கள்ளர்குல வரலாற்று மாமணிகள்
1. காலத்தால் அழியா புகழ் பெற்ற கள்ளர் சரித்திர நாயகன்
ந.மு. வேங்கடசாமி நாட்டார். 1884 - 1944
தமிழக மக்களால் நாட்டர் ஐயா எனபாசமுடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்.அவர்கள் தஞ்சைமாவட்டத்தில்திருவையாற்றுக் கருகிலுள்ள நடுக்காவேரி என்னும் சிற்றூரில் கள்ளர்குலத்தோன்றலாகிய வீ. முத்துச்சாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும்நன்மகனாய் 12-04-1884 இல் பிறந்தார்.
இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம்திரிபரப்பயின்று, மதுரை தமிழ் சங்கம் நடத்திய பிரவெச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905, 1906, 1907) முறையாகஎழுதி முதன்மையாக தேர்ச்சி பெற்று, மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தபெருமாகனாராகிய பண்டித் துரை தேவர் அவர்களால்தங்கப் பதக்கக்ங்களும். தங்கத்தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள்.தாமே பயின்ற தமிழ்பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் ப்ணிபுரிய அழைத்த கல்வி நிருவனங்கள்பல.கோயம்பத்தூர் தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஒரு ஆண்டும்திருச்சி பிஷப் கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியரரக 24 ஆண்டுகளும் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் தமிழ பேராசிரியராக 7 ஆண்டுகளும் பணி புரிந்து ஒய்வு பெற்றார்.பின் தமிழ் வேள் உமா மகேஸ்வரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தை புலவர் கல்லூரியில்4 ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்து சிரப்பித்தார்கள்.
1940 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமில் மா நாட்டில்நாவலர் என்னும் சிரப்புபட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப்பெற்றது. ஐயா அவர்கள்எழுதிய உரைகள், தமிழ் ஆராச்சி நூல்கள் பல. 1921 -22 இல் திருவருட் கல்லூரி ஒன்ற்றுநிறுவ முயற்சி செய்து நிறைவேறாமல் போக , 1925 - 26 இல் தஞ்சை அல்லது திருச்சியில்தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர்டி.என். சிவஞானம்பிள்ளை அவர்கள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பினராகஇருந்து செயலாற்றிச் சிற்ப்பித்தார்கள்எளிய வாழ்வும் இனிய நோக்கமும்கொண்டவர், நெஞ்சிலுரமும் நேர்மைத் திறமும் மிக்கவர். சிறந்த புலமையாளர், உயர்ந்தபண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றிய நாட்டர் 28-3.1944 அனறு தம் மணி விழா நடை பெறுவதற்கு இருவராத்திற்கு முன் காலமானார். அன்னாரின் உடல்பிறந்த மண்னணில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின்படி பூசை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ் புலவர் ஒருவருக்காகஎழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இதுவே.
நாட்டாராய்யாவின் அகன்ற அறிவு.
ஆழ்ந்தபுலமை.
தெளிந்த ஆய்வு.
தேர்ந்த எழுத்துத்திறன்.
பேச்சாற்றல்.
படைப்பாற்றல்.
உரைவளம்.
மனவளம்.
மனிதநேயம்.
போன்ற சிறப்புகளையெல்லாம் எதிர்கால இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எழுத்துநடை, பேச்சுநடை இரண்டிற்கும்
தூய நடை எடுத்துவைத்தார்.
உயர்வான தமிழ் வளர்த்தார்.
உலகில் நல்ல பேர்வளர்த்தார்.
தமிழுக்குப் பெருமைதனைத்தான் வளர்த்தார்.
உலகுள்ளவரை தமிழ் வாழும்.
தமிழுள்ளவரை நாட்டார்தம் புகழ் வளரும்.
2. வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார். 1870 - 1920
அரித்துவாரமங்களம், இவ்வூரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்(1870) பிறந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்(1920) இயற்கையெய்திய கோபாலசாமி இரகுநாதஇராசாளியார்.
