவன் காலத்தில் ஆய்குடி என்ற ஊர் சிறந்திருந்தது.
      “தென்திசை ஆஅய் குடியின் றாயின்
      பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே”
என்று மோசியார் அதன் பெருமையைப் புனைந் துரைத்தார். இவ்வூர் இன்றும் பொதியமலைச் சாரலில் உள்ளது
ஆய் அரண்டின் பற்றிய பாடிய பாடல்கள்.
புறநானூறு – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375
துறையூர் ஓடை கிழார் 136 
குட்டுவன் கீரனார் 240 
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241

நிழல்திகழ்   
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்    [95-99]

கருத்துரை
ஒளிவீசும் நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம் தனக்குக் கொடுத்த ஆடையினை, ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள இறைவனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தவன். வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த வலிமை மிக்க தோளினை உடையவனும், அன்பான மொழிகளைப் பேசியவனுமாகிய ஆய் அண்டிரனும்,

சொற்பொருள் விளக்கம்
நிழல் – ஒளி, திகழ் – விளங்கும், நீல நாகம் – நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம், நல்கிய – கொடுத்த, கலிங்கம் – ஆடை, ஆல் அமர் செல்வற்கு – ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள சிவனுக்கு, அமர்ந்தனன் – மகிழ்ச்சியுடன், கொடுத்த – வழங்கிய, சாவம் – வலி, தாங்கிய – ஏந்திய, சாந்து பலர் – சந்தனம் பூசி உலர்ந்த, திணிதோள் – திண்ணிய தோள், ஆர்வ நன்மொழி ஆயும் – அன்பான நல்ல மொழி பேசிய ஆய் அண்டிரனும்,

அதியமான்
அதிகன்
மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி      
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும்   [99-103]

கருத்துரை
மேகம் தங்கும் மலையில் மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரலில் அழகிய நெல்லி மரத்தில் அமிழ்தாக விளைந்த இனிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்தவன். பகைவரை அழிப்பதற்கு உறுதியோடு எழுந்த சினத்தீயும், ஒளி மிக்க நெடிய வேலும் ஆரவாரமிக்க கடல் போன்ற படையும் கொண்டவனுமாகிய அதிகனும்,

சொற்பொருள் விளக்கம் :
மால் – மேகம், வரை – மலை, கமழ்பூஞ்சாரல் – மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரல், கவினிய – அழகிய, நெல்லி – நெல்லி மரத்தில், அமிழ்து விளை – அமிழ்தாக விளைந்த, தீம்கனி – இனிய கனி, ஔவைக்கு – ஔவைப்பிராட்டிக்கு, ஈந்த – வழங்கிய, உரவுச்சினம் – உறுதியோடு எழுந்த சினம், கனலும் – சினத்தீயும், ஒளி திகழ் – ஒளிமிக்க, நெடுவேல் – நெடிய வேலும், அரவக்கடல்தானை அதிகனும் – ஆரவாரம் மிக்க கடல் போன்ற படையினையுடைய அதிகனும்,

அதியமான்
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. இக் கல்வெட்டு அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிடுகிறது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்..

அதியமான் நெடுமிடல்
சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர்.

இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் இறந்தது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. இக் கல்வெட்டு அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிடுகிறது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.

அதியமான் நெடுமான் அஞ்சி
தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.

அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.

மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.

ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு தென்னார்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூரிலிருந்து பதினாறு கல் தொலைவில் ஜம்பை என்ற ஊர் உள்ளது. இவ்வூரை திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம். இவ்வூர் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. சுற்றிலும் பலகுன்றுகள் உள்ளமையால் இது பார்ப்பதற்கு இனிமையான சூழ்நிலையில் உள்ளது. பண்டைய கல்வெட்டுகள் இவ்வூர் "வாணகோப்பாடி நாட்டில்" இருந்தது எனக் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது. ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி   இக்கல்வெட்டின் சிறப்புதான் என்ன? அதில் உள்ள இரண்டு சொல் தொடர்கள் "ஸதியபுதோ" என்பதும் "அதியந் நெடுமாந் அஞ்சி" என்பதே ஆகும்.

