INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, June 12, 2021

தலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள்

 

தலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள்

பட்டப்பெயர் சுமையாக தெரிந்தல் சுமந்து பாருங்கள் அதன் வலிமையும் செயல் திறனும் உங்களை வளமிகு உச்சத்திற்கு சுமை இன்றி உயர்திவிடும்.

தலையாட்டும் வர்க்கமாக இருக்காதீர்கள். தலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள்

வரலாறு என்பது மனித இனம் வளர்ந்த வகைகளையும், அவற்றின் கலை, பண்பாடு, நாகரிகம் பற்றிய செய்திகளையும் தொகுத்து இனிவரும் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு உதவும் வகையில் அளிக்கும் செயற்பாடாகும். 

குலமின்றி இனமில்லை, இனவுணர்வின்றி பண்பாட்டு வளர்ச்சிக்கு வழியே இல்லை. உலகில் வாழும் 700 கோடி மக்களில் நமக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை தேடித்தருவது தான் குலத்தின் பெருமை. கடலில் கலக்கும் ஒவ்வொரு நீர்துளிக்கும் தனித்துவம் உண்டு. மானுட சமுத்திரத்தில் நாம் அடையாளம் இழந்து விடாமல் நமக்குகென்று தனியாக ஒரு முகத்தையும், முகவரியையும் தருவதுதான் எமது இனமும் குலமும். ஒவ்வொரு பறவைக்கும் தன் கூடே தனியழகு என்ற உண்மையை நாம் எப்போது உணரப்போகிறோம்?

மனுகண்ட சோழனும், அறம் கண்ட சிபியும், நிறைகண்ட செம்பியனும், காவிரி கரைபடைத்த கரிகாலனும், வானுயர் கோயில் தந்த ராசராசனும் வழி வந்த இனமே கள்ளர் இனம். 

வீரம் செறிந்த நெஞ்சினர், வாளெடுத்து களம் கண்ட மறவர், வேலெடுத்த குலம் என்ற நினைவுகளுடன் நம் இளைஞர்கள் சமுதாய கடமையாற்ற வீறு கொண்டெழ வேண்டுகிறோம்.

பழமையும் பெருமையும் வாய்ந்த நம் இனத்தையும் அதன் மரபுகள் மற்றும் மாண்புகள் பற்றியும் நம் வேர்களை எப்படி இந்த தலைமுறை தேடிப்போய் தெரிந்து கொள்ளப் போகிறது? யார் இதை அடையாளம் காட்டுவது?

சர்வதேச கள்ளர் பேரவை இதற்கான ஆய்வுகளை மேற் கொண்டுள்ளது. தங்களிடம் உள்ள கள்ளர் பற்றிய ஆவணங்களையும், குறிப்பேடுகளையும், சான்றுகளையும் தந்துதவுங்கள். பேருதவியாக இருக்கும்.

இந்த தலைமுறையில் வாழும் நாம், அடுத்த தலைமுறைக்கு எதனை விட்டு செல்கிறோம்? நம் காலச் சுவடுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்காமல் எண்ணங்களாகப் படையுங்கள். 

நம் வரலாற்று பெருமைகளை பதித்து செல்ல வேண்டாமா
தடம் புரண்ட நம் செல்வாக்கு, உறவுக்கு பெரும் குரல் கொடுத்த நம்முன்ணோர்கள், நாம் கற்றவை, தெரிந்தவை, அறிந்தவை யாவற்றையும் பதிவு செய்திடுவோம். தேடாமல் எதுவும் கிடைக்காது என்ற பேருண்மையை அறிந்திடுவோம்.

இன்று உலகெங்கும் காணமுடியாத தனிப்பட்ட ஒரு பண்பினைக் நம் இனத்தில் மட்டும் காண்கிறோம்கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் நாம் கொண்ட பட்டங்கள்நாகரிகம்பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மாறாநிலையில் வைத்துக் காத்துள்ள உலகின் ஒரே இனம் கள்ளரினமேஆயினும் சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் முற்காலக் கள்ளர்களுக்கும் இக்கால கள்ளர்களுக்கும் உள்ள உயர்வு தாழ்வின் அளவுகள் மனச்சோர்வழிக்கும் அளவிலேயே உள்ளது

