Thursday, November 25, 2010

உயர்திரு விருத்தாசலம் நாட்டார் ஐயா இறைவனடி சேர்ந்தார்













கள்ளர் குல மா மனிதர் பாசமிகு உயர்திரு விருத்தாசலம் நாட்டார் ஐயா இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி திரு பழனிவேல் சோழகர் மூலமாக 24/11/2010 அன்று சர்வதேச கள்ளர் பேரவைக்கு கிடைத்தது. சர்வதேச கள்ளர் பேரவையின் சிறப்பு அங்கத்தினராக இருந்து பல்வேறு வழிகளிலும் எமக்கு உதவிகளும், ஆலோனைகளும் வழங்கி வந்த ஒரு மாபெரும் மேதை இன்று நம்முடன் இல்லை என்று உணரும் போது இதயம் வலிக்கிறது. ஐயாவின் மறைவினால் துயரும் குடும்பத்தினருக்கு சர்வதேச கள்ளர் பேரவை உருப்பினர்கள் சார்பாக எமது இரங்களை தெரிவிதுக்கொள்கிறோம்.

வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த விருத்தாசலம் நாட்டார் ஐயா இன்று நம்மமுடன் இல்லை. பொன் மன உடல் பூமிதனில் சாய்ந்து விட்டது. பெரும்புலவனாய், புரவலனாய், பேராசிரியருமாய்த் திகழ்ந்த மாமனிதர் குவித்திட்ட சாதனைகள் அளவிடமுடியாதவை. நெஞ்சார நினைத்து அவரது திருவடிக்குத் தலைசாய்த்து வணங்குவோம்.

நாமெல்லோருமே வாழப்பிறந்தவர்கள், வாழத்துடிக்கிறோம், நம் இதயங்கள் நமக்காக துடிக்கின்றன. பல்லாயிரத்திலொருவர் இதயம் மட்டுமே பிறர் வாழத் துடிக்கிறது. அத்துடிபினை நாம் விருத்தாசலம் நாட்டார் ஐயாவிடம் கண்டோம்.நாம் இன்ப துன்பங்களையும்,ஏற்ற இறக்கங்களையும், கவலை குலப்பங்களையும் அனுபவித்து வாழ்ந்தாலும்,விருத்தாசலம் நாட்டார் ஐயா பிறர்க்கென வாழ்ந்த சான்றோன். தான் தோன்றிய குலத்திற்கும்,தமிழ் மொழிக்கும்,கல்வி முதலிய சமுதாய வளர்ச்சிக்கும் உறுதுணையாக நின்று இளமை முதல் முதுமை வரை எத்தனையோ தடைகள்,இடையூறுகள், அழிபாடுகளையும் தாண்டி இயலாமைக்கு கைகொடுத்து தாங்கி பலரையும் கரை சேர்த்த மாமனித பெருமகனார் இறைவன் திருவடிகளில் இளைப்பார ஈரமுடன் ஈசனை வேண்டுவோம்.

விருத்தாசலம் நாட்டார் ஐயா மறைந்து விட்டாலும் அவரது தொண்டும், ஆற்றிய பணிகளும், ஈட்டிய புகழும் பல்லாயிரம் ஆண்டுகள் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும். சான்றோர்கள் புகழ் பரப்பி சான்றோனாய் மறைந்துவிட்ட மாமனிதர் ஐயா விருத்தாசலநாட்டார் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பார துதித்திடுவோம்.

என்றும் ஈரமுடன் நினைவில் கொள்ளும்
சர்வதேச கள்ளர் பேரவை
இங்கிலாந்து.

No comments: