INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Wednesday, July 18, 2012

கள்ளர்
பழங்கால நீண்ட நெடிய கள்ளர் குல வரலாற்றுச் செய்திகளை அரைகுறையாக குறிப்பிடும் நிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது.  இக்குறையை போக்கும் வண்ணம் வரலாற்றுச் செய்திகளுக்கு முக்கியத்துவமளித்து கல்வெட்டுச் செய்திகள், செப்புப் பட்டயச் செய்திகள், செங்கோல் ஆட்சிபுரிந்து சாதனை படைத்த மாமன்னர்களின் பெருமை மிகு வரலாறு, கோயில்களின் வரலாறு மற்றும் ஊர்பெயர்களின் வரலாறு போன்ற தொன்மை மிகு சான்றுகளை மையமாக வைத்து நெறியான கள்ளர் குல வரலாற்றை தொகுத்துள்ளோம்.

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்
மாகாணக்கள்ளர்
கிளைவழிக்கள்ளர்
தஞ்சைநாட்டுக்கள்ளர்
அம்புநாட்டுக்கள்ளர்
ஈசநாட்டுக்கள்ளர்
செங்களநாட்டுக்கள்ளர்
வளநாட்டுக்கள்ளர்
பிரம்புநாட்டுக்கள்ளர்
மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
நாலுநாட்டுக்கள்ளர்
ஐந்துநாட்டுக்கள்ளர்
ஏழுநாட்டுக்கள்ளர்
பாண்டிநாட்டுக்கள்ளர்
சேருவநாட்டுக்கள்ளர்
அம்பலநாட்டுக்கள்ளர்
புதுக்கோட்டைக்கள்ளர்
காந்தர்வகோட்டைக்கள்ளர்
பிரமலைக்கள்ளர்

பாரதத்தையும் கடல் கடந்த நாடுகளையும் கட்டியாண்ட கள்ளர் இனத்தின் வீர வரலாறு

யார் இந்த கள்ளர்குல மறவர்கள்?
சங்க இலக்கியத்துல் சங்கமித்து
கல்வியில் பண்பட்டு அறிவியலில் கரைந்து
குல குருதியில் வளர்ந்தவர்கள் கள்ளர்குல மறவர்கள்.
தங்கள் உதிரத்தையே வியர்வையாக்கி இராச்சியங்களை உருவாக்கி நாட்டுக்கு உழைத்தவர்கள். வரலாற்றால் ரசிக்கப்பட்டவர்கள். வாழ்க்கையை ரசித்தவர்கள் அல்ல.
உணவை மறந்து, உறக்கத்தை இழந்து இழப்பதற்கு ஏதுமின்றி இறந்தவர்கள், சிம்மாசனத்தை தலை நிமிர்ந்து பார்ததுமில்லை, சிம்மாசனங்களும் இவர்கள் இன்றி தலை நிமிர்ந்து நின்றதுமில்லை. இராச்சியங்களை உருவாக்கியவர்கள், உதிரப்பற்று வரி நீக்கம் பெற்றவர்கள். இருப்புகளால் பேசப்பட்டவர்களும் இல்லை, இழப்புகளால் இன்றும் அறியப்படுபவர்கள். அறம்கண்ட சிபியும், மனுகண்ட சோழனும், நெறிகண்ட செம்பியனும், காவிரிக்கு கரை வார்த்த கரிகாலனும், புவிதனில் பெருங்கோயில் படைத்த ராசராசனும் கள்ளர் குல மரபு வழி வந்தவர்களே.

வம்ச தோன்றலின் முடிவில்லா சுகமான நெடும் பயணம்
வரலாற்றுல் சிபி சக்கரவர்த்தியில் தொடங்கி
முசுகுந்தனில் விதையாகி
காந்தனில் பதிந்து
செம்பியனில் முளை விட்டு
மநுவில் வளர்ந்து
கரிகாலனில் உயர்ந்து
சென்னியில் திளைத்து
கோப்பெருஞ்சோழனில் படர்ந்து
கோச்செங்கணானில் அரும்பாகி
விசயாலயனில் மொட்டாகி
ஆதித்தனில் முகையாகி
பராந்தகனில் மலராகி
கண்டராதித்தனில் அலராகி
அரிஞ்சயனில் வீயாகி
உத்தமனில் செம்மலாகி
இராசராசனில் காயாகி
இராசேந்திரனில் கணியாகி
என்றும் நம் இதயத்தில் இணந்தது வளர்வதும் கள்ளர் இனமே!

கொற்றவர்கள் கற்றவர்களைப் போற்றிய கள்ளர் குல கோட்பாடுகள்
மகளாய் பிறந்து மணைவியாய் விளங்கி தாயாக உயர்ந்து, முடிவில் இறையாகிப் போற்றப்படுகிறவள் பெண்.
மகனை பெற்றளித்தல் என் கடமை - சங்க கால கள்ளர் குல தாய்
சான்றோனாக்குதல் என் கடமை - தந்தை
நன்னடை நல்கல் என் கடமை - வேந்தன்
போரில் களிறு எறிந்து பெயர்தல் என் கடமை - மைந்தன்.
இனத்தையும் குலத்தையும் பெருமைப்படுத்தல் என் கடமை - போர் மறவன்
பிறந்த வீட்டை காத்தல் என் கடமை - தலைவன்
புகுந்த வீட்டை ஒளியாக்கல் என் கடமை - தலைவி
நிழலளித்த பெற்றோரை காத்தல் என் கடமை - தலைமகன்
கல்வி அளித்த குருவை நினைவில் கொள்ளல் என் கடமை - சான்றோன்
மக்களை பெற்றுத்தந்த மனைவியை மகிழ்வித்தல் என் கடமை - கணவன்
குலம் தலைக்க வந்த மக்களை வளர்த்திடல் எம் கடமை - கள்ளர் குல மக்கள்

கள்ளர் குலம்.
உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்

கள்ளரினமொரு வரலாற்றுப் பாரம்பரிய மிக்க இனம். ஏராளமான வரலாற்று ஆதரங்களை கொண்ட இனம். உலகவரலாற்றில் கள்ளரினத்தை மிஞ்சும் அளவுக்கு ஆதரங்களை கொண்ட வேறு எந்த இனமும் இல்லை என்பதும் வரலாறு. இவ்வளவு ஆதரங்களை கொண்ட கள்ளரினத்தை கள்ளரின மக்களே அறியவில்லை என்பதும் அறிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்பது தான் என் வருத்தம். கள்ளர் வரலாறு, கள்ளர்களின் வரலாறு மட்டுமல்ல, தமிழ், தமிழர், தமிழகத்தின் வரலாறும் அடங்கியிருப்பதும் ஒரு வரலாறு.

தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும்,நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினரே கள்ளர் எனப்படுவர். தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் எனப்பட்டனர் என்கிறார்.

