சோழவேந்தரின் குடிப்பூ ஆத்தி
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன் கள்ளர்
மனுநீதியை காத்த மானுடன் கள்ளர்
அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன் கள்ளர்
கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன் கள்ளர்
கற்களை கலை வண்ணமாக்க கலைக்கு சங்கம் வைத்தவன் கள்ளர்
கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை வியக்கச் செய்தவன் கள்ளர்
முல்லைக்கும் தேர்தந்த இனமவன் கள்ளர்
மார்பிலே புண்ணேந்தி தன்மானமே பெரிதென மரணத்தை மிரட்டியவன் கள்ளர்
காலத்து முன் தோன்றி உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன் கள்ளர்
கள்ளராய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்.
கள்ளர் குல மக்களது வரலாறு தமிழ் நாட்டின் தொன்மைகாலம் முதல் அண்மைகாலம் வரை தொடர்புடையதாக இருக்கிறது. இவர்களுடைய வரலாற்றை உள்ள படி எழுதினால் அது தமிழ் நாடின் வரலாறாக இருக்கும் என்பதில் ஜயம் இல்லை.
கள்ளர் இனம் என்பது தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, போன்ற மாவட்டங்கலளில் அதிகமாகவும், பிற மாவட்டங்களில் சற்று குறைவாகவும் இருக்கும் ஒரு பெருங்குடி சமுதாயமாகும். இவர்கள் இந்தியாவை ஆண்ட சோழர்களுடன் உறவு கொண்டிருந்தனர் எனபதற்கு நிறைய சாண்றுகள் உள்ளன. தமிழ் நாட்டில் சுமார் ஒண்றரைகோடி மக்கள் தொகையை இச் சமுதாயம் கொண்டுள்ளது. உலகில் எந்த ஒரு சமுதாயமும் கொண்டிறாத சுமார் 2225 பட்டப் பெயர்களை இந்த மக்கள் கொண்டுள்ளனர். இவர்களை பொதுவாக தஞ்சை கள்ளர் என்று அழைப்பார்கள்.
ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாக குறைய துவங்கி தற்பொது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர். ஆண்ட பரம்பரை இன்று நிலை குலைந்து உள்ளது.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தொனெசியா, பர்மா, ஆகிய நாடுகளிளும் இவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்ள இவர்கள் பயன் படுத்தும் பட்டப் பெயர்கள் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக ஒரு சில பட்டப் பெயர்கள் வருமாறு.
அரசாண்டார், ஆளியார், ஆலங்கொண்டார், இராங்கியர், இராசாப்பிரியர், கண்டியர், காலிங்கராயர், தொண்டைமான், வாண்டையார், கங்கைநாட்டார், மழவராயர், கருப்பூண்டார்,விசயதேவர், கொன்னமுண்டார், வல்லுண்டார்.
(திரட்டப்பட்ட 2225 பட்டப் பெயர்களும் இணையத்தளத்தில் உள்ளது)
மேல் குறிப்பிட்ட பட்ட பெயர்கள் யாவும் ஒரு காரணத்திற்காக சோழ மன்னர்களால் வழங்கப்படவை என்பதற்கு நிறைய சரித்திர ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக சோழ மன்னன் கலிங்கத்தை வென்ற தளபதிக்கு சூட்டிய பட்டமே காலிங்கராயர். இராசராசசோழன் தெலுங்க வெற்றியை தந்த தளபதிக்குஅளித்த பெயர் தெலிங்கராயர், இராஜெந்திர சோழன் இலங்கையை வென்று முடியை கைபற்றியதால் முடிகொண்டார் என்ற நாமத்தை பெற்றான்.
சோழர்கள் உலக வரலாற்றில் 433 ஆண்டுகள் ( கி. பி. 846 - கி.பி. 1279 வரை ) அரசாண்டவர்கள். இவர்களின் பெரும் வெற்றிக்கு கள்ளரின் பங்கு ஈடு இனை அற்றது. வையகம் ஆண்ட கள்ளர் மரபினர் செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியது வரலாறு.
சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது.
சோழர்களின் கொடி புலிக்கொடி.
சோழவேந்தரின் குடிப்பூ ஆத்தி என்பர். அவர்கள் சூடும் மலர் ஆத்தி.
ஆத்தி மலர்
ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை
ஆத்தி ஒரு சிறிய மரம். சற்று குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றீலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1 - 2 அங்குல நீளமிருக்கும்.இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும்
கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு.
6 - 12 அங்குல நீளமும் 3/4 - 1 அங்குல அகலமும் இருக்கும். மரம், பட்டை, வேர், இலை, பூ, கனி முதலியன மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. பட்டை சொரசொரப்பாகவும் கருமை நிறமுடையதாகவும் நார் எடுத்து முரடாண பலம் வய்ந்த க்யிறு திரிப்பதற்கும் உதவும், மரம் பழுப்பு நிறமுடய கடினமான விறகாகும். ஆத்திக்கு ஆர் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வித மந்தாரையாகும். ஆங்கிலத்தில் பௌஹினியா ராசிமோசா என்ற பெயர் உண்டு.
ராஜ ராஜ சோழன் பிறந்தவுடன் பெற்றோர்கள் அவனுக்குச் சூட்டிய பெயர் அருண்மொழி வர்மன் என்பதாகும்.
தேவர் குடும்பத்தில் பிறந்ததால் 'அருண்மொழித் தேவன் என்றே அனைவரும் அழைத்தனர்.
முடி சூட்டிக்கொண்ட பின்பு ராஜராஜ தேவர் என்றே தன்னை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜ ராஜ தேவர் என்ற பெயரிட்ட வெள்ளிக்காசையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ராஜ ராஜ சோழன் இறந்த பிறகு பழையாறை உடையாளூரில் எழுப்பப்பட்ட அவருடைய மாளிகைக்கு 'தேவர் திருமாளிகை'என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ராஜ ராஜ சோழன் தந்தை சோழங்க தேவர்.
தாய் சேதுராயர் மகள்.
பாட்டி செம்பியன் மாதேவி.இவர் மழவராயர் மகள்.
பட்டத்தாரசி வானாதிராயர் மகள்.
மற்றொரு ராணி மழவராயர்-பழுவேட்டரையர் மகள்.
மற்றொரு ராணி-கொடும்பூரார் மகள்.
மைத்துனர்-வல்லவராயர்.
இப் பட்டங்கள் அனைத்தும் கள்ளர்களுக்கே உரியது.
பழுவேட்டரையர்
பழுவேட்டரையர்
பழுவேட்டரைகளின் தலைநகர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துப் பழுவூராகும். முற்காலத்தில் இதுஅவனிகந்தர்வபுரம் எனவும், "பகைவிடையீச்சுவரம்"என்றும் அழைக்கப்பட்டது. சோழ மன்னன் பராந்தகன் காலத்தில் வாழ்ந்த கண்டன் அமுதன் என்பவனே பழுவேட்டரையர்களின் முதல்வனாவான். பராந்தகனின் மனைவியரில் ஒருவரான அருமொழிநங்கை கண்டன் அமுதனின் புதல்வியாவாள். சோழ மன்னன் பராந்தகனுக்கும் மூன்றாம் இராசசிம்ம பாண்டியனுக்கும் நடைபெற்ற வெள்ளூர்ப் போரில் சோழர் படைக்கு தலைமை தாங்கிப் போர்புரிந்து பெருவெற்றி கொண்டவன் என்று பராந்தகனின் பன்னிரண்டாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கண்டன் அமுதனுக்குப் பிறகு சிறபுற்றிருந்த பழுவேட்டரையர் அடிகள் மறவன் கண்டனார் ஆவார். இவர் சுந்தர சோழன், உத்தம சோழன் முதலியோர் காலத்தில் குறுநில மன்னராக விளங்கியவர். சோழர்களின் நகரான நந்திபுரத்தில் நிலவிய வரிவிகிதத்தையே இவர் தன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலும் பின்பற்றினார் என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது.உத்தம சோழன் காலத்தில் பழுவேட்டரைய குறுநில மன்னர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவன் கண்டன் மறவன். இவன் சுந்தர சோழன் என்ற பெயரையும் பெற்றிருந்தான் என்று சில கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.இவனுடைய உடன் பிறந்தோன் கண்டன் சத்ருபயங்கரனார் என்பான் ஆவான். இவன் பழுவேட்டரையர் விக்கிரமாதித்தர் என்று அழைக்கப்பட்டான்.முதலாம் இராசராச சோழனின் பட்டத்தரசியான பஞ்சவன் மாதேவிகண்டன் மறவனின் புதல்வியாவார்.
முதலாம் இராசராச சோழனின் ஆட்சியின் பிற்பகுதியுலும் அவனுடைய மகன் காலத்திலும் குறுநில மன்னனாக வாழ்ந்த பழுவேட்டரையர் குமரன் மறவன். இவன் கண்டன் மறவனின் புதல்வனாவான். பழுவேட்டரையர் தங்களை தேவர் என்று கல்வெட்டுகளில் குறித்துள்ளனர். இவர்களின் ஆட்சி முறை சோழர்களின் ஆட்சிமுறையை பின்பற்றியே அமைந்துள்ளது. சைவசமயத்தில் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டினை பழுவேட்டரையர்கள் கட்டிய கோயில்களிலிருந்து அறியமுடிகிறது.
கீழப்பழுவூரிலுள்ள பசுபதிச்சுவரம் கோயிலை அடிகள் மறவன் கண்டனாரும் மேலப்பழுவூரிலுள்ள சுந்தரேசுவரர் கோயிலைக் கண்டன் மறவனும் கட்டியுள்ளார்கள்.
பழுவூரை ஆண்ட மன்னர்கள்
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
குமரன் பழுவேட்டரையருக்கு இரு மகன்கள் குமரன் கண்டன் எனவும் குமரன் மறவன் என்றும் அறியப்பட்டனர்.
குமரன் கண்டனின் மகன் கண்டன் அமுதன் எனவும்
குமரன் மறவனின்ன் ம்கன் மறவன் கண்டன் எனவும் அறியப்பட்டனர்.
மறவன் கண்டனின் மகன்கள் கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தர சோழன் மற்றும்கண்டன் மறவன் ஆவார்கள்
பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை
எண் 1
கல்வெட்டு இருக்குமிடம் - திருவையாறு
கோயில் பெயர் - பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 10
பழுவேட்டரையர் - குமரன் கண்டன்
செய்தி - நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையது
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 523
எண் 2
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 12
பழுவேட்டரையர் - குமரன் கண்டன்
செய்தி - 'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார்
ஆண்டறிக்கை எண் - SII Volume 3, No. 235
எண் 3
கல்வெட்டு இருக்குமிடம் - திருவையாறு
கோயில் பெயர் - பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 19
பழுவேட்டரையர் - குமரன் மறவன்
செய்தி - இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம்
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 537
எண் 4
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 22
பழுவேட்டரையர் - குமரன் மறவன்
செய்தி - இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார்
ஆண்டறிக்கை எண் - SII Volume 8, No. 298, ARE 355 of 1924
எண் 5
கல்வெட்டு இருக்குமிடம் - லால்குடி
கோயில் பெயர் - சப்தரிஷீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு - 5
பழுவேட்டரையர் - குமரன் மறவன்
செய்தி - 'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 19, No. 146
எண் 6
கல்வெட்டு இருக்குமிடம் - திருப்பழனம்
கோயில் பெயர் - மகாதேவர் கோயில்
சோழமன்னர் - முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு - 6
பழுவேட்டரையர் - குமரன் மறவன்
செய்தி - குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 19, No. 172
எண் 7
கல்வெட்டு இருக்குமிடம் - கீழப்பழுவூர்
கோயில் பெயர் - திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் - முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு - 12
பழுவேட்டரையர் - கண்டன் அமுதன்
செய்தி - வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்தி
ஆண்டறிக்கை எண் - ARE 231 of 1ட்926
எண் 8
கல்வெட்டு இருக்குமிடம் - திருவையாறு
கோயில் பெயர் - பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு - 14
பழுவேட்டரையர் - கண்டன் அமுதன்
செய்தி - இது 'வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 551
எண் 9
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - சுந்தரசோழர்
ஆட்சியாண்டு - 5
பழுவேட்டரையர் --மறவன் கண்டன்
செய்தி - இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறது
ஆண்டறிக்கை எண் - SII volume 5, No. 679
எண் 10
கல்வெட்டு இருக்குமிடம் - கீழப்பழுவூர்
கோயில் பெயர் - திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் - உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு - 9
பழுவேட்டரையர் - மறவன் கண்டன்
செய்தி - இவரது மறைவைத் தெரிவிக்கிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 19, No. 237, 238
எண் 11
கல்வெட்டு இருக்குமிடம் - உடையார்குடி
கோயில் பெயர் - அனந்தீசுவரர் கோயில்
சோழமன்னர் - உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு - 12
பழுவேட்டரையர் - கண்டன் சத்ருபயங்கரன்
செய்தி - இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான்
ஆண்டறிக்கை எண் - SII Volume 19, No. 305
எண் 12
கல்வெட்டு இருக்குமிடம் - கீழப்பழுவூர்
கோயில் பெயர் - திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் - உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு - 13
பழுவேட்டரையர் - கண்டன் சுந்தரசோழன்
செய்தி - இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக ஒருமண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர்
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 681
எண் 13
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு - 15
பழுவேட்டரையர் - கண்டன் மறவன்
செய்தி - நிவந்தம் அளித்தது
ஆண்டறிக்கை எண் - SII Volume 8, No. 201
எண் 14
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - முதலாம் இராஜராஜர்
ஆட்சியாண்டு - 3
பழுவேட்டரையர் - கண்டன் மறவன்
செய்தி - கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 671
எண் 15
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - முதலாம் இராஜராஜர்
ஆட்சியாண்டு - 15
பழுவேட்டரையர் - கண்டன் மறவன்
செய்தி - இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவே
ஆண்டறிக்கை எண் - ARE 363 of 1924
எண் 16
கல்வெட்டு இருக்குமிடம் - கீழப்பழுவூர்
கோயில் பெயர் - திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் - முதலாம் இராஜேந்திரர்
ஆட்சியாண்டு - 8
பழுவேட்டரையர் - யாருமில்லை
செய்தி - பழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 665
பழுவேட்டரையர்களின் ஆட்சி நூற்று முபத்தொன்பது ஆண்டுகள்
தமிழகத்தில் கி.பி. 880இல் நிகழ்ந்த திருபுறம்பியம் போர் சோழப் பேராட்சிக்கு அடிகோலியது. விஜயலாயன், முதலாம் ஆதித்தன், முதலாம் பராந்தகன் போன்ற சோழ வேந்தர்கள் ஆட்சி எல்லைகளை விரிவாக்கும் பணியில் முனைந்து ஈடுபட்ட போது அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து பங்காற்றியவர்களுள் பழுவூர் அரசர்கள் முதன்மை பெற்றவர்கள்.
திருச்சி செயங்கொண்டம் சாலையில் 54 கிலோமீட்டர் தொலைவில் பழுவூர் உள்ளது. கல்வெட்டுகளில் மன்னுபெரும் பழுவூர், அவனிகந்தர்ப்பபுரம், சிறுபழுவூர், என்று கூறப்பட்டுள்ள இவ்வூர் இந்நாளில் மேலப்பழுவூர்,கீழையூர்,கீழப்பழ்வூர் என்று அறியப்படுகின்றன. இப்பழுவூர் மண்டலத்தை ஆண்டவர்களே பழுவேட்டரையர்கள். முதலாம் ஆதித்தன் (கி.பி. 871 - 907) காலத்தில் முதல் முறையாக வரலாற்று பாதையில் பார்வைக்கு வரும் இவர்கள் முதலாம் இராசேந்திரனின் (கி.பி. 1012 - 1044) ஆட்சிக்கால முற்பகுதியில் வரலாற்றுத் தொடரற்று போய் விடுகிறார்கள்.
பழுவேட்டரையர்களின் கால வரலாற்றை அறிய அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகளும் பழுவூர் கல்வெட்டுகளும் உதவுகின்றன. அன்பில் செப்பேடு மூலம் முதலாம் ப்ராந்தக சோழனின் மனைவி சேர அரசரான பழுவேட்டரையரின் மகள் என்றும் இவர்களுக்கு பிறந்தவனே அரிஞ்சய சோழன் என்பதனையும், திருச்சென்னம்பூண்டி திருச்சடைமுடி மகாதேவர் கோயிலில் காணப்படும் முதலாம் ப்ராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டு கல்வெட்டு மூலம் பழுவேட்டரையரின் மகள் பெயர் அருமொழிநங்கை என்றும் அறிய முடிகிறது.
முதலாம் ப்ராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் பழுவூர் அரியணையில் இருந்தவர்கள் குமரன் மறவனும், கண்டன் அமுதனுமே ஆவர். இவ்விருவருள் ஒருவரே முதலாம் ப்ராந்தக சோழனின் தேவியான அருமொழிநங்கையின் தந்தையாக இருத்தல் வேண்டும்.
கண்டன் மறவனைப் பற்றிய வரலாற்று தகவல்களை 17 கல்வெட்டுகள் வழி பெறமுடிகிறது. இவற்றுள் நான்கு உத்தம சோழனின் 15ம் மற்றும் 16 ம் ஆட்சியாண்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.12 கல்வெட்டுகள் முதலாம் இராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டிலிருந்து பதினைந்தாம் ஆட்சியாண்டுவரையிலான காலகட்டத்தில் பொறிக்கப்பட்டவையாகும். முதலாம் இராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் இடையில் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கின்றது. இம்மன்னனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டு பழுவேட்டரையர் கண்டன் மறவனின்ன் வீரர் குழாமொன்று இளைய இரண்முகராமன் படை என்ற பெயரில் செயல்பட்டதாக அறியமுடிகிறது.
முதலாம் இராசராசனின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மேலப்பழுவூரில் பழுவேட்டரையர் கண்டன் மறவன் ஒரு கோயில் எடுப்பித்த செய்தியைத் த்ருகிறது.
முதலாம் ஆதித்தர் காலத்தில் தொடங்கிய சோழ சேர தொடர்புகள் தொடர்ந்து வலிமை பெற்று வந்தமை பற்றிய பல் சான்றுகள் கல்வெடுகளில் கிடைக்கின்றன. அரிஞ்சயரின் சேர மனைவியான ஆதித்தன் கோதைப் பிராட்டியும், சுந்தர சோழனின் சேர மனைவியான ப்ராந்தகன் தேவியம்மனும்
சேர சோழ மணவினைகள் தொடர்ந்து நிகழ்ந்தமைக்கு சான்றுகளாய் அமைகிறார்கள்.
முதலாம் இராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டிலிருந்து இத்தொடர்புகள் சிதிலமடைய தொடங்கின. காந்தளூர்ச் சாலை போரே சேர சோழ நட்புறவை முறித்த முதல் நிலை என்பதனை திருக்கோவலூரிலுள்ள கல்வெட்டும், தஞ்சை இராஜராஜீசுவரத்திலுள்ள முதலாம் இராசராசனின் கல்வெட்டும் உறுதிப்படுத்துகிறது. முதலாம் இராசராசன் கலத்தில் தொடங்கிய இச் சேர சோழ போர்கள் முதலாம் இராசேந்திரனின் காலத்தில் உச்சமடைந்து
முதலாம் இராசேந்திரனின் ஆறாம் ஏழாம் ஆட்சியாண்டுகளில் சேரரின் முடியையும் செங்கதிர் மாலையையும் கைப்பற்றிக் கொண்டதுடன் சேர சோழ நட்புறவு முழுவதுமாய் அழிந்து பகையாய் வளர்ந்தது. இதுவே பழுவேட்டரையர்களின் ஆட்சி முடிவுற்றமைக்கு முதன்மைக் காரணமாகும்.
நூற்று முபத்தொன்பது ஆண்டுகளாய் தமிழகத்தின் மையப்பகுதியில் சோழர்களின் எழுச்சியோடு இணைந்து வளர்ந்து செழித்து அவர்களோடு மணவினைத் தொடர்பு கொண்டு வாழ்ந்திருந்த பழுவூர் மரபு அரியணை இழந்து ஆட்சியிழந்து போனாலும் அவர்கள் விட்டுச்சென்ற கலைகோயில்கள் காலம் உள்ளளவும் பழுவேட்டரையர்களின் பெருமைகளைப் பறை சாற்றி நிற்கும்
சரித்திரத்தில் பழுவேட்டரையர்கள்

