Tuesday, October 27, 2009

Na.Mu. Venkadasamy Nattar


காலத்தால் அழியா புகழ் பெற்ற கள்ளர் சரித்திர நாயகன் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

தமிழக மக்களால் நாட்டர் ஐயா என பாசமுடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கருகிலுள்ள நடுக்காவேரி என்னும் சிற்றூரில் கள்ளர் குலத்தோன்றலாகிய வீ. முத்துச்சாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகனாய் 12-04-1884 இல் பிறந்தார். தம் சிறு வயதிலெயே ஆசிரியர் எவருடைய உதவியுமின்றித் தாமே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம் திரிபரப் பயின்று, மதுரை தமிழ் சங்கம் நடத்திய பிரவெச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905, 1906, 1907) முறையாக எழுதி முதன்மையாக தேர்ச்சி பெற்று, மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பெருமாகனாராகிய பண்டித் துரை தேவர் அவர்களால் தங்கப் பதக்கக்ங்களும், தங்கத் தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள். தாமே பயின்ற தமிழ் பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் ப்ணிபுரிய அழைத்த கல்வி நிருவனங்கள் பல. கோயம்பத்தூர் தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஒரு ஆண்டும் திருச்சி பிஷப் கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியரரக 24 ஆண்டுகளும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ பேராசிரியராக 7 ஆண்டுகளும் பணி புரிந்து ஒய்வு பெற்றார். பின் தமிழ் வேள் உமா மகேஸ்வரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தை புலவர் கல்லூரியில் 4 ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்து சிரப்பித்தார்கள். 1940 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமில் மா நாட்டில் நாவலர் என்னும் சிரப்பு பட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப்பெற்றது. ஐயா அவர்கள் எழுதிய உரைகள், தமிழ் ஆராச்சி நூல்கள் பல. 1921 -22 இல் திருவருட் கல்லூரி ஒன்று நிறுவ முயற்சி செய்து நிறைவேறாமல் போக , 1925 - 26 இல் தஞ்சை அல்லது திருச்சியில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர் டி.என். சிவஞானம்பிள்ளை அவர்கள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பினராக இருந்து செயலாற்றிச் சிற்ப்பித்தார்கள். எளிய வாழ்வும் இனிய நோக்கமும் கொண்டவர், நெஞ்சிலுரமும் நேர்மைத் திறமும் மிக்கவர். சிறந்த புலமையாளர், உயர்ந்த பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றிய நாட்டர் 28-3.1944 அனறு தம் மணி விழா நடை பெறுவதற்கு இருவராத்திற்கு முன் காலமானார். அன்னாரின் உடல் பிறந்த மண்னணில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின் படி பூசை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ் புலவர் ஒருவருக்காக எழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இதுவே.

நாட்டாராய்யாவின் அகன்ற அறிவு. ஆழ்ந்தபுலமை. தெளிந்த ஆய்வு. தேர்ந்த எழுத்துத்திறன். பேச்சாற்றல். படைப்பாற்றல். உரைவளம். மனவளம். மனிதநேயம். போன்ற சிறப்புகளையெல்லாம் எதிர்கால இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எழுத்துநடை, பேச்சுநடை இரண்டிற்கும் தூய நடை எடுத்துவைத்தார். உயர்வான தமிழ் வளர்த்தார்.
உலகில் நல்ல பேர்வளர்த்தார்.
தமிழுக்குப் பெருமைதனைத்தான் வளர்த்தார்.
உலகுள்ளவரை தமிழ் வாழும்.
தமிழுள்ளவரை நாட்டார் தம் புகழ் வளரும்.

No comments:

Post a Comment