கள்ளர் என்ற சொல்லுக்கு கரியவன், கர்க்கடகம், குரங்கு, அரசன், நண்டு, முசு, யானை என்று பல்வேறு பொருள்கள் உண்டு. சங்ககால இலக்கியங்களில் கள்வர் என்ற சொல் காணப்படவில்லை. மேலும் கள்வன் என்னும் சொல்லுக்கு திவாரக நிகண்டு கரியோன் என்று மட்டுமே பொருள் தருகிறது.பிங்கலந்தையும் இதையே கூறுகிறது. எனவே கள்வன்,கள்வர் என்னும் சொல் கருமை நிறம் கொண்டவர்களையே தொன்று தொட்டு குறிப்பிட்டு வருவது புலப்படுகிறது. கள்ளர் குலம் என்று அறியும் போது அரசன், மன்னவன் என்று பொருள் அடக்கம் பெரும். இதனை நச்சினார்க்கினியரின் சீவகசிந்தாமணியின் உரைநடை அரங்கேற்றுகிறது.

ஆரியர் தமிழரை கரியவர் என்று இருக்கு வேதத்தில் குறித்துள்ளனர். இந்திரனுக்கு மட்டுமே கரியவன் என்ற பெயர் உண்டு. மேலும் சோழர்களும் கருமை நிறம் கொண்டிருந்தமையால் மால் என்று அழைக்கப்பட்டனர். இதனால் தான் இந்திர குலத்தவர் கள்ளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
சிவபெருமான் - திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்

திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்

திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)

சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் 9 செந்தலைக் கல்வெட்டு

திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
“வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.

“ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

“ கள்வர் பெருமகன் - தென்னன்”
“ கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்

சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்

“.மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்”(சுந்தரர் திருத்தொண்டர்தொகை)

“கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)

“ கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
என சுந்தரர்,சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்

“ களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்

“ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)

“ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து” (அகம்.)

“ பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம்.359)

“ நெடுமொழிப் புல்லி” (அகம்.)

புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)

“ கடுமான் புல்லிய காடிறந்தோரே”(நற்றிணை)
என மாமூலனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப்பற்றியும்

“ புல்லி வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”
“ மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்”
என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

கள்ளர்குலமும் அரசமரபுகளும்.
தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.

சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில் உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும் மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும் சோழர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர், சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் முதலிய கள்ளர் குலத்தவர் நாடாண்டுள்ளனர் என்பதும் வரலாறு.

சக்கரவர்த்திகளும், மாமனர்களும், மன்னர்களும் தம் கீழ்ப்பணியாற்றிய அதிகாரிகள், வீரர்கள், சான்றோர்களுக்கு அவர்களின் அருஞ்செயல்களைப் பாராட்டி அவர்களுக்கு உயரிய பட்டங்களை வழங்குவது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

முதலாம் பராந்தகனுக்கு உதவியாக இருந்த கள்ளர் குல கங்க மன்னன் இரண்டாம் பிரிதிவிபதிக்கு அவன் வாணர்களின் தலைவன் என்பதால் வாணாதிராயன் என்னும் வீர விருது வழங்கப்பட்டது. இவ்வாரே தென்னவன் மூவேந்த வேளான், இராசராசக் காடவராயன், ஆளப்பிறந்தான் முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. சோழமண்டலத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் ஈழத்தரையர், ஈழமுண்டார், கொல்லமுண்டார், கொல்லத்தரையர், கொங்கரையர், கங்கநாட்டார், சோழகங்கநாட்டார், காலிங்கராயர், கடாரத்தேவர், கடாரத்தலைவர், கடாரம்தாங்கியார், மண்ணையார், சிங்களாந்தான், சிங்களராயர், சிங்களேந்தியார், கேளராயர், கேரளாந்தகன் போன்ற பட்டங்கள் போர் வெற்றிகளை குறித்து வழங்கப்பட்டதாக தெரிகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலூர் என்ற இன்றைய திருக்கோவலூர் மலையமான் என்னும் கள்ளர் குல மன்னர்களால் ஆளப்பட்டது. திருமுடிக்காரி இக்குடியில் பிறந்த வள்ளலாவான். கோவலூரை ஆண்டவர்கள் கோவலராயன் என்றுமழைக்கப்பட்டனர். இக்குடியினரின் மருவிய பட்டப்பெயரே இன்று கோபலர் என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய தர்மபுரி சங்ககாலத்தில் தகடூராக இருந்தது. தடூரை ஆண்டவர்கள் அதியமான் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். அதியமான் என்னும்பட்டம் மருவி அதியமார் என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.

வடக்கே பாலாற்றுக்கரையில் ஆண்டோர் வாணாதிராயர் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். இங்கு வாணாதிராயன் பட்டினம் என்றோர் ஊரும் உண்டு. இவர்கள் பாலியார், பால்நாட்டார், பாலாண்டார், மாவாலியார் என்னும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

இது போன்று திருமுனைப்பாடியை ஆண்டவர்கள் முனையர் என்ற பட்டமும், சேதிநாட்டை ஆண்டவர்கள் சேதிராயர் என்ற பட்டமும், மழவ நாட்டைகொண்டவர்கள் மழவராயர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் என்பது தெளிவாகிறது.

புதுக்கோட்டை பகுதியிலுள்ள கொடும்பாளூரை ஆண்டோர் கள்ளர்குல இருக்கு வேளீர்களாவர். இவர்கள் சோழர்களுக்கு பெண் கொடுக்கும் உரிமை கொண்டோராவர். கொடும்பாளூரை கல்வெட்டுக்கள் கொடும்பை எனக் குறிக்கின்றன. கொடும்பைராயர் என்ற பட்டம் இன்று மருவி கெடும்புராயர், கொடும்பாளூர்ராயர், கொடும்பூராரென்றும் வழங்கி வருகின்றன. மேலும் இருங்கோ வேளார் என்னும் பெயரும் இன்று இருங்களார் என்ற பட்டமாக மருவி விட்டது. அண்ணவாயில், பூவனைக்குடி முதலிய இடங்களும் கொடும்பாளூரைச் சேர்ந்தபகுதியாகும், இப் பகுதி கள்ளர் குலத்தவர்களுக்கு அண்ணவாசல்ராயர் என்ற பட்டமும், பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது. பூவனைக்குடியில் பூதிகளறி அமரூன்றி என்னும் முத்தரைய மன்னன் இங்கு புட்பவனேசுரருக்கு ஒரு கோயிலைக் குடைந்திருக்கிறான். கொடும்பாளூர் குறுநில மன்னன் பராந்தகன் சிறிய வேளர் சுந்தரசோழன் காலத்தில் ஈலத்தை வென்று அப்போரிலேயே உயிநீத்த பெருமையும் இருக்கு வேளீர் பரம்பரையையே சாரும்.

"வில்லவர்"
உழு தொழில் தோன்றுமுன்னரே பல்வேறு இனக் குழுக்கள் இருந்தன. பெருங்கற்காலத்தில் அதாவது சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலத்தில் மனிதன் வேட்டையாடுவதற்கு வில் அம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினான்.அப்போது உழவுத் தொழிலே இல்லை.அப்போது அறியப்பட்டவர்கள் வேட்டையாடல் தொழில் செய்தோரே.

தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த குடியினராக (கள்ளர்)  "வில்லவர்" அல்லது வில்லாளிகள் என்ற குடியினர் மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வேட்டையாடல் வாழ்க்கை நடத்தினார்கள். இக் குடியினருக்குத் தலைவராக யார் விளங்கமுடியும்?அவர் குடியில் ஒருவர் தான் தலைவராக இருந்திருப்பார்.இவர்கள் தான் அரச குலத்தின் முன்னோடிகளாக இருக்கமுடியும்.

பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடியாகக் காணப்பெறும் குறியீடுகளில் வில்லின் உருவமும் பொறிக்கப் பெற்றிருக்கிறது. இக்குறியீடுகள் பண்டையத் தமிழ் எழுத்தின் முந்தைய வடிவம் என்று வரலாற்றறிஞர்களால் கூறப்படுகிறது.(B.B.Lal, "From the megalithic to the Harappa, tracing back
the graffiti on the pottery" Ancient India, Number 16, (1960), Bulletin of the Archaeological survey of India, Plate 23)

கி.மு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சில சதுர செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன.மன்னர் உருவம் பொறிக்கப்படாத அக்காசுகளில் முன்புறம் யானை உருவமும் பின்புறம் வில் அம்பு உருவமும் காணப்பெறுகிறது.(தமிழர்காசு இயல் - நடன.காசிநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு,முதல் பதிப்பு(1995)

முத்திரை குத்தப் பெற்ற காசுகள் ஜனபதக் குழுக்களால் வெளியிடப் பெற்றவை எனக் கொள்ளப்படுகிறது (நாணயங்கள் - டாக்டர் பரமேஸ்வரி லால்குப்தா, நேஷனல் புக் ட்ரஸ்ட்,புது டில்லி, 1975, பக்கம் 13- 14)

அதை போலவே மேற்குறிப்பிட்ட காசுகள் வில்லைக் குலக் குறியீடாகக் கொண்ட குடியினரால் வெளியிடப்பெற்றவை எனக் கூறலாம்.

அரசர்கள் போர்க்குடியினருக்கு விளை நிலங்களை எதற்காக வழங்கினார்கள்? மழவர்,மறவர் வழித் தோன்றல்கள் தங்கள் வீரத்திற்குப் பரிசாகப் பெற்ற நிலங்களே அவை. மழவர்,கள்ளர்,மறவர் போன்றோர் சோழர்,பாண்டியர் படைகளில் பிரதான இடம் வகித்ததால் தான் பிற நாட்டரசர்களை வெல்லுமளவிற்கு வேந்தர்கள் வலிமையுடன் இருந்தனர். கங்கை கொண்டான்,கடாரம் கொண்டான் என தமது பெருமைகளை தம்பட்டம் அடித்துகொள்ள முடிந்தது எதனால்? போர்க்குடியினரான, மறவர்,மழவர் வழித்தோன்றல்களான வீரர்களால்தான். அதனால்தான் போர்க்குடியினர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றனர். 

வேளார் தலைவர்கள்
வேளார் என்பதும், வேளாளர் என்பதும் வெவ்வேறு இனத்தவரின் குடிப்பெயர்கள்.
வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர்.
வேளாளர் உழுது உண்பவர்- உழவர்.

உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று பொருள். "வேளாண் வாயில் வெப்பக்கூறி"

உழவுத் தொழில் அறிமுகமான போது தான் தலைவர்கள் தோன்றினர் என்பது சரியான வாதமன்று. தலைமைப் பொறுப்பிற்கும், உழவுத் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் கூறப்போனால் உழவுத் தொழில் தோன்று முன்னரே தலைவர்கள் தோன்றிவிட்டனர்.   தலைவர்களானவர் உண்மையில் நாகரிகமற்ற போர்க்குடிகளே. இவர்கள் உழவு செய்வதில்லை.உழவுத் தொழில் மேற்கொண்டோரை ஊக்கப்படுத்தினர். ஆயுதங்களை மட்டும் தொடர்ந்து உபயோகித்தோர் வலிமை பொருந்தியவரா? அல்லது அதனை விடுத்து ஏர் தொழில் செய்தோர் வலிமையானவர்களா?ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்தி வில்,வேல் கொண்டு போரிட்டவர்களே தலைவர்கள். எந்தத் தலைவனும் ஏர் பூட்டி உழுவதில்லை.

திணை நிலங்கள் பகுப்பிற்கு முன்பே(உழும் தொழில் அறிமுகமாதற்கு முன்னரே) தலைவர்கள் இருந்தனர்.அப்படியிருக்கும்போது உழவுத் தொழில் செய்தவர்தான் தலைவர்கள் என்று ஒருக்காலும் கூற முடியாது.

தங்கள் பகுதியைக் காப்பதற்கும், படையைப் பெருக்குவதற்கும் உழவர்களை அரசர்கள் கூடுதலான வீரர்களாகச் சேர்த்துக்கொண்டனர்.உழும் தொழில் செய்தாலும் இவர்கள் போரின்போது தமக்கு உதவ வேண்டும் என்பதால் இவ்வுழவர்களுக்குப் போர் பயிற்சியளித்தனர் அரசர்கள்.இத்தகைய உழவர்களைப் படைவீரராகப் பெற்றிருந்ததால்தான் சேரர்,சோழர் போன்றோர் தம்மை மள்ளர் ( உழவர்) தலைவராகக் கூறிக்கொண்டனர்.   இப்போது மருத நிலப் பகுதிகளாக அறியப்படும் பகுதிகளில் கள்ளர் இனத்தோர் மிகுதியாக உள்ளது ஏன்? இவர்கள் அன்னியர்(தெலுங்கர்) படையெடுப்பிற்குப் பின் குடியேறியவர்கள் என்று கருதினால் அது அறியாமையே. ஏனெனில் கல்வெட்டுக்கள்  இம் மக்கள் சோழர் காலத்தில் இப்பகுதிகளில் இருந்தமையை தெளிவாக நிருபிக்கின்றன. மழவர்,கள்ளர்,மறவர் போன்றோர் எப்போதும் போருக்குத்தான்.  இவரே போர்க்குடிகள். இவர்கள் அரசராகாமல் வேறு யாரால் முடியும்?

ஆதாரம்.
01.சங்ககால வேளிர்கள்.  க.சண்முகசுந்தரம்
02.தொல்காப்பியம்..
03. தொல்காப்பியம், பொருளதிகார உரை, இளம்பூரணர்.
04. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர்.
05. சேந்தன் திவாகரம்
06. சூளாமணி நிகண்டு
07. பிங்கல நிகண்டு
08. வடமலை நிகண்டு
09. பாரதிதீபம்
10. சதுரகராதி
11. கதிரைவேற்பிள்ளை அகராதி.

இந்த நூல்களின் நம்பகத்தன்மை வினாக்குரியது என்றால் தமிழ் வரலாறே வினாக்குரியது என்று பொருள் என்பதை தமிழ்கூறு நல்லுலகம் அறியும்.

புதுக்கோட்டைமன்னர் தொண்டமான்
புதுக்கோட்டைமன்னர் தொண்டமான் அவர்கள் கள்ளர் என்பதை அனைவரும் அறிவர். இவருடைய முன்னோர்கள் வேங்கடமலைப் பகுதியை ஆண்ட தொண்டைமான் கோட்டையிலிருந்து வந்தவர்கள் என்று இராஜ அனுராக மாலை கூறுகின்றது. பண்டை காலத்தில் விழுச்சீர் வேங்கட மலையும் சேர்ந்ததே தொண்டை மண்டலம் எனப்பட்டது. முற்காலத்தில் திருப்பதி மலையில் வணங்கப்பட்டவர் சிவபெருமானே என்பதை சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருப்பதி மலை உட்பட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் கள்ளர்களே. இதனை கள்ளில் ஆத்திரையனார், மாமூலனார், தாயங்கண்ணனார் போன்ற தகைசான்ற பெரும் புலவர் பெருமக்கள் பன்னிரண்டு அகநானூறு பாடல்களில் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டதால் தொண்டைமான் என்ற பட்டம் பெற்றனர். தொண்டைமான், தொண்டையர், தொண்டைமான் கிளையார், தொண்டைப்பிரியர், தொண்டார், பல்லவர், பல்லவராயர், பல்லவாண்டார், பல்லவநாடார், பல்லவதரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இவர்களின் வழித் தோன்றல்களே ஆவர்.

இன்றைய சூழலில் கள்ளர் என்பது கள்ளர், கள்வர் இரண்டும் கலந்து திருடன் என்று ஒரு பொருள் கொள்ள நினைப்பது தவறாகும். பொதுவாக நாற்றம் என்ற சொல் இன்றைய சூழலில் துர்நாற்றம், விரும்பத்தகாத ஒரு மணம் என்றே அறியப்படுகிறது. ஆனால் நாற்றம் என்றால் நறுமணத்தை மட்டுமே குறிக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர்ஸ்பென்சர்வெல்மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார். எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும் என்றும் கூறுகிறார்.

உலக வரலாற்றில் தொடர்ந்து 433 ஆண்டுகள் (கி.பி 846 முதல் கி.பி. 1279) ஆண்ட இனமும் கள்ளரினமே. கள்ளரின நாகரீகம் மிகவும் பழைமையானது என்று வரலாறு ஏற்றுக்கொள்கிறது.   அரசு உருவாக்கத்தில் தன் நாட்டு எல்லையை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும், விரிவுற்றதை பாதுகாக்கவும் போர்கள் எழுந்தன. போரில் பங்கேற்பதும், மார்பில் புண்பட்டு மடிவதும் மாட்சிமைக்குரிய வாழ்வாக மக்கள் கருதினர். இக் காலத்தை வீரநிலைக்காலம் என்பர். இத்தகு வீரநிலைக் கால வாழ்வில் பங்கேற்றுத் தன்னலம் பாராது தாய்மண் காத்த மறவர்களுக்கு மன்னர்கள் வழங்கிய வீரநிலைப் பட்டங்கள் ஏராளம்.

தாய்மண் காக்க தன் உதிரத்தை கொட்டிய கள்ளர் குல மறவர்க்கு உதிரப்பற்று என்ற வரி நீக்கிய நிலக்கொடையை முதலாம் இராசராச சோழன் வழங்கிப் போற்றியதைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு கண்முன்னே காட்சிப்படுத்துகிறது.

சோழ மன்னர்களின் மண உறவுகள் 

1. உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி கி.பி 2ம் நூற்றாண்டில் அரசுபுரிந்தவன்.கரிகால் சோழனின் தந்தையுமாவான். இவன் மனைவி கள்ளரின அழுந்தூர் வேளிர் குல இளவரசியாவாள்.

2. கரிகால் சோழனின் மனைவி கள்ளரின திருநாங்கூர் வேளிர் குல இளவரசியாவாள்.

3. கரிகால் சோழனின் மகள் நற்சேனையை மணந்தவன் சேரன் இமயவரம்பன். இவர்களின் மகன்கள் மா மன்னன் சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகார இளங்கோ அடிகளும் ஆவர். வீரமும் புலமையும் ஒரே வயிற்றில் தோன்றிய நல் முத்துக்கள்
.
4. விசயாலய சோழன் (கி.பி. 846 - 881) ஆவூருக்கு அருகில் உள்ள ஊத்துக்காடு என்னும் ஊரில் கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (கள்ளரின மன்னன் இராசராச சோழன். புலமை வேங்கடாசலம் பக்கம் 6)

5. விசயாலய சோழனின் மகன் முதல் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் இளங்கோப்பிச்சி என்பவளையும், மற்றும் காடுபட்டிகள் வழி வந்த காடுவெட்டியார் மகள் திரிபுவன மாதேவியையும் மணந்திருந்தான் (E.P.Ind.Vol.XXVI, பக்கம் 233, 234)

6. முதல் ஆதித்த சோழன் மகன் கன்னரதேவன் (கி.பி கள்ளரினத்தின் கொடும்புரார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பூதிமாதேவ அடிகள் என்பவளை மணந்திருந்தான் (S.I. Vol.VIII.Np 665)

7. முதல் பராந்தக சோழன் (கி.பி. 907 - 953) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (அன்பில் செப்பேடு E.P. Ind. Vol XV. No 5)

8. கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் செம்பியன் மாதேவி என்பவரை மணந்திருந்தான் (S.I.I. Vol. VIII. No.141)

9. அரிஞ்சய சோழன் (கி.பி. 956 - 957) கள்ளரினத்தின் வைதும்பராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த கல்யாணி என்பவளையும் கொடும்புரார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பூதி ஆதித்த பிடாரி என்பவளையும் மணந்திருந்தான் (The Cholas இரண்டாம் பதிப்பு பக்கம் 152)

10. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் (கி.பி.957 -970) கள்ளரினத்தின் சேதுராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான் (S.I.I. Vol.VII.No 863 மற்றும் பெரியபுராண ஆராய்ச்சி டாக்டர்.மா. இராசமாணிக்கனார் பக்கம் 74.)