பெரிய பழுவேட்டரையர் (சோழ தனாதிகாரி சுந்தர சோழர் காலம்)
பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்பட்டினங்களில் சுங்கத் திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்.
பழுவூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தவர்களை பழுவேட்டரையர்கள் என்று அழைக்கின்றார்கள். சுந்திர சோழரின் ஆட்சி காலத்தில் பழுவூர்ச் சகோதரர்கள் இருவர் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள்.காலாந்தகக் கண்டர் சின்ன பழுவேட்டரையர் எனவும், கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் எனவும் வழங்கப்படுகிறார்கள்.
பெரிய பழுவேட்டரையர் இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராகவும் விளங்கியவர். சோழப்பேரரசை சுந்திர சோழனுக்குப் பிறகு மதுராந்தகன் ஆள்வதற்காக சம்புவரையர் அரண்மனையில் ரகசிய கூட்டம் நடத்தினார். மதுராந்தகனை நாடெங்கும் நடந்த கூட்டங்களுக்கு ரகசியமாக அழைத்துச் சென்றார். சோழப்பேரரசின் சிற்றரசர்களுடன் நடந்த கூட்டங்களில் மதுராந்த தேவனுக்கு ஆதரவு திரட்டினார்.

சின்னப் பழுவேட்டரையர் (தஞ்சாவூர் கோட்டைக் காவல் தளபதி)
சின்னப் பழுவேட்டரையர் என அழைக்கப்படும் காலாந்தகக் கண்டர் சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதியாக விளங்கியவர்.
காலாந்தகக் கண்டர் என்பது இவருடைய இயற்பெயராகும். இவருடைய அண்ணனை கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் என்று மக்களால் அழைக்கப் பெருகிறார். காலாந்தகக் கண்டரின் கீழ் தஞ்சை அரண்மனை பொக்கிசமும், தானிய அறையும் இருந்தது. மேலும் பாதாளச் சிறையொன்றினையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் நிர்வகித்து வந்தார்.
இளம் வீரர்களை கண்டால், அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து தன்னுடைய படையில் இணைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழர்உடல்நலமின்றி இருக்கும் போது, பலத்த காவல் புரிந்து கோட்டையைப் பாதுகாத்து வந்தார். பெரிய பழுவேட்டரையரைக் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடாதவர்,