தமிழக வரலாற்றுக்கு மட்டும் இக்கல்வெட்டு அரும்செய்திகளை அளித்துள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்திய வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை அளித்துள்ளது இக்கல்வெட்டு. அதியனை "ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி" என்று அழைக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் தனது கல்வெட்டுகளில் சோழர், பாண்டியர், கேரளபுத்ரர், ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை. அங்கெல்லாம் பெளத்த தருமம் திகழ அவன் வகை செய்தான். அசோகன் குறிக்கும் ஸத்யபுத்ரர் யார் என்று இது வரை தெளிவாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் வாய் மொழிக் கோசர் என்பவராய் இருத்தல் கூடும் எனச் சிலர் கூறினர். காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாயிருக்கக் கூடும் என்று சிலர் கருதினார். மகாராஷ்டிரத்தில் ஸத்புத்ரர் என்போர் உண்டு. அவர்களாயிருக்கக் கூடும் என்போரும் உண்டு. ஸத்யமங்கலம் இவர் பெயரால் வந்தது என்றனர் சிலர். ஸதியபுதோ என்பவர் அதியமான்களாக இருக்கக்கூடும் என்று ஊகித்தவர்களும் உண்டு. இப்பொழுது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் ஸத்யபுத்ரர்கள் அதியமான்கள் தாம் எனத் திட்டவட்டமாக தெளிவாக்கிவிட்டது. அதியனை பொய்யா எழினி (சத்யபுத்ரர்) எனப்புறம் கூறும். எவ்வளவு சிறப்பான கல்வெட்டுப் பாருங்கள்! ஓரே வரியுள்ள இக் கல்வெட்டுத்தான் எவ்வளவு செய்திகளை வரலாற்றுக்கு அள்ளி அள்ளி வீசுகிறது.  அவனைப் பாடிய ஔவை, பரணர், கபிலர், மாமூலனார், நத்தத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்தனார் போன்ற ஈடிலாப் புகழ் பெற்ற புலவர்கள் இக்கல்வெட்டு எழுதிய போது வாழ்ந்தவர்கள், கண்முன் நிற்பர். ஓரி, காரி, குமணன், பேகன், போன்ற வள்ளல்களும், கரிகால் பெருவளத்தான், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, எனும் சோழ மன்னர்களும் செல்வக்கடுங்கோ, சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற சேரப் பேரரசர்களும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரும் வாழ்ந்த காலத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.

தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்க பாடல் கூறிற்று என்று பார்த்தோம். ஔவையும், பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைப் பாடினார்கள் என்றால் என்ன சிறப்பு! அந்த திருக்கோயிலூருக்கு மிக அருகிலேயே இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றால் அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்தி கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவல்லவா! அவன் திருக்கோயிலூரை எறிந்ததும் உண்மை, ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று என்ன வேண்டும். அதியன் சிவனடியை வணங்கிய போதும், அவன் எவ்வாறு எல்லாச் சமயங்களையும் போற்றியிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. அது மட்டும் தானா கல்வெட்டு "அஞ்சி ஈத்த பாளி" என்கிறது ஈதல் கொடுத்தல் என்னும் பொருளில் ஈத்த என்ற சொல் அப்படியே சங்கப் பாடலில் அதுவும் அதியமானைப் பற்றிய பாடலிலேயே பயன்பட்டுள்ளது. "ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே" என்று கூறும் ஒளவையின் பாடல்.

அதியமான் நெடுமான் அஞ்சி” கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் “அதியமான் பொகுட்டெழினி”. அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர். தகடூர் என்பது இன்றைய தருமபுரியை குறிக்கிறது. தருமம் செய்வது கடமை என கொண்ட அதியமானின் ஊர் தருமபுரி என அழைக்கலாயிற்று. கரும்பு பயிரிடுதலை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் அளித்தவர் இவரே. அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர்தான் அவ்வைக்கு கனி கொடுத்தவர். இவருடைய வழித்தோன்றல்கள் அனைவருமே அதியமான் என பெயர் கொண்டவர்கள்தாம். தொண்டைமான் போல. சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று

அதியமான் நெடுமானஞ்சி – புறநானூறு ஔவையார் 87 – 95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390 பெருஞ்சித்திரனார் 208

அதியமான் பொகுட்டெழினி
சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு குறுநில மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.

அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை

No comments:

Post a Comment