11. உத்தம சோழன் (கி.பி. 957 - 970) கள்ளரினத்தின் மழபாடியார் (மழ வாடியார்) என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த மழபாடித் தென்னவன் மாதேவி என்பவளையும் கள்ளரினத்தின் இருங்களார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளையும், கள்ளரினத்தின் விழுப்பரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த கிழானடிகள் என்பவளையும் மணந்திருந்தான் (Ins. 494 of1925, Ins 298 of 1906)

12. மாமன்னன் முதலாம் இராசராச சோழன் (985 - 1014) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன் மாதேவி என்பவளையும் மற்றும் கொடும்பாளூர் வேளிர்குல இளவரசி வானதி என்னும் வானமாதேவியையும் மணந்திருந்தான் (பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி 1 பக்கம் 141)

13. இராசேந்திரசோழன் (கி.பி. 1012-1044) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன்மாதேவி என்பவளை மணந்திருந்தான்

14. முதல் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120) கள்ளரினத்தின் காடவராயர்
என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த காடவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான்
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 232 -233)

15. இரண்டாம் இராசராச சோழன் (கி.பி. 1146 - 1163) கள்ளரினத்தின் சேதிராயர்
என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த அவனி முழுதுடையாள் (உலகுடை முக்கோக் கிழானடிகள்) என்பவளை மணந்திருந்தான்
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 292)

16. மூன்றாம் இராசராச சோழன் (கி.பி. 1216 - 1256) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த புவனமுழுதுடையாள் என்பவளை மணந்திருந்தான்.
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 357)

17. மூன்றாம் இராசேந்திரசோழன் (கி.பி.1246 -1279) சோழகுல மாதேவி

கள்ளர் குல பட்டங்களும், சோழ மன்னர்களின் சிறப்புப் பட்டங்களும், ஒரு பார்வை.
அரசு உருவாக்கத்தில் தன் நாட்டு எல்லையை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும், விரிவுற்றதை பாதுகாக்கவும் போர்கள் எழுந்தன. போரில் பங்கேற்பதும், மார்பில் புண்பட்டு மடிவதும் மாட்சிமைக்குரிய வாழ்வாக மக்கள் கருதினர். இக் காலத்தை வீரநிலைக்காலம் என்பர். இத்தகு வீரநிலைக் கால வாழ்வில் பங்கேற்றுத் தன்னலம் பாராது தாய்மண் காத்த மறவர்களுக்கு மன்னர்கள் வழங்கிய வீரநிலைப் பட்டங்கள் ஏராளம்.

கண்டராதித்தசோழன், அரிஞ்சயசோழன், சுந்தரசோழன், உத்தமசோழன்,இராசராசசோழன், இராசேந்திரசோழன்,இரண்டாம் இராசேந்திரசோழன், வீரராசேந்திரசோழன், அதிராசேந்திரசோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் தேவர் என்னும் கள்ளர் பட்டங்களை பூண்டனர்.

முதலாம் இராசராசசோழன் இராசகண்டியன், உய்யக்கொண்டான், கேரளாந்தகன், சிங்களாந்தகன் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

முதலாம் இராசேந்திரசோழன் சீனத்தரையன், சேனாதி, சேனாதிபதி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இராசாதிராசசோழன் செயங்கொண்டான், சயங்கொண்டான், சேங்கொண்டான், போரிற் கொளுத்தி, போரைக்கொளுத்தி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டான், முடிகொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இரண்டாம் இராசேந்திரசோழன் உத்த்ங்கொண்டார், உத்தமுண்டார் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இரண்டாம் இராசேந்திரசோழனின் மகன் சோழகன்ன குச்சிராயன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.

மதுராந்தக சோழன் சோழங்கர் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ கேரள தேவன், சோழபாண்டியன், கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டிருந்தான்

விக்கிரம சோழன் கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்

இராசமகேந்திர சோழன் கொல்லத்தரையன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்

முதலாம் இராசேந்திரன் தெற்காசிய நாடுகளை கைப்பற்றிய போது நிகழுற்ற போரில் மண்ணைக் கடக்கத்தை வென்று கடும் போர் புரிந்தவர்கட்கு மண்ணையார் என்ற பட்டத்தையும், இலங்கையை வெல்ல போர் புரிந்தவர்கட்கு முடிகொண்டார், ஈழம்கொண்டார் என்றும், மலேயாவின் மேற்கரையில் உள்ள கடாரத்தை வென்றோருக்கு கடாரம்கொண்டார், கடாரம்தாங்கியார், கடாரத்தலைவர், கடாரத்தரையர் என்றும், ஸ்ரீவிசயம் என்ற சுமத்திராவை வென்றதற்காக விசயதேவர், விசயராயர் என்றும், நிக்கோபார் என்ற மாணக்கவாரம் தீவை வென்றதற்காக மாணக்கவாரர் என்றும் சுமத்திரா தீவின் பன்னையூரை வென்றதனால் பன்னையார் என்றும், வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கு சீனத்தரையரென்றும் பட்டங்களும் வழங்கப்பட்டது. இலங்கையில் சோழ அரசின் சார்பாக கண்டி மாநகர் என்னும் தலைநகர் அமைத்து அரசாண்ட கண்டியூர் அரசனுக்கு ராசகண்டியன் என்னும் பட்டமும் வழங்கி, அதே ராசகண்டியன் என்ற பட்டத்தை தனது சிறப்புப் பட்டமாக இராசராச சோழன் தனுக்கு சூட்டிக் கொண்டது பெரும்வியப்புக்குறியது

கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.

அரையர் என்றால் அரசன்,மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன்
(பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை.. இவை ஓன்று இருந்தாலே அநியாயத்துக்கு தம்பட்டம் அடிக்கும் சாதிகள் இருக்கும் தமிழகத்தில் இணையில்லா தஞ்சை கள்ளர் குலத்தின் பட்டங்களை பாருங்கள் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்