அதியமான் நெடுமான் அஞ்சி
அதியமான் கோட்டம்
அதியமான் நெடுமிடல்
சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர்.
இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் இறந்தது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. இக் கல்வெட்டு அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிடுகிறது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.
அதியமான் நெடுமான் அஞ்சி
தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.
அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.
நெடுமான் அஞ்சியின் மனைவி நாகையார் சிறந்த புலவர்.
அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.
மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு தென்னார்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூரிலிருந்து பதினாறு கல் தொலைவில் ஜம்பை என்ற ஊர் உள்ளது. இவ்வூரை திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம். இவ்வூர் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. சுற்றிலும் பலகுன்றுகள் உள்ளமையால் இது பார்ப்பதற்கு இனிமையான சூழ்நிலையில் உள்ளது. பண்டைய கல்வெட்டுகள் இவ்வூர் "வாணகோப்பாடி நாட்டில்" இருந்தது எனக் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது. ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி இக்கல்வெட்டின் சிறப்புதான் என்ன? அதில் உள்ள இரண்டு சொல் தொடர்கள் "ஸதியபுதோ" என்பதும் "அதியந் நெடுமாந் அஞ்சி" என்பதே ஆகும்.
தமிழக வரலாற்றுக்கு மட்டும் இக்கல்வெட்டு அரும்செய்திகளை அளித்துள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்திய வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை அளித்துள்ளது இக்கல்வெட்டு. அதியனை "ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி" என்று அழைக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் தனது கல்வெட்டுகளில் சோழர், பாண்டியர், கேரளபுத்ரர், ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை. அங்கெல்லாம் பெளத்த தருமம் திகழ அவன் வகை செய்தான். அசோகன் குறிக்கும் ஸத்யபுத்ரர் யார் என்று இது வரை தெளிவாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் வாய் மொழிக் கோசர் என்பவராய் இருத்தல் கூடும் எனச் சிலர் கூறினர். காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாயிருக்கக் கூடும் என்று சிலர் கருதினார். மகாராஷ்டிரத்தில் ஸத்புத்ரர் என்போர் உண்டு. அவர்களாயிருக்கக் கூடும் என்போரும் உண்டு. ஸத்யமங்கலம் இவர் பெயரால் வந்தது என்றனர் சிலர். ஸதியபுதோ என்பவர் அதியமான்களாக இருக்கக்கூடும் என்று ஊகித்தவர்களும் உண்டு. இப்பொழுது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் ஸத்யபுத்ரர்கள் அதியமான்கள் தாம் எனத் திட்டவட்டமாக தெளிவாக்கிவிட்டது. அதியனை பொய்யா எழினி (சத்யபுத்ரர்) எனப்புறம் கூறும். எவ்வளவு சிறப்பான கல்வெட்டுப் பாருங்கள்! ஓரே வரியுள்ள இக் கல்வெட்டுத்தான் எவ்வளவு செய்திகளை வரலாற்றுக்கு அள்ளி அள்ளி வீசுகிறது. அவனைப் பாடிய ஔவை, பரணர், கபிலர், மாமூலனார், நத்தத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்தனார் போன்ற ஈடிலாப் புகழ் பெற்ற புலவர்கள் இக்கல்வெட்டு எழுதிய போது வாழ்ந்தவர்கள், கண்முன் நிற்பர். ஓரி, காரி, குமணன், பேகன், போன்ற வள்ளல்களும், கரிகால் பெருவளத்தான், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, எனும் சோழ மன்னர்களும் செல்வக்கடுங்கோ, சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற சேரப் பேரரசர்களும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரும் வாழ்ந்த காலத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.
தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்க பாடல் கூறிற்று என்று பார்த்தோம். ஔவையும், பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைப் பாடினார்கள் என்றால் என்ன சிறப்பு! அந்த திருக்கோயிலூருக்கு மிக அருகிலேயே இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றால் அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்தி கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவல்லவா! அவன் திருக்கோயிலூரை எறிந்ததும் உண்மை, ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று என்ன வேண்டும். அதியன் சிவனடியை வணங்கிய போதும், அவன் எவ்வாறு எல்லாச் சமயங்களையும் போற்றியிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. அது மட்டும் தானா கல்வெட்டு "அஞ்சி ஈத்த பாளி" என்கிறது ஈதல் கொடுத்தல் என்னும் பொருளில் ஈத்த என்ற சொல் அப்படியே சங்கப் பாடலில் அதுவும் அதியமானைப் பற்றிய பாடலிலேயே பயன்பட்டுள்ளது. "ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே" என்று கூறும் ஒளவையின் பாடல்.
கடையேழு வள்ளல்"அதியமான் நெடுமான் அஞ்சி"
அதியமான் நெடுமான் அஞ்சி” கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் “அதியமான் பொகுட்டெழினி”. அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர். தகடூர் என்பது இன்றைய தருமபுரியை குறிக்கிறது. தருமம் செய்வது கடமை என கொண்ட அதியமானின் ஊர் தருமபுரி என அழைக்கலாயிற்று. கரும்பு பயிரிடுதலை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் அளித்தவர் இவரே. அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர்தான் அவ்வைக்கு கனி கொடுத்தவர். இவருடைய வழித்தோன்றல்கள் அனைவருமே அதியமான் என பெயர் கொண்டவர்கள்தாம். தொண்டைமான் போல. சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று
அதியமான் நெடுமானஞ்சி – புறநானூறு ஔவையார் 87 – 95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390 பெருஞ்சித்திரனார் 208
அதியமான் பொகுட்டெழினி
சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு குறுநில மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.
அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை.
இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
அதியமான் மகன் பொகுட்டெழினி – ஔவையார் 96, 102, 392
இராசராச அதியமான்
12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட சிற்றரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் குறுநில மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன
இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது. தர்மபுரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன
விடுகாதழகிய பெருமாள்
அதியர் மரபைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர்நாட்டை ஆட்சி செய்ததான். இவன் இப் பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது.
இவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும் சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது.
விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது.
விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்
அதியமான் கோட்டை
அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை களிமண்ணால் வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை ஒரு மிக முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும்.
இந்த கோட்டையை சுற்றிலும் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை இந்த பகுயில் இருப்பவர்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். மன்னர் அதியமான் காலத்தில் அவரது அரசின் தலைநகராக தர்மபுரியும், அவரது கோட்டையாக இந்த அதியமான் கோட்டையும் விளங்கி இருக்கிறது. இந்த அதியமான் கோட்டைக்கு செல்ல ஏராளமான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

ஒளவையும் அதிசய நெல்லிக்கனியும்
ஔவைக்கு நெல்லிக்கனி
அதியமான் நெடுமான் அஞ்சி, தகடூரை ஆண்டு பெரும் வீரன். இவர் ஒளவையிடம் அன்பு பாராட்டி அவரால் பல பாடல்கள் பாடப்பெற்ற நல்லவர், வல்லவராவர். வீரத்திலும், வள்ளல் குணத்திலும் மிகவும் புழ்பெற்றவர் இவர். ஒளவையின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரால் பல பாடல்கள் பாடப்பெரும் வாய்ப்புப் பெற்றவர்.
இவரின் புகழ்கண்டு பொறாமையுற்ற சேரசோழபாண்டியரும் பிற குறுநில மன்னரும் ஒன்று கூடி மாநாடு நடத்தி இவர் மீது யுத்தம் நடத்த திட்டங்கள் தீட்டினர். அப்போது அங்கு யதேச்சையாக வந்த ஒளவை விடயம் அறிந்து அவர்களுக்கு அறிவுரை பகர்கின்றார். மிகவும் நல்லவனான அதியமான் நெடுமான் அஞ்சியை வஞ்சிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைகள் வரப்போவதில்லை, மாறாக ஒரு நல்லவனை அழித்த அவப்பெயர் மட்டுமே மிஞ்சும் எனப் பலவாறாக எடுத்துக்கூறி அவர்களின் போர்த்திட்டத்தைக் கைவிடச் செய்கிறார். ஒளவையின் பால் மதிப்புக்கொன்ட அவர்களும் உன்மையை உணர்ந்து போரிடும் எண்ணத்தைக் கைவிடுகின்றனர். இதை குறிப்பிடும் ஒளவையின் பாடல் இதோ...
திணைः- தும்பை துறைः- தானைமறம்
களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே. (புறநானூறு 87)
இவ்வாறிருக்க மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியை காண ஒரு நாள் ஒளவை தகடூருக்கு வருகிறார். ஒளவையை அன்போடு வரவேற்று உபசரிக்கின்றான் மன்னன் அதியமான். அப்போது மன்னன் ஒரு நெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்து உண்னும்படடி வற்புறுத்துகிறான், ஒளவையும் அக்கனியை உண்டார். அதன் வித்தியாசமான் சுவையில் அதிசயித்த ஒளவை, அதியமானிடம் அக்கனியைப்பற்றி விசாரிக்க. அது ஓர் அற்புத நெல்லிக்கனி என்றும் அதை உண்ணும் பேறு பெற்றவர் நீண்ட நெடுங்காலம் மரனமிலாப் பெருவாழ்வு பெற்று வாழ்வார் எனும் உண்மையை உரைக்கின்றான். அதிசயித்த ஒளவை நீண்ட காலம் வாழ வேண்டிய மன்னனே, வயதான எனக்கு எதற்கு இக்கனி, நீயல்லவோ இக்கனியை உண்டு நெடுங்காலம் வாழ வேண்டும் எனக் கேட்கிறார், அதற்கு மன்னன் அதியமான் கூறுகிறார், ஒளவை பிராட்டியாரே எனை போன்ற ஒரு மன்னன் நீண்ட காலம் வாழ்வதைக் காட்டிலும் உமைப் போன்றதொரு தமிழ்ப்புலவர் நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்கு தொன்டு செய்வதே சாலச் சிறந்தது என்று. அதன் பின்னர் ஒளவை நெடுங்காலம் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது, அவரோடு இன்றளவும் மாவீரனும், சிறந்த தமிழ் நெஞ்சனுமாகிய அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழும் ஒளவையுடன் வாழ்கிறது
ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.
(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)
பொருள்
மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு கொடுத்தான். இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. இக் கல்வெட்டு அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிடுகிறது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.
அதியமான்
அதிகன்
மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் [99-103]
கருத்துரை
மேகம் தங்கும் மலையில் மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரலில் அழகிய நெல்லி மரத்தில் அமிழ்தாக விளைந்த இனிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்தவன். பகைவரை அழிப்பதற்கு உறுதியோடு எழுந்த சினத்தீயும், ஒளி மிக்க நெடிய வேலும் ஆரவாரமிக்க கடல் போன்ற படையும் கொண்டவனுமாகிய அதிகனும்,
சொற்பொருள் விளக்கம்
மால் – மேகம், வரை – மலை, கமழ்பூஞ்சாரல் – மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரல், கவினிய – அழகிய, நெல்லி – நெல்லி மரத்தில், அமிழ்து விளை – அமிழ்தாக விளைந்த, தீம்கனி – இனிய கனி, ஔவைக்கு – ஔவைப்பிராட்டிக்கு, ஈந்த – வழங்கிய, உரவுச்சினம் – உறுதியோடு எழுந்த சினம், கனலும் – சினத்தீயும், ஒளி திகழ் – ஒளிமிக்க, நெடுவேல் – நெடிய வேலும், அரவக்கடல்தானை அதிகனும் – ஆரவாரம் மிக்க கடல் போன்ற படையினையுடைய அதிகனும்,

மலையமான் காசுகள்
மலையமான் காசுகள்
திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