இன்று கள்ளர் இனம் ஆட்சியுரிமை இழந்து ஓர் ஆளப்படும் இனம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆட்சிக்குடிகளின் மரபுகள் கால்வழித் தடமற்று அழிந்துவிட்டன. குருமார், கணிகள், அமைச்சர், படைத்துறைப் பணியாளர், மருத்துவர் ஆகியோர் அடங்கிய ஐம்பெரும் குழுவினர் கூடி மன்னுரிமை ஆட்சியாளருக்கு அறிவுரை வழங்கி ஆட்சி நடத்திய காலம் இன்று இல்லை. ஒரு தேசிய இனம் என்ற முறையில் கள்ளர்குல உயிர்த்துடிப்பு ஆறி அடங்கிவருகிறது என்பது கூட இன்றைய முழு அவலநிலையைச் சித்திரித்து விடவில்லை. கலைகள், தொழில்கள் மடிந்து விட்டன.பழந்தெய்வங்கள் கூட உயிர்ப்பிழந்து போயின. இந்திரனும்,பலராமனும் இன்று வணங்கப்படவிலை. மாயோன் வணக்கம் இன்று இராமன்,கிருஷ்ணன் வணக்கம் ஆகியுள்ளது.

தலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும் என்று ஒரு சொலவடை சொல்லு வார்கள். 
தலையாட்டும் வர்க்கமாக இருக்காதீர்கள். 
தலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள். 
நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடன் இருக்கும் போது எந்த நிகழ்வாலும் நம்மை சீர்குழைக்க முடியாது. நம் பாதையில் இடர் நீக்கி பயணிப்போம். நாம்பயணிக்க வேண்டியது நெடுந்தூரம். தற்பொழுது ஒரு முட்டுச் சந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் வெகு விரைவில் நெடுஞ்சாலைக்கு வந்தாகவேண்டும் என்ற நோக்கில் நம் பயணம் அமைய வேண்டும். மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது. 
தளர்ச்சியும், வளர்ச்சியும் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதனை உனர்ந்துகொள்வோம்

கள்ளர் குல கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை என்பன தொப்புள் கொடி உறவின் உணர்ச்சி மிக்க ஓர் உன்னதமான வரலாறு. புதுக்கோணத்தில் புதையலாய் குலமணம் மாறாமல் தொலைந்து போன மனிதாபிமானத்தைத் தோண்டியெடுக்கும் ஓர் கலாச்சாரப் பதிவாக அமைய வேண்டும். இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டிய ஒரு பாசப்போராட்டம். மூன்றாம்  தலைமுறைக்கு முதல்தலைமுறை பற்றிய பாசத்தை சொல்லும் ஒரு பதிவாக வேண்டும்

கள்ளர் குல வரலாற்று செய்திகளை ஆய்ந்தறிந்து தொகுத்து பாதுகாத்திடல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். 

கள்ளர் இனம் பற்றிய இத்தகைய வரலாற்று விவரங்கள், பழைய ஆவணங்கள், சாசனச்சன்றுகள் மற்றும் தாங்கள் அறிந்த, படித்த, செவிவழிச் செய்திகளை சர்வதேச கள்ளர் பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

குலப்பெருமையும் உணராமல், இன உணர்வும் இல்லாமல், ஒற்றுமையுமின்றி மாற்றானுக்கு கொடிபிடித்தே மாயும் நம் இளைஞர்களை காத்திட உதவுங்கள். 

வேரை மறந்து வேறாய் மாறும் போது நமது முகவரியின் மரணம் அருகில் என்பதும் உறுதியாகிவிடும். செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும் போது யாசித்து பெற வேண்டிய உரிமைகளை துறந்திடுவோம். 

நம் குல பண்பாட்டையும், நாகரிகத்தையும் விளைநிலங்களான மாணவர்களின் மனவயலில் விதைத்திட உதவுங்கள் என்று சர்வதேச கள்ளர் பேரவை தங்களை உரிமையுடன் விரும்பி கேட்டுக்கொள்கிறது.

பண்டைய கள்ளர் குல நாகரிகம்
மிகப்பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் நம் இன கள்ளர் குடி மக்களே! கள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது.

பண்டைய காலத்தைப் போல மனித வாழ்க்கை அமைதியாக, நிதானமாகஇக்காலத்தில் செல்லவில்லை. நாம் நமது சமூக வளர்ச்சியை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளா விட்டாலும் அவற்றைப் பற்றி மேல் வாரியான பொதுச் செய்திகளையாவது  அறிந்திருக்க வேண்டுவது நாகரிகம் படைத்த நம் மக்களின் கடமையாகும். 