1பாண்டியராயர்,
2 பல்லவதரையர்,
3 பல்லவராயர்
4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி)
5 பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்)
6 தஞ்சைராயர்
7 பழையாற்றரையர்(பறையாறு சோழர்களின் தலைநகரம் )
8 கொடும்பாளுர்ராயர் (மாமன்னன் ராஜராஜன் மனைவியின்    குலம்,ராஜேந்திர சோழன் தாய்
9 வல்லத்தரையர்
10 முத்தரையர்
11 கொல்லத்தரையர்
12 கலிங்கராயர்
13 கொங்குராயர்
14 செம்பியதரையர்
15 கேரளராயர்
16 ஈழ்த்தரையர்
17 கச்சியராயர்
18 காடவராயர்
19 கடாரத்தரையர்
20 கச்சைராயர்
21 கோழிராயர் (கூழி என்றால் கரிகாலன் தலைநகர்       உறையூரை குறிக்கும்)
22 கலிங்கராயதேவர்
23 களப்பாளராயர்
24 குறும்பராயர்
25 சோழகன்னகுச்சிராயர்
26 காலிங்கராயர்
27 செம்பியமுத்தரையர்
28 சம்புராயர்
29 சோழரையர்
30 சேதுராயர்
31 செம்பியரையர்
32 சோழதரையர்
33 சீனத்தரயைர்
34 சோழதிரையர்
35 சிங்களராயர்
36 தஞ்சிராயர்
37 செழியதரையர்
38 சிந்துராபாண்டிராயர்யர்
39 தேவராயர்
40 தமிழுதரையர்
41 தெலிங்கராயர்
42 தென்னதிரையர்
43 தென்னரையர்
44 தென்னறையர்
45 தென்னவராயர்
46 பாண்டுராயர்
47 மூவரையர்
48 மூவேந்த்ரையர்
49 மானமுத்தரையர்
50 மீனவராயர்மலைராயர்
51 மலையராயர்
52 மழவராயர்
53 முனைதரையர்
54 மலையராயர்
55 மலையரையர்
56 வங்கத்தரையர்
57 வங்கராயர்
58 வடுகராயர்
59 நாகராயர்
60 வாணாதிராயர்
61 வல்லவராயர்
62 வில்லவதரையனார்
63 வில்லவராயர்
64 வெங்கிராயர்
65 வாணரையர்
66 வாண்டராயர்
67 வண்டைராயர்
68 வேங்கைராயர்
69 வெங்கிராயர்,
70 அங்கராயர்.
71 ஆக்காட்டரையர்.
72 அன்கராயர்.
73 ஆற்காட்டரையர்.
74 அனகராயர்
75 அங்கதராயர்
76 ஆச்சராயர்
77 ஆச்சாண்டார்
78 உழுவாண்டார்.
79 அச்சிராயர்
80 அச்சுதராயர்
81 உமத்தரையர்
82 அத்திராயர்
83 அத்தியரையர்
84 ஆலத்தரையர்.
85 அமராண்டார்
86 அம்பராண்டார்
87 ஆற்க்காடுராயர்
88 அம்மையத்தரையர்
89 இராதராயர்
90 இராமலிங்கராயதேவர்
91 இராலிங்கராயதேவர்
92 ஓந்திரையர்
93 ஓந்தரையர்
94 ஓமாந்தரையர்
95 ஓமாமரையர்
96 இருப்பரையர்
97 அண்ணவசல்ராயர
98 கொங்கரையர்
99 கொங்ககரையர்
100 கொங்குதிரையர்
101 கொடிராயர்
102 காசிராயர்
103 கொடிக்கிராயர்,
104 கொடிக்கவிராயர்
105 கஞ்சராயர்
106 கொடும்பராயர்,
107 கொடும்பைராயர்
108 கடம்பராயர்
109 கொடும்புராயர்
110 கடம்பைராயர்
111 கொடும்மளுர்ராயர்
112 கொடும்பிராயர்,
113 கொடும்பையரையர்
114 கார்யோகராயர்
115 கட்டராயர்
116 கொழுந்தராயர்
117 கொற்றப்பராயர்
118 கொத்தப்பராயர்
119 கொற்றரையர்
120 கண்டராயர்
121 கண்டவராயர்
122 கோட்டரையர்
123 கோட்டையரையர்
124 கண்ணரையர்
125 கரம்பராயர்
126 கீழரையர்
127 கைலாயராயர்
128 கையராயர்
129 கரும்பராயர்
130 குச்சராயர்
131 குச்சிராயர்
132 குச்சியராயர்
133 குமதராயர்
134 கலிராயர்
135 குருகுலராயர்
136 குழந்தைராயர்
137 கொழந்தைராயர்
138 கொழந்தராயர்
139 கொழுந்தைராயர்,
140 களப்பாள்ராயர்,
141 கனகராயர்
142 கூத்தப்பராயர்
143 கன்னகொண்டார்
144 கொத்தப்பராயர்
145 கன்னக்குச்சிராயர்
146 கன்னராயர்
147 கன்னிராயர்
148 கேளராயர்
149 சக்கரையர்
150 சாக்கரையர்
151 சக்கராயர்
152 செம்பரையர்
153 சக்காராயர்
154 சங்கரராயர்
155 சோழுதிரையர்
156 சோதிரையர்
157 செல்லரையர்
158 செனவராயர்
159 சன்னவராயர்
160 சனகராயர்
161 சன்னராயர்
162 சென்னிராயர்
163 சன்னவராயர்
164 சாணரையர்
165 சாத்தரையர்
166 சாமுத்தரையர்
167 சாமுத்திரையர்,
168 சேண்ராயர்
169 செனவராயர்
170 சிங்கராயர்
171 சேந்தராயர்
172 சிந்துராயர்
173 சிறுநாட்டுராயர்
174 சிறுராயர்
175 சேறைராயர்
176 சேற்றூரரையர்
177 சுக்கிராயர்
178 சுக்கிரபராயர்
179 சுக்கிரியராயர்
180 சுந்தரராயர்
181 சொரப்பரையர்
182 சோதிரையர்
183 தேசுராயர்
184 தனஞ்சராயர்
185 திருக்காட்டுராயர்
186 தம்பிராயர்
187 தனராயர்
188 தோப்பைராயர்
189 தலைசைராயர்,
190 துண்டராயர்
191 தனசைராயர்
192 துண்டுராயர்
193 துண்டீரராயர்
194 தனிராயர் ,
195 நண்டல்ராயர்
196 நந்திராயர்
197 நந்தியராயர்
198 நாட்டரையர்
199 நாட்டறையர்
200 நரசிங்கராயர்
201 நெடுந்தரையர்
202 நன்னிராயர்
203 நெல்லிராயர்
204 பகட்டுராயர்
205 பூழிராயர்
206 பூவனையரையர்
207 பங்களராயர்
208 பாச்சிராயர்
209 பேரரையர்,
210 பேதரையர்
211 பாண்டராயர்
212 பஞ்சராயர்
213 பஞ்சந்தரையர்
214 பஞ்சநதரையர்
215 பாப்பரையர்
216 பொய்ந்தராயர்
217 போய்ந்தராயர்
218 போய்ந்தரராயர்
219 பட்டுராயர்
220 பொன்னவராயர்
221 பாலைராயர்
222 பால்ராயர்
223 பிச்சராயர்
224 பதுங்கராயர்
225 பதுங்கரார்
226 பிரமராயர்
227 பிலியராயர்
228 பயிற்றுராயர்
229 பரங்கிலிராயர்
230 பரங்கிராயர்
231 பருதிராயர்
232 புள்ளராயர்
233 பிள்ளைராயர்
234 போதரையர்
235 பூராயர்
236 பனைராயர்
237 மாதராயர்
238 மாதைராயர்
239 மாதுராயர்
240 மாத்துராயர்
241 மங்கலராயர்
242 மாதவராயர்
243 மாந்தராயர்
244 மாந்தையரையர்,
245 மாந்தரையர்
246 மட்டைராயர்
247 மேனாட்டரையர்
248 மணிராயர்
249 மண்டலராயர்
250 மண்டராயர்
251 மாவாளியார்
252 மண்ணிராயர்
253 மணிக்கராயர்
254 மாளுவராயர்
255 மானத்தரையர்
256 மருங்கராயர்
257 பருங்கைராயர்
258 கைராயர்
259 விக்கிரமத்தரையர்
260 விசயராயர்
261 வங்கனராயர்
262 விசையராயர்
263 வங்காரமுத்தரையர்
264 விசராயர்
265 விசுவராயர்
266 வங்கானமுத்திரையர்
267 விசுவரார்
268 வஞ்சிராயர்
269 வாஞ்சிராயர்
270 விஞ்சிராயர்
271 விஞ்சைராயர்
272 வடுராயர்
273 விசலராயர்
274 வடுராயர்,
275 விசுவராயர்
276 வல்லவரையர்
277 விண்டுராயர்
278 வீண்டுராயர்
279 விருதுளார்
280 விலாடத்தரையர்
281 வில்லவதரையர்
282 வில்வராயர்
283 விழுப்பாதராயர்
284 விற்பன்னராயர்
285 வீணதரையர்,
286 வெட்டுவராயர்
287 வணதரையர்
288 வாணதிரையர்
289 வாணாதரையர்
290 வீணாதரையர்
291 வீனைதிரையர்
292 வெங்கிராயர்
293 வாலிராயர்
294 வேம்பராயர்
295 வாளுவராயர்
296 வேள்ராயர்
297 வாள்ராயர்
298 வைகராயர்
299 வையராயர்
300 வைராயர்
301 வயிராயர்
302 பிள்ளைராயர்
303 கழுத்திரையர்
304 செட்டரையர்
305 தழிஞ்சிராயர்