மலையமான்
"கபிலர் குன்று" கபிலக்கல்
மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
புகழ்பெற்ற மன்னனானகடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிகாரியும் சேதிராயர்குலத்தினரே.மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் [திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு]அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.
கபிலர் வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார். நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை என்ற இரு குழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது[ சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர் இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில்வைக்கப்பட்டது.
கபிலர் குன்று
கபிலர் வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார். அவன்பால் மட்டுமின்றி அவனது
பறம்பு மலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது சால்பையும் பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தே என்றென்றும் நிலைக்கச் செய்தவை. இவர், மூவேந்தரும் வஞ்சகமாக பாரியை கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி வெதும்பி பாடிய செய்யுட்கள், கற்போரை துயரக்கடலுள் சேர்த்துவன ஆகும். பாரிக்கு பின் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களை சென்று கபிலர் வேண்டியதைப் புறநானூறு (200,202) தெரிவிக்கிறது. இறுதியில், பாரி மகளிரைத் தக்க சான்றோரிடம் அடைக்கலம் தந்துவிட்டு, தாமும் வடக்கிருந்து உயிர் நீத்து (புறம் 236, அடிக்குறிப்பு) தன் நண்பனான பாரியுடன் விண்ணகம் சேர்ந்தார்.
திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். திருக்கோவிலூர்பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.
கபிலர் குன்றை அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று" என்று அழைக்கப்பட்டது. இவ்விடம் தற்போது தமிழக அரசின்தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது. கட்டட அமைப்பை கருத்தில் கொண்டு, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் கடவுள் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகு ஊட்டப்பட்டு உள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை. பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது (புறம் 236, அடிக்குறிப்பு) திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,"செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது" (தெ.இ.க. தொகுதி 7, 863) எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டில் இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.
சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்
தமிழகத்தின் பெருமைவாய்ந்த இன குழுக்களில் முக்குலத்தின் கள்ளர் பெருங்குடி முக்கியமானது ஆகும்.சேதிராயர் என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி(Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது.
சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர்.
திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார்
கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.
தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு} என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் தமிழ்நாட்டின் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது. தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். இதற்கு வேறு ஏதும் ஆதாரம் உண்டா ?
உண்டு.
சொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும்.
சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும்.
ராயர் -> அரையர் -> அரைசர் -> அரசர்
இதன்படி சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர் என நேரடி பொருள் தருகிறது.
சேதிராயர் என பட்டபெயர் தரித்திருப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள்.
இதற்க்கு மேலும் ஆதாரம் உண்டு.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் பேருரையளராக பணிபுரியும் முனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதை கீழே காணலாம். " திரு விசைப்பாவின் திரு கடைகாப்பு பதிகம் பாடிய சேதிராயர் " ..........
" ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை நாயனாரை நயந்துரை செய்தன " என்ற அடிகள் 10 ஆம் பாடலில் இடம் பெறுகின்றன.
இங்கு சேதிராயர் " சேதிபர் கோன் " என விளிக்கப்பட்டுள்ளனர்.
இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.
சேதி என்பது குல பெயர் ஆகும்.
" முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான்என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
திருக்கோவிலூரில் வாழ்ந்த மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது
என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும்.
ஆனால் வரலாறு என்பது இலக்கிய ஆதாரத்தை மட்டும் எடுத்து கொள்ளவதில்லை. மேலும் நாணயம், கல்வெட்டு போன்றவற்றையும் துணை கொள்கிறது.
அதன்படி கல்வெட்டு ஆதாரம் ஏதும் உண்டா? எனில் உண்டு.
1. இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது. என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார்.
2. விழுப்புரம் மாவட்டத்தில் நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து .......................இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது.
மேலும் சில கருத்துக்கள்
போத்தப்பிராயர், காடவராயர், பல்லவர்(பல்லவதரையர்), தொண்டையர், சம்புவரையர், இலடராயர், மலைமான்(சேதிராயர்), வானகோவைரையர், முனையதரையர், ஓயமானர், முத்தரயர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பல்குடி சிற்றசர்கள் சோழர்களுக்கு அடங்கியவர் என்று சில குறிப்புகள் கூறுகின்றது. ஆனால் இவர்கள் (சேதிராயர்) சூரியகுலத்தினரான சோழர் குலத்தின் கிளை குலத்தினர் ஆவார்கள். மேலும்
சர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குரப்பட்டுள்ளது.
ராயர் எழுவராவர்
1 . சேதிராயர் 2 . காலிங்கராயர் 3 . பாணதிரியர் 4 . கொங்குராயர் 5 . விசையராயர் 6 . கனகராயர் 7 . கொடுமளுர்ராயர் என திரு ந. மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
நாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது.
அவர்கள் தமிழ்நாட்டில் திருகோவிலூர், மற்றும் கிளியூர் என்ற நகரங்களை தலைநகரமாக கொண்டு நாடு நாடான செதினாட்டை ஆட்சி செய்தனர் என்பதும் அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.
சேதிராயர்

1. சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர்.
2. திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார்
3. கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.

இதன்படி
சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர் என நேரடி பொருள் தருகிறது.
சேதிராயர் என பட்டபெயர் தரித்திரிப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள்.
இதற்க்கு மேலும் ஆதாரம் உண்டு.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் பேருரையளராக பணிபுரியும் முனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதை கீழே காணலாம். " திரு விசைப்பாவின்
திரு கடைகாப்பு பதிகம்
பாடிய சேதிராயர் "
" ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை
நாயனாரை நயந்துரை செய்தன " என்ற அடிகள்
10 ஆம் பாடலில் எடம் பெறுகின்றன.
இங்கு
சேதிராயர் " சேதிபர் கோன் " என விளிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் வரலாறு என்பது
இலக்கிய ஆதாரத்தை மட்டும் எடுத்து கொள்ளவதில்லை. மேலும் நாணயம், கல்வெட்டு போன்றவற்றையும் துணை கொள்கிறது.
அதன்படி
கல்வெட்டு ஆதாரம் ஏதும் உண்டா? எனில் உண்டு.

2. விழுப்புரம் மாவட்டத்தில்
நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது.
மேலும் சில கருத்துக்களை பார்ப்போம்.
போத்தப்பிராயர், காடவராயர், பல்லவர்(பல்லவதரையர்), தொண்டையர், சம்புவரையர், இலடராயர், மலைமான்(சேதிராயர்), வானகோவைரையர், முனையதரையர், ஓயமானர், முத்தரயர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பல்குடி சிற்றசர்கள் சோழர்களுக்கு அடங்கியவர் என்று சில குறிப்புகள் கூறுகின்றது.
ஆனால் இவர்கள் (சேதிராயர்) சூரியகுலத்தினரான சோழர் குலத்தின் கிளை குலத்தினர் ஆவார்கள்.
மேலும்

ராயர் எழுவராவர்:
1 . சேதிராயர்
2 . காலிங்கராயர்
3 . பாணதிரியர்
4 . கொங்குராயர்
5 . விசையராயர்
6 . கனகராயர்
7 . கொடுமளுர்ராயர்
என திரு ந. மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று, கபிலர் குன்று" . சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.
நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன்என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர்.
இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.
தற்போது சேதிராயர் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னம நாட்டிலும் , திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டிலும் மிகுந்து உள்ளனர்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதியரசன் மகாமேகவாகன காரவேலன், உதயகிரி - கந்தகிரி என்று வழங்கப்படும் மலைப்பகுதியிலுள்ள 'ஹத்தி கும்பா' (ஆனைக் குகை) என்ற குடைவரையில் தன்னுடைய வெற்றிகளைப் பறைசாற்றும் கல்வெட்டினைப் பொறித்து வைத்துள்ளான்.
தமிழ்நாட்டுக் கூட்டணி எனப் பொருள்படுகின்ற ‘த்ரமிர தேச சங்கதம்' பற்றி இக்கல்வெட்டுதான் குறிப்பிடுகிறது. காரவேலன் அக்கூட்டணியை முறியடித்துப் பாண்டிநாடு வரை சென்று முத்துக் குவியலைக் கவர்ந்து வந்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
காரவேலன், புராணங்களில் குறிப்பிடப்படும் சேதி அரச வம்சத்தவன் ஆவான். (மகாபாரதத்தில் இடம்பெறும்சிசுபாலன் சேதி வம்சத்தவன்.) இம்மன்னனுக்கும் ‘மலைய கந்த' குடியினர்க்கும் தாய் வழியிலோ, தந்தை வழியிலோ உறவு இருந்திருக்க வேண்டும்.
சங்ககாலத் தமிழகத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலையமான்களைச் சேதிபர் என்றும் மலையமான்களின் ஆட்சிப் பகுதியைச் சேதி மண்டலம் என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இம்மரபு சற்றுப் பிற்பட்டதாயினும் இது காரவேலனின் தமிழகப் படையெடுப்புக் காலத்தில் நிகழ்ந்த தொடர்பின் விளைவாகலாம்.
பாண்டி நாட்டின் மீது காரவேலன் நிகழ்த்திய தாக்குதல் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் திருவிளையாடற் புராணத்தில் மெய்க்காட்டிட்ட படலத்தில், வடபுலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்கிற கிராதர் கோமானைக் (கிராதர் என்று மலைக் குறவர்களைக் குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தைச் சேர்ந்த பாண்டியர் படைத்தலைவன் எதிர்கொள்ள நேர்வது குறிப்பிடப்படுகிறது. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பான பதிவே எனத் தோன்றுகிறது
சேதி நாடு. சில வரலாற்று குறிப்புகள்
1. தமிழகச் சிற்றரசர் பரம்பரைகளில் மலையமான் வம்சம் முக்கியமானது. தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு} என்று அழைத்தனர்.
நடுநாட்டில் திருக்கோவலூரைக் கோநகராகக்கொண்டு மலையமான்கள் ஆண்டுவந்தனர். சங்க காலத்தில் இவர்கள் பலமிக்க வம்சத்தினராக விளங்கினர்.மலையமான் திருமுடிக்காரி என்பனிடம் தான் ஔவையார் தகடூர் அதியமானின் சார்பாகத் தூது சென்றார்.
சோழர்கள் காலத்திலும் மலையமான்கள்இருந்தனர். அப்போது அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளையினராக விளங்கினர். அவர்களில் 'கிளியூர் மலையமான்கள்' ஒரு பிரிவு.
2. கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி ‘விருத்தாசலம், நெய்வேலி, வடலூர், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, நடுநாடு என்று சொல்லப்படுகின்ற இடங்களில் வாழும் மக்களின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு சொற்களையும்
சேகரித்துள்ளது.
http://abedheen.wordpress.com/2009/03/21/kanmani_akarathi/
3. இத்திருத்தலத்திற்கு சேதிநாடு, நடுநாடு என பல பெயர்கள் உண்டு.
4. பாடல் பெற்ற சிவதலங்கள் நடுநாடு
1. திருநெல்வாயில்அரத்துறை
2. திருத்தூங்கானைமாடம்
3. திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
4. திருச்சோபுரம் (தியாகவல்லி)
5. திருவதிகை
6. திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
7. திருநெல்வெண்ணெய்
8. திருக்கோவலூர்
9. திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)
10. திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
11. திருமாணிக்குழி
12. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
13. திருபுறவார்பனங்காட்டூர்
14. திருஆமாத்தூர்
15. திருவண்ணாமலை
16. திருமுண்டீச்சுரம்
17. திருக்கூடலையாற்றூர்
18. திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
19. திருநாவலூர் (திருநாமநல்லூர்)
20. திருஇடையாறு
21. திருவெண்ணெய்நல்லூர்
22. திருத்துறையூர் (திருத்தளூர்)
5. விழுப்புரம் மாவட்டம் வரலாறு
தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.
திருமுனைப்பாடிநாடு.
சேதிநாடு.
மகதநாடு.
சகந்நாதநாடு.
சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர். பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது.
பாரி மகளிரை மணந்த தெய்வீக மன்னனும் திருக்கோவிலூரை ஆண்டவன். கடைசி பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் கெடிலத்தின் தென்கரையில் உள்ள சேந்த மங்கலத்தில் கி.பி.1243 முதல் 37 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டான் என அவன் கல்வெட்டு உரைக்கிறது.
6. கள்ளர் சரித்திரம், மூன்றாம் அதிகாரம்.
அரையர்களின் முற்கால நிலைமை
இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டகல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:-
கச்சியராயன்
காடவராயன்
காடுவெட்டி
காலிங்கராயன்
சீனத்தரையன்
சேதிராயன்
சோழகங்கன்
சோழகோன்
தொண்டைமான்
நந்தியராயன்
நாடாள்வான்
பல்லவராயன்
மழவராயன்
மேல்கொண்டான்
வாண்டராயன்
வில்லவராயன் முதலியன.
7. திருநெல்வெண்ணெய் (நெய்வெணை)
கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்குலோத்துங்க சோழனின் 48-வது ஆண்டுக் காலத்திலிருந்த கீழையூர் இராசேந்திர சோழ சேதிராயர்என்பவர் இக்கோயில் நடராசமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார் என்ற குறிப்பும் உள்ளது. (ஆனால் இன்று கோயிலில் நடராச மூர்த்தமே இல்லை.)
சேதிராயர் முனைவர் மு. பழனியப்பன்
1. ஒன்பதாம் திருமுறை- திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமர், சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்களால் பாடப்பெற்றதாகும்
2. திருவிசைப்பாவின் நிறைவுப் பதிகமாக அமைவது சேதிராயர் அருளிய ’சேலுலாம்’’ எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம், தில்லைக் கோயில் இறைவனைப் போற்றிப் பாடுவதாக உள்ளது. இப்பதிகம் திருவிசைப்பாவின் ’திருக்கடைக்காப்புப் பதிகம்‘என்ற பெருமைக்கும் உரியதுமாகும்
3. சேதிராயர்
’’ஏயு மாறு எழில் சேதிபர் கோன் தில்லை
நாயனாரை நயந்துரை செய்தன‘‘
என்ற அடிகள் பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறுகின்றன. இங்கு சேதிராயர் ’சேதிபர்கோன்‘’என விளிக்கப் பெற்றுள்ளார். இதன் வழியாக இவர் அரசர் என்பது தௌ¤வாகின்றது.
’சேதி’’ என்பது குலப்பெயர் ஆகும்.
8. முதற்குலோத்துங்கன்
முதற்குலோத்துங்கன் (1070-1120) காலத்தில்(லும்) இராசராசசேதிராயன், இராஜேந்திர மலையமான் என்று பட்டம் தரித்தவர்கள் திருக்கோவிறலூர், கிளியூர் ஆகிய நகரங்;களைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சேதிராயர் குறுநிலமன்னராய்ச் சோழரின் கீழ் வாழ்ந்தமை தௌ¤யப்படும். இவர்களுள் திருவிசைப்பாப் பாடியவ்ரும் ஒருவர்‘‘(மு. அருணாசலம், திருவிசைப்பா திருப்பல்லண்டு பாவும் பயின்ற நிலையும், சென்னைப் பல்கலைக்கழகம், 1974, ப. 126-127) என்ற குறிப்பின்படி சேதிராயரின் மரபுவழி பெறப்படும்.
திருக்கோவலூரில் வாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரும் சேதி நாட்டைச் சார்ந்தவர் என்ற பெரியபுராணக் குறிப்பு இங்;கு ஒப்புநோக்கத்தக்கது. மேற்கண்டவற்றின் வழியாகச் சேதிராயர் திருக்கோவகரலூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சோழமன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு குறுநிலமன்னராக அரசாண்டவர் என்பது பெறப்படுகின்றது. இச்சேதிராயர் சைவ சமயம் சார்ந்து, தில்லைப்பதியை வணங்கி, திருமுறை தந்த பெருமைக்குரியவரும் ஆகின்றார்.
சேதிராயரின் பக்திச்சிறப்பு
இவர் தில்லையுள் உள்ள பெருமானைப் பதிகப் பாடல்தோறும் போற்றிப் பரவுகின்றார்
9. மலையமான் திருமுடிக்காரி

திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர்வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.
நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது
இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.

காடவராயர்
கள்ளர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர்.இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர் .பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு அவற்றில்
பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்.
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்.
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான்கிளையார்
தொண்டையர்
பல்லவராயர்
போன்றவை இன்றும் கள்ளர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.எடுத்துகாட்டாக புதுகோட்டைதொண்டைமான் அரசகுடும்பத்தை கூறலாம் ..இவர்களும் பல்லவர்களின் கிளை குலத்தவர்கள் தான் .இவர்களும் கள்ளர்கள் என்பதை உலகம் அறியும் .
முதலாம் கோப்பெருஞ்சிங்கன்
மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ் வேறு வகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.
முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்களும் பல கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.
ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னட நாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.
மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் கோப்பெருஞ்சிம்மன்.
1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாவான். சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்து சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.
இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாறு
திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
இத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.
பெயர் விளக்கம்
காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ வாகும்.ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.
ஆட்சிச் சிறப்பு
ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.
திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத் தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்
என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.
துறவுள்ளம்
மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.
இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவ நெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.
ஐயடிகள் யார்?
இந்நாயனார் பல்லவ மன்னர்களில் யாவர் என்பதையும் இவரது காலத்தையும் பேராசிரியர் திகு. க. வெள்ளை வாரணனார் விரிவாக ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார்.
சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்` எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார்.
முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.
விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.
பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.
இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

வேள் பாரி
பறம்புமலையை ஆட்சி செய்த மன்னன். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். இவர் குறுநிலமன்னர்களில் ஒருவர் ஆவார். பாரி வேளிர்குலத்தைச் சார்ந்தவர்; எனவே, இவரை 'வேள்பாரி' என்றும் அழைப்பர். பாரி பறம்பு மலையையும் அதனைச்சூழ்ந்த நாட்டையும் ஆண்டவர். இந்தப் பறம்புநாடு முந்நூறு(300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை இக்காலத்தில் 'பிரான்மலை' என்று வழங்குகின்றது. அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும். இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு. பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது. பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராக சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்து மதுரை செல்லும்வழியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; 'பொய்யாநாவிற்கபிலர்' என்று புகழப்படுபவர்.இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.
பாரி தமிழ்வேந்தர் மூவராலும் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். பாரிக்கு இருமகளிர் உண்டு.அங்கவை சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
வள்ளல்கள் எல்லோரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான்ஏறிவந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலால் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தன்ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற சுந்தரர் -'திருத்தொண்டத்தொகை' என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர்- பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப்பற்றிய பாடல்கள் 'புறநானூறு' என்னும் சங்கத்தொகை நூலில் உள்ளன. அவற்றை இனிக்காணலாம்.
தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர். பறம்புமலையை ஆட்சி செய்தகுறுநில மன்னனாக விளங்கிய பாரி வள்ளலின் பெருமை தமிழகம் முழுவதும் பரந்திருந்தது. கொடைத் திறத்திற்கு இவனையே ஒரு வரம்பாக எடுத்துக் காட்டினர் கவிஞர். “கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடினார் சுந்தரமூர்த்தி. இங்ஙனம் ஆன்றோர் புகழும் பேறு பெற்ற பாரி வள்ளல் சைவ சீலனாக விளங்கினான்.
அவ்வள்ளலுக்குரிய பறம்பு நாட்டிற் காணப்படும் பாரீச்சுரம் என்னும் சிவாலயம் அவன் எடுத்த திருக்கோயிலாகக் கருதப்படுகின்றது.120 பாரீச்சுரம் என்பது பாரியால் வழிபடப்பெற்ற சிவபிரான் கோயில் கொண்டதலம் என்ற பொருளைத் தரும். அப் பாரீச்சுரம் தேவாரப் பாடல் பெற்ற கொடுங் குன்றத்திற்கு அருகேயுள்ளது. எனவே, இக் காலத்திற் பிரான்மலை யெனப்படும் கொடுங்குன்றத்தைத் தன்னகத்தேயுடைய பறம்பு நாடே பாரியின் நாடென்பதும், அங்குள்ள பாரீச்சுரம் அவன் எடுத்த
திருக்கோயில் என்பதும் இனிது விளங்கும்.
வள்ளல்களிலியே இவர்தான் பெரிய வள்ளலாக சிறப்பு பெற்றிருக்கிறார். இவர் ஆண்ட நாடு பறம்பு மலை. தற்காலத்தில் பிரான்மலை என அழைக்கப்படுகிறது. இந்த பிரான்மலை இப்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் இருக்கிறது. உறங்காப்புளி என்னும் புளிய மரம் இங்கு விசேசம். சாதாரண புளியமரங்கள் இரவில் இலை மூடி உறங்கும். உறங்காப்புளி எப்பொழுதும் இலை திறந்தே இருக்கும். முல்லைக்கு தேர் கொடுத்தவன் என்று அறியப்பட்டவன்
வேள் பாரி
புறநானூறு – கபிலர் 105 – 111, 113 – 120, 236 –
வேள் பாரியின் பெண்கள் – 112

இருக்குவேளிர்குடி
கொடும்பாளூர் மூவர்கோயில்
விஜயாலயன் தோற்றுவித்த சோழப் பேரரசு தொடர்ந்து 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டது. இதற்குக் காரணம் அந்தச் சோழ மாமன்னர்கள் மட்டும் அல்ல. அவர்கள் காட்டிய திசைவழியில் ஈட்டிகளையும் வேல்களையும் ஏந்தி, தேர்பூட்டிப் படைநடத்தி உயிர்கொடுத்து வெற்றிக்கனி பறித்தோர் ஏராளம். ஏராளம். அவர்களில் சிலர் சிற்றரச மரபினர். இருக்குவேளிர், பழுவேட்டரையர், மழவரையர் எனப் பலகுறுநிலத்தலைவர்கள் படைதிரட்டி உதவியதால்தான் சோழமன்னர்களின் சாதனைகள் சாத்தியமாயின. அத்தகைய ஓர் சிற்றரசர்குடியே கொடும்பாளூரை தலைநகராகக் கொண்ட இருக்குவேளிர்குடி. இவர்களில் செம்பியன் இருக்குவேள், மகிமாலய இருக்குவேள், பூதிவிக்கிரமகேசரி எனப் பலதலைவர்கள் சோழர் படை நடத்தியவர்கள். இவர்கள் ஆண்ட தலைநகரம் கொடும்பாளூர் இன்றைய மதுரை – திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக கொடும்பாளூர்சத்திரம் என்ற பெயரில் இருக்கிறது. இவ்விடத்தில் இறங்கி சற்றே கிழக்காக இரண்டு கி.மீ தொலைவு சென்றால் கொடும்பாளூர் மூவர்கோயிலைக் காணலாம்.
இக்கொடும்பாளூர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளோடு தொடர்ந்த மதுரைப் பயணத்தின் போது ‘கொடும்பை மாநகர்க் கோட்டகத்தே’ தங்கியதாகச் சிலம்பிலே குறிப்பு உண்டு. கொடும்பையிலிருந்து மதுரைக்கு மூன்று பெருவழிகள் சிவபெருமானின் மூவிலைச் சூலம் போலப் பிரிந்து செல்வதாகவும் அக்குறிப்புக் கூறும். எனவே, நீண்ட காலமாகச் சோழநாட்டையும் பாண்டியநாட்டையும் இணைத்த பெருவழியில் அமைந்திருந்த கொடும்பாளூர் இருக்குவேளிரின் தலைநகராக அமைந்தது. அவர்கள் இங்கு தங்கள் ஆட்சியைத் தொடர்ந்து எல்லை காவலர்களாகவும் விளங்கினர். சோழர்களின் பல்லவருடனான போரிலும், ஈழப்போரிலும் பெரும்பங்காற்றினர்.
சோழ அரச குடும்பத்தினரோடு மண உறவும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன்தான் பூதிவிக்கிரம கேசரி என்னும் பெரும்வீரன். இரண்டாம் பராந்தகன் சுந்தரச்சோழனின் சமகாலத்தவன். அவனுக்கு இருமனைவியர். கற்றளிபிராட்டி, வரகுண நங்கை என்பது அவர்களின் பெயர்கள். பூதிவிக்கிரமகேசரியும், அவன் மனைவியர் இருவரும் சேர்ந்து எடுத்த கோயிலே மூவர் கோயில் என்பது. மூன்றும் சிவன் கோயில்களே. மூன்றும் ஒரே விதமான அமைப்பில் சிறிய இடைவெளிவிட்டு ஒரே வரிசையில் கட்டப்பட்டவை. மூன்று கோயில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்றும் கட்டப்பட்டது. ஆனால், இன்று முதல் கோயிலும், திருச்சுற்றும் முற்றிலும் அழிந்து இரண்டு கோயில்கள் மட்டுமே அதுவும் விமானம்(கருவறை உள்பட) மட்டுமே எஞ்சியுள்ளன. பிறமண்டபங்கள் எல்லாம் அழிந்துபட்டன. இவை சோழர்கோவில் கலைவரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாய்த திகழ்கின்றன.
சோழர்களின் கோயில்கட்டடக் கலைப்பாணியை ஆராய்ந்தவர்கள் அதனை முற்சோழர்பாணி, இடைச்சோழர்பாணி, பிற்சோழர்பாணி என மூவகைப் படுத்துவர். இதில் முற்சோழர்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்வது மூவர்கோயில். அதிட்டான வரியில் விரிந்த தாமரை இதழ்களும், உருள் குமுதமும், அதற்கும் மேலாக வரிசையாக அமைந்த யாளி வரியும் அமைத்து ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கோயில்களில் தேவகோட்டச் சிற்பங்களின் எழிலும் கலைநேர்த்தியும் கண்டோரைக் களிப்படையச் செய்வன. ஸ்தூபி வரை கல்லிலேயே கட்டப்பட்டுள்ளன. விமானத்தின் உள்கட்டமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்னோடியாய் அமைந்துள்ளது. இங்குள்ள அர்த்தநாரி, ஆடவல்லான், திரிபுராந்தகர் ஆகியோரின் கற்சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கவை. இங்குள்ள தமிழ், கிரந்தக் கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற பெயரில் தமிழகமெங்கும் வணிகம் செய்த குழுவினர் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. இதன் முக்கியத்துவம் கருதி இது வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.
நன்றி
சாந்தலிங்கம், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.