நமது மூதாதையர் வளர்த்துப் போற்றிய நம்குல பெருமைகளை சிறிதளவாவது அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும். 

நாம் முன்னேற குலம் கூடி பங்காளிச் சண்டைகளை மறந்து சமுதாய முன்னோடிகளாக நாம் மாற வேண்டும். நம் குல கூட்டமைப்புகளில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,  சபலங்களுக்கு அடிபணியாமை,லட்சியத்தில் உ றுதிப்பாடு,  உணர்ச்சிவசப்படாமை  மற்றும் விவேகத்தோடு செயலாற்றும் திறமை போன்ற பண்புகளை நமது இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும். 

மரணமில்லா மரபினரின் பட்டங்கள்
பட்டப்பெயர் சுமையாக தெரிந்தல் சுமந்து பாருங்கள் அதன் வலிமையும் செயல் திறனும் உங்களை வளமிகு உச்சத்திற்கு சுமை இன்றி உயர்திவிடும். 

எம்முன்ணோர்கள் உழைப்பில் கரையாமல், களங்காமல், கலையாமல் அணிந்த மேலாடையே நம் குல பட்டங்கள். அலங்காரபிரியன் முதல் வைகைராயன் வரை ஈராயிரம் பிரளாயமே வியக்கும் பட்டங்கள். வில்லவன், வள்ளவன், ஈகைகொண்டான், நாடாள்வான் என நீளும் மரணமில்லா மரபினரின் பட்டங்கள்.

குருதி சிந்திய குலத்துக்கு பட்டங்கள்
மரித்தும் மரணமில்லா மறவர்களுக்கு பட்டங்கள்
மடிந்தும் மார்பினில் வேல் தாங்கிய மறவர்களுக்கு பட்டங்கள்
மண்கொண்ட மன்னர்களுக்கு பட்டங்கள்
மாராயம் கொண்ட கள்ளர்களுகோ பட்டமோ பட்டங்கள் பல்லாயிரம் பட்டங்கள்.

கள்ளர்குலம் அனிந்திருக்கும் மென்மையான மேல்மையான ஆடையே நம்குல பட்டங்கள். என்னற்ற தலைமுறைகளை கடந்தும், வளரும் தலைமுறைகள் கடக்க தலைநிமிர்ந்து நிற்பதுவும் எம்குல பட்டங்களே. தன்னுள் பொதிந்திருக்கும் பசுமையான நினைவலைகளையும், தன்னுல் படர்த்தியிருக்கும் பாசமிகு வலிகளின் சுமைகளையும் நம் இனறைய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்றபோது நம் உதிர கசிவுகளின் தடுமாற்றங்களை தவிர்க்கவும் முடியவிலை, தவிக்கிறோம், தத்தளிக்கிறோம், தடம்புரண்டு தடுமாறி திசைமாறி நிற்கிறோம்.

நம் குல ஆதியினர் அணிந்திருந்த மென்மையான மேல்மையான ஆடையினை ஆர்வமுடன் போர்த்திக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு ஆடையும் உங்ககளுக்காக மட்டுமே சங்கம் நிறுவிய சான்றோர்களால் சலித்தெடுத்து நெய்யப்பட்டவை என்பதை அறிந்திடுங்கள். தலைமுறை பல கடந்த வம்சங்ககளின் குருதியில் நனைந்த பன்னீர் மணம் கமழும் பகட்டான ஆடைகள். கனக்கற்ற தலைமுறைகள் சுவாசித்த பட்டங்கள், யாராலும் திருடவோ, மாசுபடுத்தவோ முடியாத அழிவில்லா நிரந்தர ஆடை. பிரபஞ்சம் போற்றிடும் ஆடைதனை அணிந்துவோம், பெருமைதனை சேர்த்திடுவோம்.

கனவுகளும் கற்பனைகளும் கரைந்தாலும், கரையாமல் நிற்பதுவும் நம்பட்டங்களே, களங்கம் இன்றி கால ஓட்டத்தில் கரையாமல் காலமெல்லாம் நம்மை காத்திடும் கவசமே எம்குல பட்டங்கள். உனர்வு பூர்வமாக அனுபவித்து அணிந்து பாருங்கள் இளமை உங்களுடன் என்றும் பயனித்து அகத்தின் உனர்வை பவுர்ணமியாக்கும் அலங்காரப்பிரியனாகி விடுவீர்கள். 

