தலைவர் கடிதம்
விளக்கமும் வேண்டுகோளும்
வணக்கம் தமிழக சொந்தங்ளே
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு. களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு. கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும் புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது. கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்; இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
விளக்கமும் வேண்டுகோளும்
வணக்கம் தமிழக சொந்தங்ளே
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு. களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு. கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும் புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது. கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்; இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா?
வந்த பாதையை நாம் மறந்து விட்டால்
போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும்.
நமது கள்ளர் பேரவை குறித்து சில விளக்கங்களை நம்மோடு செயல்பட காத்திருக்கும் சொந்தகளுக்கு விளக்க கடமைப் பட்டுள்ளோம். கள்ளர் பேரவை எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாரமல் நமது மக்களுக்காக அவர்களின் முன்னெற்றத்திற்காக செயல்படும் ஒரு சமுதாய அமைப்பு. கடல் கடந்து உலகெங்கும் வாழும் எம்மக்களை இனைக்கும் ஒரு பேரியக்கம். இயக்கத்தின் பெயரும் கொள்கைகளும் நமது வளர்ச்சிக்கான பாதை.
இதை அடைவதற்குரிய வழிகள் பற்றி உங்கள் ஆலொசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகின்றோம். தமிழகத்தின் ஏழரைக் கோடி மக்கள் தொகையில் கள்ளர் கிட்டத்தட்ட இரு கோடி மக்களைக் கொண்டிருந்தாலும் நம் மக்களூக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளும் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு வருவது ஒரு வேதனையான உண்மை.
சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி கூற்றை மறுப்பதற்கில்லை. மனித சமுதாயம் அனைத்தும் ஒரே சாதி என்ற நிலை என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றதோ, அன்று அதை நாமும் எற்றுக்கொள்வோம்
நாம் ஒரு சாதி ரீதியான அமைப்பில் ஈடுபட்டால் சமுதாயதில் உள்ள மற்ற இன மக்கள் நம்மை தவறாக அல்லது விரோதமாக நினைப்பார்களோ என்று சிலர் எண்ணுகிறார்கள். இது ஒரு தவறான கருத்து. நம் சமுதாயத்திற்கு பணியாற்றிடக் கிடைத்திடும் நல் வாய்ப்பாக இதைக் கருதிட வேண்டும்.
இன்று நம் நிலை என்ன? கல்வி வாய்ப்புகள் கிடைப்பதில் இருந்து வேலை வாய்ப்புகள் பெரும் வரை அனைத்தும் மறுக்கபடுகிறது.
ஏன் இந்த அவல நிலை?
நமது அறியாமையா?
அலட்சிய மனப்போக்கா?
அல்லது நமது சமுதாய ஒற்றுமை இன்மையா?
ஒன்றை யோசித்துப் பாருங்கள். ஒரு சமுதாயத்தில் தனி மனிதனின் வளர்ச்சிஅந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்று கூற முடியாது. ஆனால் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அந்த சமுதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களூக்கும் ஏதாவது ஒரு வளர்ச்சியை நிச்சயம் தரும். இந்த ஒரு லட்சிய நோக்கை பெரிதாகக்கொண்டு நாம் செயல் பட வேண்டும். இன்று நாம் மௌனமாக இருந்தால் நளை நமது தலைமுறைகள் அடிமைகளாக கூனிக்குறுகி நிற்க நேரிடும். பல தலைமுறைகளாக நம் முன்ணோர்கள் செய்து வந்த தவறுகளை நாமும் செய்ய வேண்டாம். நமது சமுதாய வளர்ச்சிக்கான, ஒற்றுமைக்கான முயற்சிகளை எடுப்போம். கை கோர்த்து நடப்போம். வெற்றி காண்போம்.
தீர்வு காணத் தெரியாதவர்கள் தீர்ப்பு கோரி புலம்பாதீர்கள்.
தீர்வு காணும் முயற்சிகளின் எண்ணிக்கயை அதிகமாக்குங்கள்.
முயற்சிகளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை.
முயற்சி தான் தன்மானத்தின் உச்ச நிலை என்பதனை நீங்கள் உணரும்போது தீர்வு தானாக உங்களை நாடி வரும்.
இல்லை எனில், அநியாயமாக ஒருவரை நீதிபதி ஆக்கிவிட்ட அவமானம் உங்களைக் குடையும்.
நமது கள்ளர் பேரவை செயல் திட்டங்கள் யாவும் மிக கவனமுடன் செயல் பட வேண்டும். பத்தோடு பதினொன்றாக இதுவும் அமைந்துவிடக் கூடாது. நமது செயல் பாடுகள் தான் நமது அங்கீகாரம். நாம் சிறப்பாக செயல்பட அதிக உறுப்பினர்கள் வேண்டும், நமது செயல் பாட்டின் அடிப்படை தான் நமது உறுப்பினர் பெருக்கத்திற்கு வழி. நமது சொந்தங்களிடம் இதனை விளக்கமாக எடுத்துரைத்து அதிக உறுப்பினர்களை பெற்றுத்தாருங்கள். நாளடைவில் நம் செயல்பாடுகள் நமக்கு உறுப்பினர்களை தானே பெற்றுத்தரும்.
கள்ளர் பேரவை நமக்கு நாமே என்ற அடிப்படையில் நம் இனத்தின் உயர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட பேரவை என்பதை உணரவேண்டும்.
நம் மக்களை ஒன்று திரட்டுவது மிகவும் சுலபம் (அரசியல்)
ஒன்று பட வைப்பது தான் மிகவும் கடினம் (சமுதாய வளர்ச்சி)
தோள்முறிந்து போனாலும் போகட்டும். நமது வாள் முறிந்து போகாமல் பார்த்துக்கொள்வோம்.
நன்றி.
என்றும் அன்புடன்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
தலைவர் சர்வதேச கள்ளர் பேரவை
No comments:
Post a Comment