புதுக்கோட்டை அரச மரபினர் (தொண்டைமான்கள்)
சமஸ்தான பழைய அரண்மனை
புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் தொன்மையானதொரு பரம்பரையினர் ஆவார்கள் எனினும் தொன்றுதொட்டு வந்த அரச மரபினர் அல்லர். தமது வீரத்தாலும் தீரத்தாலும் நாடாள்வோராக உயர்ந்தவர்கள். இவர்கள் பழங்காலத்தில் தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம் எனப்படும் திருப்பதி மலைப் பகுதியில் இருந்த கள்ளர் மரபினர் வழி வந்தவர்கள்.
யானைப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கியவர்கள்.தலைநகரம் - புதுக்கோட்டை
வரலாறு - நிறுவிய ஆண்டு 1680
கலைக்கப்பட்டது 1947
அரசியலமைப்பு - தன்னாட்சி
மன்னர் - முதலாவது 1680–1730 இரகுநாத தொண்டைமான்
கடைசி 1928–1947 இராஜகோபால தொண்டைமான்
மொழிகள் - தமிழ், ஆங்கிலம்
மதம் - இந்து
தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் வரலாற்றுப் பின்னணியிலிருந்து மறைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம், அவர்களின் மேலாண்மைக்குட் பட்ட நாயக்கர் ஆட்சி முறை, இவற்றால் ஏற்பட்ட புதிய சூழ்நிலைகள், ஆகியவற்றின் காரணமாக வட தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள்(கி.பி 15ம் நூற்றாண்டிலிருந்து) தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு அதிக அளவில் குடிபெயரத் தொடங்கினர். அப்படி குடியேறிய இடங்களுள் திருச்சிக்கு அருகிலுள்ள அன்பில் கிராமம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இங்கிருந்த ஒரு பிரிவினர் குடிபெயர்ந்து புதுக்கோட்டையில் தற்போது ஆலங்குடியைச் சுற்றியுள்ள பிலாவிடுதி, வடுக்கலூர், கல்லாக்கோட்டை, கறம்பக்குடி, நெல்வேலி, நரங்கியம்பட்டு, அம்மணிப்பட்டு, பந்துவாக்கோட்டை, மங்கள் வெள்ளாள விடுதி ஆகிய ஊர்களில் குடியேறினர். இவர்களுள் கறம்பக்குடியில் குடியேறிய கள்ளர் வகுப்பினர், வீரத்திலும் கடின உழைப்பாலும் சிறந்து விளங்கினர். மேலும் இவர்கள் யானைபழக்குதல் போன்ற வீரசாகசங்களில் சிறப்புப் பெற்றிருந்தாலும், இப்பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசப் பிரதிநிதிகளின் படைகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்று செல்வாக்கு பெற்றவர்களாக விளங்கினர். இந்தப் பிரிவினரிலிருந்து தோன்றிப் புகழுடன் விளங்கியவர்களே தொண்டைமான் பரம்பரையினர்.
இவர்கள் கறம்பக்குடிப் பகுதியில் நாடாள்வோராக இருந்து படிப்படியாக தங்கள் ஆட்சிப்பகுதியை விரிவாக்கி, தற்போது புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்தூர், கந்தர்வக்கோட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கியப் பகுதிகளை, புதுக்கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். அப்போது "பல்லவரையன் சீமை" என்று வழங்கப்பட்ட நாட்டமைப்பில் அடங்கியிருந்த அப்பகுதிகள் பின்னர் புதுக்கோட்டை மன்னர்களது தனியரசு "புதுக்கோட்டை சமஸ்தானம்" என்று அழைக்கப்பட்டது.
புதுக்கோட்டை அரச மரபினர்
01. இரகுநாத தொண்டைமான் (1686 – 1730)
02. விஜயரகுநாதராய தொண்டைமான் (1730-1769)
03. இராயரகுநாத தொண்டைமான் (1769 – 1789)
04. ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் (1789 – 1807)
05. இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1807 – 1825)
06. ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் (1825 – 1839)
07. ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் (1839 – 1886)
08. ஹிஸ் ஹெனெஸ் ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886 - 1928)
09. ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் (1928 - 1948).
00. மாட்சி பொருந்திய விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் (1922 - 1928)
புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சொந்தமாக ஒரு நாணயத்தை வெளியிட்டுக் கொண்டார்கள். அதன் பெயர் அம்மன் காசு.அதன் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால்தான் 'புதுக்கோட்டை அம்மன் காசு' என்ற பெயர். 'புதுக்கோட்டை அம்மன் சல்லி' என்றும் அழைப்பார்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம். இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள். அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டு வந்தனர். பிரகதாம்பாள்தாச என்றுதான் அவர்களுடைய விருதுகள் தொடங்கும்.

1. இரகுநாத தொண்டைமான். 1686 – 1730
புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர். மதுரையை ஆண்ட நாயக்கருக்காகத் திருவாங்கூர், மைசூர், தஞ்சாவூர் என்னும் இடங்களில் இருந்த அரசர்கள் மேல் படையெடுத்தச் சென்று அவர்களை வென்றனர். சொக்கநாத நாயக்கர் வலிமை மிகவது கண்டு அச்சமுற்றனராக, அக்கால் அவருக்கு முதல் மந்திரியாய் இருந்த கோவிந்தப்ப ஐயர் சூழ்ச்சியார் இவரது வலி குன்ற நேர்ந்தது, பின்பு, இவர் இராமநாதபுரம், தஞ்சை முதலிய இராச்சியங்களிலிருந்து திருமெய்யம், பட்டுக்கோட்டை முதலிய நகரங்களைக் கைப்பற்றினார். 1717 – 1721 ஆகிய ஆண்டுகளில் நாயக்கராலும் அவரது முதல் அமைச்சர் நாரணப்ப ஐயராலும் மிக்க இடுக்கண்களுக் குள்ளான கிறித்தவர்களும், கிறித்தவப் பாதிரிமார்களும் பதுக்கோட்டையில் அடைக்கலம் பகுந்து அன்புடன் ஆதரிக்கப்பட்ட தலமுற வாழ்ந்து வந்தனர். இம்னமரது நடுவு நிமை கிறித்தவர்களை நடத்தினமுறைமையிலிருந்துஅறியக்கிடக்கின்றது. இவர் வீரத்தாலும், புய வலியாலும் மனவுறுதியாலும். நடுவு நிலையாலும் மிகவும் புகழ்வாய்ந்தவராவர். இவருக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பிள்ளைகளெல்லாம் மரித்துவிட்டமையால் இவர் தம்பேர்களில் மூத்தவராகிய விஜயரகநாதராய தொண்டைமானுக்கு முடி சூட்டிவிட்டு 1730-ல் இவ்வுலக வாழ்வு நீங்கினார்.
2. விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769
இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர், அக்காலத்தில் மொகலாயர் (சந்தாசாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது ஆதலின் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து மத விசாரணை செய்து வந்தனர். சதாசிவப்பிரமம் என்று கூறப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் எய்தினார்.
1733-ல் தஞ்சை அரசரின் சேனைத் தலைவனாகிய ஆனந்தராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்துப் போர்புரியமாலே சூழ்ச்சியால் பெரும் பகுதியைப் பற்றிக்கொண்டார் ஆயினும், நெடு நாள் வரை திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டு ஓடி விட்டான். ‘கனத்த புகழ்படைத்த காளிக் குடிக்கோட்டையில், ஆனந்தராயனை அதிரவெட்டுந் தொண்டைமான்’ என்று பாடுவதும் உண்டு.
ஐதராபாத்து நைசாம் ( ஹைதராபாத் நிஜாம்) எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர் அவர்களைத் தண்டிக்கமாறு நைசாமால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் சமாதானமாய் திரும்பினான்.
மகமதலிக்கும் சந்தாசாகிப்புக்கும் கர்நாடக இராட்சியவிடமாய் நடந்த பெயர் பெற்ற போரிலே இம்மன்னர் ஆங்கிலேயருடன் மகமதலிக்கு துணையாய் நின்று சந்தா சாகிப்பையும் பிரெஞ்சுக் காரரையும் எதிர்த்தனர். இந்த போரின் பயனாக இவருக்கு அனேக நாடுகள் சேர்ந்தன. நாவப்புக்கு திரைக் கொடுப்பதில்லை எனவும் உடன்படிக்கை செய்து கொண்டனர் . இதனாலேயே தஞ்சாவூர் முதலியன அரசிழந்த காலத்திலும் புதுக்கோட்டை தமிழ் நாட்டின் ஒரே அரசாங்கமாக நிலைத்தது. பிரெஞ்சுக் காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் இம்மன்னர் ஆங்கிலேயரை பிரியாமல் அவர்கட்கே உதவி செய்து வந்தனர். இவர் தமது நுன்னிய அறிவினாலே ஆங்கிலேயரே வெற்றிபெறுவார் என்பதனை தெளிவாக உணர்ந்திருந்தார். புதுக்கோட்டை மேன்மையடைந்தது. ஆங்கில சேனாதிபதியாக (கர்னல்) லாரன்சு ஐரோப்பாவிற்கு புறப்பட்டு போகும் போது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார். அது
எங்கள் வெற்றிக்கு காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக் குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூரதேயத்திற்கு சென்ற விட்டாலும் எனக்கு தாங்கள் புறிந்த நண்மைகளும், உதவிகளும் என் மனதில் நின்றுகொண்டே இருக்கும் என்பது.
இவர் மதவிடங்களில் மிகப்பற்றுடையராயிருப்பது கொண்டே தமது இராச்சியத்தின்உள்விவகாரங்களை மறந்துவிடாது கவனித்து வந்திருக்கின்றார். புதுக்கோட்டை இராச்சியத்தை நிறுவினவர். ராயரகுநாத தொண்டைமான் எனின், அதை வலிமையுறச் செய்தவர் இம்மன்னரேயாவார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரையில் இடைவிடாது போரிலே காலங்கழித்து வந்த இவ்வரசர் 1769-ல் இவ்வுலக வாழ்வை நீத்தனர். இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மாஆய் என்பவருக்குப் பிறந்தவர் அடுத்த மன்னராகிய இராயரகுநாத தொண்டைமான் என்பவர்.