நம்மூதாதரையர் கடந்துவந்த தடங்களை வரலாற்றின் துனைகொண்டு பாருங்கள், படர்ந்த வெற்றிகள், தாண்டிய படிக்கற்கள், பணியாற்றிய துறைகள், காத்திருந்த காலமும் இல்லை, காத்திருக்க வைப்பதிலும் ஆர்வமில்லை என்று ஒவ்வொண்றும் சாதனைகளின் பன்னீர் துளிகள். நம்குல பட்டங்களுடன் வாழப்பழகுங்கள் நம்குல குறுத்துக்களை வாழ்த்தும் போதும் பட்டம் சொல்லி வாழ்த்துங்கள் வளமுடன் வாழ்வீர்கள

பட்டங்களில் அறிந்தவை, கற்றவை, பெற்றவை
பட்டம் கொண்ட கள்ளர் குல மறவனுக்கு மரணம் இல்லை
ஆறானால் என்ன! நூறானால் என்ன! இறப்பு என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடித்தான் வரப்போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.எதற்காக வாழ்ந்தாய் என்பதே முக்கியம். நீ எந்த உயர்ந்த குறிக்கோழுடன் வாழ்ந்தாய்? உன்னால் அதை அடைய முடிந்ததா? அடைந்திருந்தால்!

நீ நிச்சயமாக மரணமடைய மாட்டாய். 
உன்னைப் பற்றி ஒருவன் தினமும் எழுதிக்கொண்டிருப்பான், 
ஒருவன் பேசிக்கொண்டிருப்பான், 
ஒருவன் நினைத்துக்கொண்டிருப்பான்.
நீ அடைந்த உயர்ந்த சிந்தனை பொருந்திய குறிக்கோல் உலக வரலாற்றில் இடம் பிடித்திருக்கும். உனக்கு மரணம் என்பது இல்லை. நீ பெற்றிருக்கும் உன் குல பட்டமே இதற்கு சாட்சி. உன் மூதாதையர் கொண்ட லட்சியங்களும், கொள்கைகளும், வெற்றிகளும் உன் குருதியில் கலந்து உன்னை இயக்குகின்றது, உனக்கு மரணமில்லை.

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.
மானிடர்கள் அவரவர் செய்த அருஞ்செயல்களால் வரும் சிறப்பே பெருமைக் குறியதாகும். சங்ககாலம் தொட்டு மன்னர் முதல் பலதரப்பினரும் இத்தகைய சிறப்பினை பெற்று இருந்தனர். இதனை மாராயம் பெற்றவர்கள் என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது. இதன் மூலம் மாரயம் என்பது சான்றோர்களாலும், அரசர்களாலும் அளிக்கப்படும் ஒரு சிறப்புப் பெயர் என்றும், அதனைப்பற்றி உலகோரின் பாராட்டுரை நெடுமொழி என்றும் வழங்கப்பட்டது. வேந்தனால் சிறப்பெய்தியோர் வேண்டும் இடங்களில் தம் சிறப்பை தாமே எடுத்துக் கூறுல் அவர்களுக்கு நிலைத்த புகழைத்தந்தது. வேந்தனால் வழங்கப்பட்ட இப் பட்டம் (மாராயம்) தம் பெயருடன் சேர்த்துக் கூறிக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.

சங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச் சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர். செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாராகும். 

சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன.இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.

1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். 
      இராசகண்டியன்சிவபாதசேகரன்இரவி குலமாணிக்கம் போன்றவை.

2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம்  உறவினர்களுக்கும்                                      குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். 
    கடாரம்கொண்டான்சோழங்கன்மாரையன் போன்றவை.

3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய        பட்டங்கள். 
    காலிங்கராயன்சேதிராயன்மழவராயன்,நாடாள்வான் போன்றவை.

4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். 
    கற்றளிப்பிச்சன்தலைக்கோலிவாச்சிய மாராயன் போன்றவை.

கள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது.

இளைஞர்களின் முன்னேற்றம் தான் நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமாக வருங்காலத்தில் அமையும். நாம் முன்னேற ஒவ்வொரு இளைஞனும் இடர்பாடுகளை நீக்கி கல்வியிலும், தொழில் தகுதியிலும் முன்னேற வேண்டும். இளைய கள்ளர் குல சந்ததியினர் முன்னேற பாடுபடுவோம். வளர்வோம். 
சிந்திப்போம் நாம் தொடர்ந்து.