கள்ளர்கள்அரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது. இந்த ஊர்களில் எல்லாம் கள்ளர் இன மக்களே பரம்பரை பரம்பரையாக அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

சோழ நாட்டில் கோட்டை என முடியும் ஊர்களில் சில.
அத்திக்கோட்டை
அருப்புக்கோட்டை
அருமலைக்கோட்டை
ஆத்திக்கோட்டை
ஆவணக்கோட்டை
ஆதனக்கோட்டை
ஆய்க்கோட்டை
இடைங்கான்கோட்டை
ஈச்சங்கோட்டை
உள்ளிக்கோட்டை
உச்சக்கோட்டை
எயிலுவான் கோட்டை
ஒளிக்கோட்டை
பட்டுக்கோட்டை
பரமக்கோட்டை
பரக்கலகோட்டை
பரவாக்கோட்டை
பஞ்சநதிக்கோட்டை
பருதிக்கோட்டை
பத்தாளன்கோட்டை
பாச்சிற்கோட்டை
பனையக்கோட்டை
பரங்கிலிகோட்டை
பழங்கொண்டான் கோட்டை
பாலபத்திரன் கோட்டை
பாத்தாளன் கோட்டை
பாதிரங்கோட்டை
பாளைங்கோட்டை
பராக்கோட்டை
பிங்கலக்கோட்டை
புத்திகழிச்சான்கோட்டை
புதுக்கோட்டை
பெரண்டார்கோட்டை
பெரியக்கோட்டை
பெரியபருத்திக்கோட்டை
பொய்கையாண்டார் கோட்டை
பொன்னவராயன்கோட்டை
கள்ளிக்கோட்டை
கண்டர் கோட்டை
கந்தர்வக்கோட்டை
கல்லாக்கோட்டை
கக்கரக்கோட்டை
கரம்பயன்கோட்டை
கருக்காக்கோட்டை
கரும்பூரான்கோட்டை
கரைமீண்டார் கோட்டை
காரைக்கோட்டை
காரிகோட்டை
காசாங் கோட்டை
கிள்ளிக் கோட்டை
கிள்ளுக்கோட்டை
கீழைக்கோட்டை
கீழாநிலைக்கோட்டை
குன்னங் கோட்டை
கூராட்சிகோட்டை
நடுவாக்கோட்டை
நடுவிக்கோட்டை
நள்ளிக்கோட்டை
நம்பன்கோட்டை
நாஞ்சிக்கோட்டை
நாயக்கர் கோட்டை
நாயக்கான்கோட்டை
நாட்டரையர் கோட்டை
நெடுவாக்கோட்டை
நெல்லிக்கோட்டை
மல்லாக்கோட்டை
மலைக்கோட்டை
மண்டலகோட்டை
மயிலாடு கோட்டை
மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
மருதக்கோட்டை
மகிழங்கோட்டை
மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
மண்டலகோட்டை
மானரராயன் புதுக்கோட்டை
மாங்கோட்டை
மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
மூவரையர் கோட்டை
மேலைக்கோட்டை
தம்பிக்கோட்டை
தளிக்கோட்டை
தர்மக்கோட்டை
தாமரங்கோட்டை
தாமிரன்கோட்டை
திருமங்கலக்கோட்டை
திருமலைக்கோட்டை
திருமக்கோட்டை
தும்பதிக்கோட்டை
துரையண்டார்க் கோட்டை
துறையாண்டார் கோட்டை
துரையுண்டார்கோட்டை
தெற்குக் கோட்டை
சத்துருசங்காரக் கோட்டை
சாக்கோட்டை
சாய்க்கோட்டை
சின்னபருத்திக்கோட்டை
சிறுகோட்டை
சுந்தரகோட்டை
சூரக்கோட்டை
செங்கோட்டை
செஞ்சிக்கோட்டை
சோணாகோட்டை
சேண்டாகோட்டை
வரவுக்கோட்டை
வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)
வத்தானக்கோட்டை
வாகோட்டை
வாளமரங் கோட்டை
வாழவந்தான் கோட்டை
வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
வெண்டாக்கோட்டை
வெட்டுவாகோட்டை

பல ஊர்ப்பெயர்கள் கள்ளர் இனத்தின் பட்டங்களை கொண்டுதிருத்தலும் அவ்விடங்களில் இவர்கள் முதன்மையுற்றிருந்தன ரென்பதற்குச் சிறந்த சான்றாகும். அவற்றுள் சில

1.காங்கெயன்பட்டி
2.சோழகன்பட்டி
3.ராயமுண்டான்பட்டி
4.வாலியன்பட்டி
5.தொண்டைமான்பட்டி
6.கண்டியன்பட்டி
7.சாதகன்பட்டி
8.துண்டுராயன்பாடி
9.ஆரமுண்டான்பட்டி
10.ஓசையன்பட்டி
11.வில்லவராயன்பட்டி
12.செம்பியன்களர்
13.உலகங்காத்தான்பட்டி
14.மலைராயன்பட்டி
15.திராணிபட்டி
16.கலியராயன்பட்டி
17.சாணூரன்பட்டி
18.கச்சியராயன்மங்கலம் (கச்சமங்கலம்)
19.ஏத்தொண்டான்பட்டி
20.பத்தாளன்கோட்டை
21.பாப்பரையன்பட்டி
22.மாதைராயன்பட்டி
23.சேதிராயன் குடிக்காடு
24.நல்ல வன்னியவன் குடிக்காடு
25.வல்லாண்டான்பட்டி
26.வாண்டையானிருப்பு
27.தென்கொண்டானிருப்பு
28.நரங்கியன்பட்டி
29.பாலாண்டான்பட்டி
30.கண்டர்கோட்டை
31.வன்னியன் பட்டி
32.பாண்டுராயன்பட்டி
33.சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார் பட்டி)
34.காடவராயன்பட்டி
35.சாளுவன்பேட்டை
36.நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்)
37.செம்பின் மணக்குடி

இனி, கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது.