3. இராயரகுநாத தொண்டைமான். (1769 – 1789)
இவர் , 1738-ல் பிறந்தார். தமது முப்பத்தோரவது ஆண்டில் பட்டத்திற்கு வந்தார். தம் முன்னோரைப் போன்றே ஆங்கிலேயரிட த்தில் நட்பு பூண்டிருந்தார்.1780-ல் ஐதரலி கருநாடக சமவெளி மீது ஓர் பேரிடிவிழுந்தாற்போலப் பாய்ந்து வந்த காலையில் ஆங்கிலேயர் இவ்விடுக்கணைத் தடுப்பதற்கு ஓர் உபாயமும் செய்யாதிருந்தனர். தென்னாட்டுத் தலைவர்கள் யாவரும் ஐதலியுடன் சேர்ந்து கொண்டனர். இம்மன்னர் ஒருவரே ஆங்கிலேயர்க்கும், நவாப்புக்கும் உதவியாய் நின்றனர். ஐதரின் சேனையானது ஆதனக் கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டடை நாட்டில் புகுந்தபோது இவருடைய சேனை சோத்துப்பாளை என்றவிடத்தில் அதனை சந்தித்து முறியடித்து ஓட்டிவிட்டது இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்:
“நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.”
இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று. ஐதர் தான் படையெடுத்துச்சென்ற நாடுகளில் ஊர்களைத் தீயிட்டும், மரங்களை வெட்டியும், பயிர்களையழித்தும் ஏரிகுளய்களின் அணைகளை வெட்டியும் கொடுமைகள் இயற்றிவந்தான். அன்றியும் பெண்டிக்களும் குழந்தைகளும் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளானார்கள். இக்கொடியோனை முற்ற முறியடித்தற்கு இம்மன்னரே காரணமாய் இருந்தார். ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிராகவம் இவர் ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தார். நவாப்புக்கு இவர் செய்த உதவியின் பயனாகப் பட்டுக்கோட்டடைத் தாலுகாவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. இவர் ஒன்பது மணம் செய்து கொண்டனர். இவருக்கு ஆண் பிள்ளை இல்லை, ஒரே மகள் தான் உண்டு. 1789 டிசம்பர் 30-ல் இவ்வரசர் விண்ணுலகடைந்தார்.

4. ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் (1789 – 1807)
இவர், இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலைத்தொண்டைமானுடைய மூத்த புதல்வராவர். இவர் தமது முப்பதாவது வயதில் பட்டத்திற்கு வந்தார். 1790 ல் திப்புசுல்தான் திருச்சிராப்பள்ளிமேல் படையெடு்த்து வந்தகாலை இம்மன்னர் ஆங்கிலேயருக்குத் துணையாக நன்று அவனை மடக்கியடித்தார்.
1795-ல் ஆற்காட்டு நவப்பாகிய மகமதலி இவருக்கு ராஜாபகதூர் என்னும் பட்டத்தை அளித்தனன். அதனால் 1500 குதிரைப் படையும், கொடியும், முரசும், முடியும், பட்டத்து யானையும் வைத்துக் கொள்ள உரிமையுடையரானார்.
இவர் மூன்று கல்யாணம் செய்துக்கொண்டார். இவரது மூன்றாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளில் உயிருடன் இருந்த விஜயரகநாதராய தொண்டைமானும், ரகுநாததொண்டைமானும் முறையே 1807-லும், 1825-லும் மன்னராயினர்.
இவ்வேந்தர் சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் வானுலகெய்தினர். இவருடைய பத்தினியாராகிய ஆயிஅம்மாள் ஆய் என்பார் உடனட்கட்டையேறிவிட்டார்.

5. இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1807 – 1825)
இவர் பட்டத்துக்கு வந்தபொழுது பத்து வயதுள்ள சிறுவராய் இருந்த படியால் இவருடைய பங்காளி விசய ரகுநாத தொண்டைமான் அரச காரியங்களை நடாத்தி வந்தார், அப்பொழுது புதுக்கோட்டையில் நவாப்புக்குள்ள உரிமை மாறி ஆங்கிலேயரைச் சார்ந்ததனால் இவருடைய அரசவுரிமையை ஒப்புக்கொள்ளும்படி வியரகுநாத தொண்டைமான் ஆங்கில அரசாங்கத்தினரைக் கேட்டுக்கொண்டார். ஒப்புக்கெர்ணபின், இவருக்க முடிசூட்டுவிழா பதுக்கோட்டை நகரில் மிக்க சிறப்புடன்நடைபெற்றது. இவர் காலத்து மேஜர் ப்ளாக்பர்ன் என்னும் ஆங்கிலேயர் புதுக்கோட்டைக்கு ரெசிடெண்டாக இருந்து அரசாங்கத்தைச் சீர்திருத்தி மிகவும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார், கழந்தைகளாகவிருந்த விஜய ரகநாதராய தொண்டைமான், இரகுநாத தொண்டைமான் இருவரும் வடமொழி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலான மொழிகளும், குதிரையேற்றமும், வில்வாட் பயிற்சியும் ்பயிற்றுவிக்கப்பெற்றனர்.
இம்மனர் காலத்துத்தான் புதுக்கோட்டை ஐந்து தாலுகாக்ளாகப் பகுக்கப்பட்டது; நீதிமனறங்கள் நிறுவப்பட்டன; வரி வாங்குதற்கு அதிகாரிகள் நியமிக்கப்ட்டனர். அரசாங்கத்திற்கு வேண்டிய மற்றைக் காரியங்களும் செய்யப்பெற்றன.
1812-ல் புதுக்கோட்டை நகர் தீக்கு இரையாயிற்று, இவ் பொழுதுள்ள அழகிய நகரம் பின்பு கட்டப்பெற்றது. 1812-ல் இம்மன்னருக்கும், இவர் தம்பியார்க்கும் மணம் நடைபெற்றது. 1817 முதல் இவர் பூரண சுதந்திரமுடையராய் ஆட்சி புரியலானார். இவருக்கு இருமனைவியர் உண்டு.
இவர் 1825-ல் உலக வாழ்க்கையை நீங்கவே இவரது தம்பியாகிய இரஜநாத தொண்டைமான் முடி சூட்டிக் கொண்டார்.

6. இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் (1825 – 1839)
இவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர்.1825 ஜூலை மாதம் 20ம் நாள் ராஜா ரகுநாதத் தொண்டைமான் புதுக்கோட்டை மன்னராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதும் தன் சகோதரரின் நினைவாக புதுக்கோட்டை நகருக்கு கிழக்கே இருபது வீடுகளை ஏற்படுத்தி விஜயரகுநாதபுரம் என்று பெயரும் இட்டார். அடுத்து தன் தந்தையின் நினைவாக இன்னொரு குடியிருப்பையும் ஏற்படுத்தி அதற்கு பிரசன்ன ரகுநாதபுரம் என்று பெயரிட்டார். இப்பெயர்கள் இன்றும் இவ்விடங்களுக்கு வழங்குகின்றன.
1833ல் ரகுநாதத் தொண்டைமானுக்கு ஹிஸ் எக்சலன்சி என்ற விருது ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்டது. இவரது செல்வாக்கு இதனால் மேலும் உய்ர்ந்தது.
1838ல் புதுக்கோட்டையில் முதல் தபால் நிலையம் தொடங்கப்பட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் போர் ஏதும் நிகழாமல் அமைதியாக நிர்வாகம் நடை பெற்றது. இசை, நாட்டியம்,இலக்கியம் ஆகியன இவரது ஆட்சியில் நன்கு வளர்ச்சியுற்றன. இம்மனரது காலத்தில் சுங்கவரிகள் எழிமையாக்கப்பட்டு சில வரிகள் ரத்தும் செய்யப்பட்டன். ராஜா ரகுநாத தொண்டைமான் 1839 ஜூலை 13ல் இயற்கை எய்தினார்.
இவரை அடுத்து இவ்ரது மூத்த மகன் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் மன்னரானார்.

7. பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் (1839 – 1886)
தொண்டைமான் தனது அமைசர்களுடன்
இவர் பட்டத்துக்கு வந்த காலத்தில் ஒன்பது வயதுள்ள சிறுவராயிருந்தார். 1844-ல் இருந்து தாமே அரசாண்டு வந்தார். 1866-ல் நீதிமன்றங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன.
1. அப்பீல் கோர்ட்டு
2. மூன்று ஜட்ஜிகள்உள்ள செஷன்ஸ் கோர்ட்டு
3. ஸ்மால் காஸ் கோர்ட்டு
4. ஐந்து முன்சீபுக் கோர்ட்டுகள்
இலாகாக்கள்
1.வரிவசூல் (ரெவின்யூ).
1. கிராமம்
2. தாலூகா
3. காவல்
4. சிறைச்சாலை
5.தபால்
6.பங்களா
7.மராமத்து
8.உப்பளம்
9.காடு
10.நீதிமன்றம்
11.ஸர்க்கில் ஆபீஸ்
இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபல் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது.
இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்.

8. பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் (1886 - 1928)
மார்த்தாண்ட தொண்டைமான்
இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர். குதிரை யேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும், ஆங்கில அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி மருத்துவ நிலையம், அலுவலம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாக்காவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பெற்றன. இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றம் ஆக 1887-ல் அமைக்கப்பட்டது.
உப்பு காய்ச்சலுக்கு ராயலிட்டி கேட்கப்போக இனாம் நிலத்துக்கும் நிலவரி விதித்து விட்டான் வெள்ளையன் பாருங்கள்
1898-ல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர், ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரணமனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள். 1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரைவரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது.
1902-ல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (மக்கள் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. 1907ல் இருந்து இதில் 18 உறுப்டபினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். வினைப்பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான் , நாட்டுக்காவற் தலைவர் (ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இவர்கள் அடங்கியதாகும. இம்மனர்காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது. 1911 டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்க இவ்வரசரும் அழைக்கப்பட்டிருந்தார்.
1913-ல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது.
இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:-
1.புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் சேர்க்கும் பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால் நடைக் கண் காட்சியும் ஏற்படுத்தியதுடன், விதையும் உழவு மாடும் வாங்குதற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார்.
2.பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார்.
3.பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலை விலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்குப்படி காப்புக்களரிகள்(பத்திர பதிவு அலுவலகங்கள்) பல இடங்களிலும் ஏற்படுத்தினார்.
4.புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார்.
5.நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக்குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார்.
6.குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூங்கள் வைத்தார்.
7.தொழிற்சாலை, விவசாயசாலை முதலியன ஏற்படுத்தினார்.
8.எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார்.
9.நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார்.
10.மக்கள் பிரதி நிதிச் சபை ஏற்படுத்தினார்.
இவ்வரசர் மீது ‘ இயன்மொழி வாழ்த்து ‘ என்னும் ஓர் அழகிய தமிழ்ப் பிரபந்தம் ப்னனத்தூர் நாராயணசாமி ஐயர் என்னம் பலவரால் இயற்றப்பெற்று , மகா மகோபத்தியாய உ.வே. சாமிநாத ஐயர் அவரக்ளின் சாத்துக் கவியுடன் வெளிவந்துள்ளது.
அதிலே இவ்வேந்தர் பெருதைமகள்,
‘ தானந் தனியருள் ஞான முதலன
வுரிய நாயக னுத்தம குணநிதி
பெரியநா யகிபதம் பிரியா வுளத்தன்மு
னவிலும் விசயரகு நாதன் மகன் மக
னிவநெனக் கன்ன னிவனென நுவலும்
கராமடிந் திடச்சக் கரப்படை விடுத்த
இராம சந்திர வேநதல்சேயென
ஓராயிரந் தண்கதி ரொன்றா யுதித்தென
அராவணை யமல னருளொருங் குதித்தெனக்
குராவணி குமரவேள் குவலயத் துதித்தெனப்
பாராவருந் தருமம் பாரில் முளைத்தெனச்
சராசன மதனன் றனிவடி வெடுத்தென
இராசமுண் டலத்தி விவற்கிணை யிலையெனச்
சராதி டராசன் றொல்குலம் விளங்கத்
தராதவலம் விளங்கத் தவநெறி விளங்கப்
புராதன நான்மறை மபுவியிசை விளங்க
ஆவிர்ப் பவித்த வாசர் சிகாமணி’
என்று இங்ஙனம் பலவாறு சுறப்பட்டுள்ளன.

விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் 1922 -1928
இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவரகள் தமது அரசாங்க நிர்வாகத்தைத் தமையனாராகிய இவரிடம் ஓப்புவித்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று விட்டமையால், இவர் 1922 அக்டோபரிலிருந்து தாமே அரசாட்சியை நடத்தி வருகின்றார். இவர் 1872 ஏப்பிரல் 17-ல் பிறந்தவர். காலஞ்சென்ற மகாராஜா இராமச்சந்திர தொண்டைமான் சாகிப் அவர்களின் மூத்த பேரர். இவர் 1898-ல் காரிய நிரவாக சபையில் ஒருவராக அமைந்தனர். 1908-ல் இங்கிலாந்து சென்று திரும்பினர். 1990-ல் திவான் பதவியை ஏற்றுக்கொண்டனர். 1922-ல் அரசாட்சியை ஒப்புக்கொண்ட பின் நாட்டிற்கு அநேக நன்மைகள் புரிவதாக வாக்களித்து அங்ஙனமே செய்து வருகின்றார். இவர் இது காறும் செய்திருக்கிற நன்மைகளில், நகர பரிபாலன சபையில் 8-ஆக இருந்த அங்கத்தினர் தொகையை 12-ஆக உயர்த்தியிருப்பதும், 60 அங்கத்தினர்கள் கொண்ட புதிய சட்ட நிருமாண சபையொன்று ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத் தக்கவைகளாம்.
9. பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்
1928 - 1948.
புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.
இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.
1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய சமயத்தில் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றை சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். சமஸ்தானங்கள் அனைத்தும், மன்னர் பதவியையும், சுகபோகம், அதிகாரம், சொத்துக்களையும் இழக்கத் தயாராக இல்லாத நிலையில் தானே விரும்பி இந்தியாவுடன் சேர்ந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை மட்டுமே என்பது ஒரு சிறப்பு மிகு இந்திய வரலாறு.
ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . சிறந்த மோட்டார் வாகன தொழில் நுட்ப வல்லுனராக திகழ்ந்து மிக சாமான்ய மனிதானக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர்1997இல் மறைந்தார்.
ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
புதுக்கோட்டைக்கும் இராமநாதபுரத்திற்கும் ஓர் காலத்தில் ஒரு கல்யாண சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மற்றும், புதுக்கோட்டை யரசர்களின் சம்பந்திகளாயுள்ளோர். மாங்காட்டான் பட்டி இராங்கியர், மேலைக் குறிச்சி இராங்கியர், கல்லாக்கோட்டை சமீன்தார் சிங்கப்புலி ஐயா, காட்டுக்குறிச்சிப் பன்றிகொண்டார், நெடுவாசல் சமீன்தார் பன்றிகொண்டார் முதலாயினார் ஆவர்.
புதுக்கோட்டை இராட்சிசயம் சிறிதாயிருப்பினும் தமிழ் நாட்டு முடியுடை வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குப் பின்பு இதுவே தமிழ் நாட்டு அரசாங்கமாக விளங்கிவந்தது. தமிழ் மொழியைப் புரந்த அம்மன்னர்களைப் போலவே இவர்களும் இப் பொழுது புரந்து வருகின்றனர். சர் வில்லியம் பிளாக்பர்ன் கூறிய படி புதுக்கோட்டை மன்னர் மிகவும் அதிகாரமுள்ளவராவர் .

பழமை பாதி... நவீனம் பாதி! புதுக்கோட்டை.
ராணி ரமாதேவி தொண்டைமான்.
ராணி ரமாதேவி தொண்டைமான்.
''ஆங்கிலேயர் கால இந்தியாவில் நாடு முழுவதும் இருந்த 537 சமஸ்தானங்களில், ஆங்கிலேயர்களால் சிறப்பு அந்தஸ்து அளிக்கப் பட்ட சமஸ்தானம் என்ற பெருமையுடன் திகழ்ந்தது புதுக்கோட்டை சமஸ்தானம்.
''பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட் டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப் பட்டது. அந்தப் பெயருக்கு ஏற்றார்போல் அன்றைய காலகட்டத்தில் நவீனத்துக்கு ஓர் உதாரணமாக விளங்கியது புதுக்கோட்டை. தொண்டைமான் மன்னர்கள் உருவாக்கிய இன்றைய நவீனப் புதுக்கோட்டைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர், 1800-களின் இறுதியில் புதுக்கோட்டையின் நிர்வாகப் பொறுப்பை வகித்த சேஷையா சாஸ்திரி.
புதுக்கோட்டை நகரை நவீனமாக நிர்மாணிப் பதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸையும் புதுச்சேரியையும் பார்வையிட்டு வர, தனிக் குழுக்களை மன்னர் அமைத்தார். இதன் தொடர்ச்சியாக நகரின் நடுவில் அரண்மனை, அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் தலா நான்கு அடுக்கு முறையில் 16 வீதிகள், மழை நீரைச் சேமிக்கும் வகையில் மேட்டுப் பகுதியான மச்சுவாடியில் தொடங்கி காட்டுப் புதுக்குளம் வரை 36 குளங்கள் என்று புதுக்கோட்டை உருவானது.
அந்தக் காலத்தில், புதுக்கோட்டையில் குடியிருப்புகளின் முன்புறம் கால்வாய்கள், பின் புறத்தில் கழிவு நீர்க் கால்வாய்கள் இருக்கும். இதனால், எவ்வளவு மழை பெய்தாலும் சாலைகளிலோ தெருக்களிலோ புதுக்கோட்டை யில் தண்ணீர் தேங்காது. அக்காலத்தில் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பல நகரங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த நகரம் இது.
புதுக்கோட்டைக்கு என்று தனிக் கலாசாரம் உண்டு. பழமையும் நவீனமும் இரண்டறக் கலந்த கலாசாரம். புதுக்கோட்டையில் புழக்கத்தில் இருந்த அம்மன் நாணயங்கள்கூட தனித்துவமானவை. மன்னர் குடும்பத்தோடு இப்பகுதி மக்களுக்கு நெருக்கமான உறவு உண்டு. ஊரின் முக்கிய அடையாளம், திருக் கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில். இங்கு நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழா, சித்திரைத் திருவிழா போன்ற திருவிழாக் காலங்களில், சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து, 10 நாட்கள் தங்கி மன்னர் குடும்பத்தோடு திருவிழாவைக் கொண்டாடிவிட்டு ஊர் திரும்புவது வழக்கம்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 3.3.1948-ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜா ராஜகோபால தொண்டைமானால் கஜானா உட்பட அனைத்து நிர்வாகமும் முழுமையாக இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன் றைக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி அலுவலகமாக இருக்கும் இடம், எங்கள் புதிய அரண்மனை. மன்னர் காலத்தில் இப்பகுதி கல்வி வளர்ச்சிக்காகவே கட்டப்பட்டதுதான் மன்னர் கல்லூரி. அரசுத் தலைமை மருத்துவ மனையும் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இன்றைக்கு சென்னை அருங்காட்சியகத்துக்கு அடுத்து, தமிழகத்திலேயே முக்கியமான அருங்காட்சியகமாகத் திகழும் புதுக்கோட்டை அருங்காட்சியகம், 1910-ம் ஆண்டு மன்னர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இப்படி மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடந்த இடம் புதுக்கோட்டை.
ஒரு காலத்தில் புதுக்கோட்டையின் முக்கியத் தொழிலாக நெசவுத் தொழில் இருந்தது. குறிப் பாக திருவப்பூரில் தயாரிக்கப்படும் சாய வேட்டிக்கு என்று தனி மரியாதை உண்டு.
'எல்லாரும் கட்டும் வேட்டி
அந்த வேட்டி இந்த வேட்டி
என் புருஷன் கட்டும் வேட்டி
புதுக்கோட்டை சாய வேட்டி!’ என்ற தெம்மாங்குப் பாடல் மூலம் புதுக்கோட்டை நெசவுக்கு உள்ள பெருமையை அறியலாம். அதேபோல, மண்பாண்டத் தொழிலும் பிரசித்திப் பெற்ற ஒன்று. இன்றும் மழையூர், திருவப்பூர் பகுதிகள் மண் பாண்டக் கலையில் தமிழக அளவில் பெயர் பெற்று திகழ்கின்றன.
கலைகள் செழித்த இடம் புதுக்கோட்டை. புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர்கள் தட்சிணா மூர்த்தி பிள்ளை, ரெங்கநாயகி, நாடக மன்னர் பி.யூ.சின்னப்பா, 'காதல் மன்னன்’ ஜெமினி கணேசன், ஏ.வி.எம் ராஜன் ஆகியோரின் சொந்த ஊர் புதுக்கோட்டைதான். தீரர் சத்தியமூர்த்தி, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி போன்ற வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த மண் இது.
புதுக்கோட்டையின் மிகப் பெரிய கொண் டாட்டங்கள் திருவப்பூர் மாரியம்மன் கோயில் பூத்திருவிழாவும் நார்த்தாமலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவும். இந்தத் திருவிழாக்களின்போது நடக்கும் கரகாட்டம், நாடகங்களுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. உணவு என்று எடுத்துக் கொண்டால், முந்திரிக்கும் மீனுக்கும் முக்கிய இடம் கொடுப்பார்கள் எங்கள் ஊர்க்காரர் கள்.
ஒருபுறம் புதிய நாகரிக மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டாலும் கலாசார அளவில் இன்றும் தங்கள் மரபு களைப் பேணுபவர்கள் நாங்கள். கோயில் திருவிழாக்களில் தொடங்கி, வீட்டு விசேஷங் கள் வரை அனைத்திலுமே, இதைப் பார்க்க முடியும். பழைய பெருமையோடு புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கிறோம் நாங்கள்!''
இந்தியாவிலேயே கடைசியாகக் கட்டப்பட்ட அரச குடும்பத்து அரண்மனை இது தான். இந்தியாவிலேயே முதன் முதலாக கார் வாங்கிய மன்னரும் புதுக்கோட்டை மன்னர்தான். மொத்த இந்தியாவும் ஆங்கிலேயர் வெளியிட்ட அனா, ரூபா புழக்கத்தில் இருந்த போது, சமஸ்தானத்திற்கென்று தனி நாணயம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டதும் இங்குதான், அரண்மனையின் அமைப்பில் எல்லாமே 99ல் வரும்படி அமைக்கப்பட்டிருந்ததும், ராணியம்மா சொல்லாமல் விட்ட செய்திகள் என்பதை சமஸ்தானத்தின் குடி ஒன்றின் வாரிசு என்ற முறையில் சொல்வது எனது கடமை.
நன்றி
ஆனந்த விகடன்

கார்த்திக் தொண்டைமான்
கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமான். தாய் மீனாம்பாள் ராஜாயி. இவர்களது ஒரே மகன் கார்த்திக் தொண்டைமான். இவர் மனைவி சுசிலா. இவர்களுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமானும் 3 முறை (1967, 1977, 1980 ஆண்டுகளில்) காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் தொண்டைமான் 1.1.1972 அன்று பிறந்தவர். பி.எஸ்சி. பட்டம் பெற்றவர். 2006-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் உறுப்பினரானார். 2009-ம் ஆண்டில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கார்த்திக் தொண்டைமான் 1,01,998 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளரான ஜாகீர் உசைனை விட 71,498 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார்.
தொண்டை மான் வம்சத்தில் இன்றைய தினம் புதுக்கோட்டை மக்களின் செல்ல பிள்ளையாக விளங்கக்கக் கூடியவர் கார்த்திக் தொண்டைமான் அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்,கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் .இரக்க சிந்தனை உள்ளம் கொண்டவர் ,தன்னை தேடி வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை இன்றளவும் செய்து கொண்டிருக்க கூடிய மனித நேயமிக்க மாண்பாளர்.

Best Kallar Matrimony in tamilnadu visit: Kallar matrimony
ReplyDeleteBest Kallar matrimony in tamilnadu visit: கள்ளர் தி௫மண தகவல் மையம்