கள்ளர் பட்டங்கள் தொகுத்தவர்களின் பட்டியல்.
1. .முவெங்கடசாமி நாட்டார் 
    (கள்ளர் சரித்திரம் - 1923) 
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 348

2. சுவாமிநாத மாதவராயர் 
    (சூரிய குலக் கள்ளர் சரித்திரம் 1926) 
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 563

3. .சுப்ரமணியன் 
    ( கள்ளர் சமூகத்தினரின் பட்டப்பெயர்கள் 1988) 
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1135

4. தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார் 
    (தமிழ் நாடும் கள்ளரும் ) 
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 123

5. புலமை வெங்கடாசலம் 
    (கள்ளர் வரலாறு 1996) 
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1370

6. முனைவர் சிவபாதம் 
    (கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை 2009) 
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 412

7. ராஜபூஸணம் மன்னையார் 
    (கள்ளர் குல வரலாறு  2009)  
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1127  
           
8. ஜெயராம் கண்டியர் கிருபாகரன் 
    (வரலாற்றுப்பாதையில் பெருமைமிகு கள்ளர் இனம்   
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 2027

அன்மையில் அறிந்த சிந்தைமகிழ் சிறப்புச்செய்தி
சரளாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆதிமனிதன் போல் வாழ்கிறார்கள், பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்குகிறார்கள், விற்கிறார்கள். சிந்தை கவர்ந்த பெண்ணிண் கைபிடித்து மனைவியாக்க புலியின் தலையை கொய்து வரவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. கருங்காலி மரம் கொண்டு கடைந்து எடுத்தாற் போன்ற ஒரு தேகம், கருமை கலந்த நிறம், தொந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. குரைந்தது 4 அடியாகிலும் எம்பிக்குதிக்கிறார்கள். சாம்பியா, தன்சானியா, கென்யா மூன்றும் எம் நாடு எங்கின்றனர். மருத்துவர்களுக்கு இங்கு வேலையில்லை. எல்லா நோய்களுக்கும் கரும்புச்சாறு, மிளகு, சுக்கு கலந்து கொதிக்க வைத்த பாணம் தான் மருந்து. குடும்பங்களில் 90 வயதுக்கு குறையாமல் ஒருவராவது இருக்கிறார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஓடுவதும் நீண்ட நடைபயணமும் பொழுது போக்கு. சாதம் சமைக்கும்போது பட்டை நீக்கிய கரும்புத்துண்டுகளையும் சேர்த்து சமைக்கிறார்கள்.

பசும்பாலும், சோழத்தை பயிர்செய்து உணவாகவும் கொள்கிறார்கள். மண்ணும் மாட்டுச்சாணமும் கொண்டு கட்டப்பட்ட வட்ட வடிவமைப்பில் 3 மீட்டர் உயரமும்,15 மீட்டர் குறுக்கலவுகள் அமைந்த வீடுகள். வேறு பழங்குடி மக்கள் வைத்திருக்கும் பசுக்களையும் தங்களுடையது என்று உரிமையுடன் எடுத்துக் கொள்கிறார்கள். இதனை திருட்டு என்று யாரும் ஒப்புக்கொள்வதில்லை. பசுக்கள் எங்களுக்காக கடவுளால் படைக்கப்பட்டவை, எமது செல்வமும் இவையே என்றும் உறுதியுடன் கூறுகிறார்கள். உடனிருப்பவர்கள் இறந்து போனால் உடல்களை சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவாக்குகிறார்கள். யார் இவர்கள்? கென்யா நாட்டில் மசைமாறா என்ற பகுதியில் வாழும் கள்ளர்குல மறவர்கள் தான் இவர்கள். அதிகமாணோரின் பெயர்கள் செம்பி, செம்பிலி, (செம்பியண்) கங்கு, (கங்கர்) கண்டியா, (கண்டியர்)ஆய்,  (ஆய்ப்பிரியர்)  ஆவாளி (ஆவாளியார்), விடா, கலியா(கலியராயர்), கரும்பா, நண்டா,  மழவா  (மழவராயர்)  இராடா (இராடர்) கலிங்கா (காலிங்கராயர்) அதியா(அதியமான்) ஆளியா (ஆளியார்) என்று முடிவடைகின்றன.
நன்றி 
தன்சானியா டைம்ஸ்

என்றும் பாசமுடன்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன். 
சர்வதேச கள்ளர் பேரவை.  

No comments:

Post a Comment