1.துண்டுராயன்பட்டி
3.காங்கெயன்பட்டி
4.ஆற்காடு
5.சுரக்குடிப்பட்டி
6.சோழகன்பட்டி
7.உறத்தூர்
8.விண்ணமங்கலம்
9.திருக்காட்டுப்பள்ளி
10.பூண்டிபானமங்கலம்
11.அன்பில்
12.மாங்குடி
என்னும் இடங்களிலெல்லாம் இவர்களுடைய கோட்டைகள் இருந்தன. இவற்றுட் சில ஊர்களில் கோட்டை அழிந்தவிடத்தில் திடர்களும், நிலங்களும் கோட்டைமேடு, பீரங்கிமேடு, என்னும் பெயர்களால் வழங்குகின்றன.

இப்பொழுது கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள்  ஆட்சி புரிந்த நாடு. சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு ‘கோனேரிமேல் கொண்டான்’ என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:

“திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.”

‘’கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர்கன்மிகளுக்கு — இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்கும், தேவரடியார்க்கும், உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ்வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப்பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப்பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ்வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம். இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்க. இவை விலாடத்தரையன் எழுத்து”

இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரி மேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்தியசாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21-ம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின் வருமாறு குறித்திருக்கின்றனர்.:

“இப்பெயர் ஒரு விடுகதை பொன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள். கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன், குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்”
இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர்,
‘கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’ என்று பாடுவதால் அறியலாகும்.  இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது.

கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து. சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றேன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.

கள்ளருக்குள் வழங்கும் பட்டங்களில் சோழங்கர் அல்லது சோழங்க தேவர் என்பதும் ஒன்று, இப்பெயரின் வரலாற்றை ஆராயும் பொழுது சோழ சம்பந்தம் பெறப்படுகிறது. சோழ மன்னர்கள் ஓரொருகால் தாம் வென்று கைப்பற்றிய நாடுகளில் தம் கிளைஞரைப் பிரதிநிதிகளாக நியமித்து, அவர்கட்கு வெவ்வேறு பட்டங்கள் கொடுத்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழபல்லவன் முதலியன அங்ஙனம் உண்டாய பட்டங்களாகும். தென்தனிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி, முதற் பகுதி 59-ம் சாசனத்தில் வந்துள்ள பட்டங்களில் ‘சோழங்கன்’ என்பதும் ஒன்று, ‘தன்றிருத்தம்பியர் தம்முள்–மதுராந்தகனைச் சோழகங்கனென்றும், மணிமுடிசூட்டி’ எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து சோழமன்னன் ஒருவன் தம்பி சோழகங்கன்   சோழங்கன் மருவுவது மிக எளிதே. இப்பட்டமுடைய கள்ளர் குல மக்கள் துண்டுராயன்பாடி, அந்தலை முதலிய இடங்களில் இருக்கின்றனர். இவரெல்லாம் தொன்றுதொட்டுப் பெருமை வாய்ந்துள்ள குடும்பத்தினர்களாவர். இன்னோர் கோட்டை கட்டியும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அது பின் கூறப்படும்  சாசனங்களில் ‘சோழகோன்’ என ஒரு பட்டம் வந்துள்ளது. இது சோழகன் எனத்திரிந்து பன்மையில் சோழகர் என்றாகி இவ்வகுப்பினர்க்கு வழங்குகிறது.

கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந்தொகையினராக இருக்கின்றனர். கோனாடு, கானாடுகளின் பிரிவுகளை ‘அரையர் ‘ ‘நாடாள்வார்’ என்னும் பட்டமுடையார் ஆட்சிபுரிந்த செய்தி கல்வெட்டுகளில் வெளியாவது முன்பே காட்டப்பட்டது. நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்ததுங்கன் மகனாகிய விக்கிரம சோழனுக்கு வழங்கியுள்ளது. குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில்,

‘சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட்
பாராளு மன்னவன் பாகவத ரிடத்திலென்றும்
ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான்
ஏராரும் வைகுந்த நாடாள வேகினான் (794)

என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பாக்கம் 347-351)

விக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந்தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்ககும் ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க் குரியன கள்ளரிடத்திற் காணப்படுகின்றன

கள்ளர் குல திருமண கோட்பாடுகள்
சூரிய மரபினர் முற்காலத்தில் இரத்தினங்க்களினால் மணவரை அமைத்து வாழை, கமுகு, கொடி, மகரதோரணம், பூரணகும்பம், முதலியவற்றால் அலங்காரம் செய்து ஆயிரப்பெருந்த்கழி என்னுந் திருவிளக்கேற்றி ஒரு புறம் யானையும், ஒரு புறம் குதிரையும், ஒரு புறம் மயிலும், ஒரு புறம் கும்பமும் அமைத்து பூசனைசெய்து முரசு, மத்தளம், உடுக்கை போன்ற தோற்கருவிகள், நாதசுரம், புல்லாங்குழல், சங்கு முதலிய துளைக்கருவிகள், தாளம் முதலிய கஞ்சக்கருவிகள், வீணை முதலிய நரம்புக்கருவிகள் வாத்தியங்கள் முழங்க மணமக்களை மங்கலநீராட்டி பட்டு, பீதாம்பரம், கவசம், காப்பு, மோதிரம், பதக்கம், நெற்றிச்சுட்டி, முத்துமாலை, ஒட்டியாணம், பூமாலைகள் அணிவித்து சந்தனம், புனுகு, சவாது முதலிய வாசனை திர்வியங்கள் தெளித்து மணவரையில் அமர்த்தி பொற்கம்பியில் தாலியைக்கோத்து மணமகன் மணமகள் கழுத்தில் தரிப்பித்து இருவரையும் சிவனை வலம்வந்து வணங்கி சாண்றோர் வாழ்த்தினைப் பெருவர். ஆரியரின் வருகைக்கு பின் இவை எல்லாம் மாறிவிட்டன.

கள்ளர் குல மரண சடங்குகள்

கள்ளர்கள் இறந்த ஆண்பாலரைப் பச்சைத் தேரிலும், பெண்பாலரைப் பச்சை பல்லக்கிலும், பறை, கொம்பு, எக்காளம், சங்கு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க சுடுகாடு சென்று விறகு சதையில் தீயிட வேண்டும்.
பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் இறந்தோரின் எலும்புக் கூடுகளுக்கு அருகில் எலும்பு மற்றும் இரும்பினால் செய்யப் பெற்ற அம்பு முனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அவற்றோடு ஒரு சில ஈமச் சின்னங்களில் இரும்பினாலான குறுவாள்கள், பெருங்கத்திகள் காணப்படுகின்றன.("கொடுமணல் அகழாய்வு - ஓர் அறிமுகம்" - கா.ராஜன், 1994, பக்கம் 21).
எதற்காக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன?போர் செய்யத்தானே? குறு வாள், கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி போர் செய்யத் தெரியும்போது தமக்கென்று ஒரு தலைவனை அம்மக்கள் தேர்ந்தெடுக்கத் தெரியாதவர்களா?

No comments:

Post a Comment