இராசாளியார்.அவர்களின் வாழ்க்கை இற்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடமாகவும்வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் அமைந்துள்ளது. தன் மாமன் வேலுவாண்டையாரின் திருமகள் பெரியநாயகியம்மையை வாழ்க்கைத் துணையாக ஏற்று வையகம் போற்ற வாழ்ந்தார். இளம் வயதில் தந்தையைஇழந்த நிலையில் கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல் குடும்ப சுமையைஏற்றுக்கொண்டார்.
தமிழ் மொழியின்பாலும் இலக்கியங்களின் பாலும் மிகவும்ஈடுபாடு கொண்ட இராசாளியார் பண்டைய இலக்கியநூல்கள் பலவற்றை தேடிப்பெற்றுதம் ஊரிலேயே ஒரு நூலகம் அமைத்தார். தமிழார்வம் காரணமாக தன்செல்வச்செழுமையை பயன்படுத்தி கிடைப்பதற்கரிய பல சுவடிகளைப் பெற்று தம்நூலகத்தை மிகச் சிறந்த நூலகமாக அமைத்தார்.இங்கு வருகை தந்த திருவாடுதுறை ஆதினகர்தர் நூலகத்திலுள்ள அரிய நூல்களையும் சுவடிகளையும் பார்த்து இந் நூலகத்திற்கு சரஸ்வதி மகால் எனவும் பெயர்இட்டார்.
தமிழ்த் தாத்தா என்று அழைக்கபடும் உ.வே.சாமிநாத ஐயர் புறநானூறு ஒலைச்சுவடிகளை இராசாளியார் அவர்களிடம் தான் பெற்று அச்சிட்டார் என்பது வரலாறு. இராசளியார் அவர்களின் தமிழார்வமும் மொழிப்பற்றும், அறிவுப்பசியும் அதைத்தீர்துக்கொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் எங்கு கூட்டங்கள் நடந்தாலும் சென்று பங்கேற்கும் பாங்கும் தனிச்சிறப்பாகும். நான்காம் தமிழ்சங்கம் எனப்போற்றப்படும் இன்றைய மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பாண்டித்துரை தேவருடன் இனைந்து உருவாக்கியதில் இராசளியார் பங்கும் ஒரு வரலாறு.
இராசளியார் தஞ்சையில் இருந்த போது தஞ்சைத்தமிழ் சங்கம் செயல்பாடற்று போனது குறித்து கவலையுற்ற புலவர் பலர் இராசளியார் அவர்களிடம் தூண்டியதன் விளைவாக கரந்தையில் புதியதமிழ் சங்கம் தோற்றுவிக்கப் பட்டதும் வரலாறு.கரந்தை தமிழ்ச்சங்க நூலகத்திற்க்குத் தம் நூலகத்தில் இருந்துநூற்றுக்கணக்கான நூல்களையும் வழங்கி, குன்னூரில் ஒரு நூலகத்தையும் அமைத்துஅங்கு தொல்காப்பியருக்குச் சிலையும் நிருவி தமிழ் வளர்த்தார் பண்டிதர்இராசளியார்.
இவ்வாறு இலக்கியம், சமயம், அரசியல், ஆகிய துறைகளில் ஈடுபட்டுபுகழ் பெற்ற இராசளியார் குற்றபரம்பரை சட்டத்திற்கு எதிராகக் குரல்கொடுத்துத் தம் சமூக மக்களின் மேன்மைக்கு வழி செய்தார். செல்வத்துப் பயனேஈதல் என்பதற்கிணங்க வள்ளமை மிக்க நள்நிதிச் செல்வராகத் திகழ்ந்தார். இவர்வாழ்வு போற்றுவதற்க்கும், பின்பற்றுவதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
3. தமிழறிஞர், சைவச் செம்மல், திருக்களர் மு. சுவாமிநாத மாதவராயர்
த்மிழுக்கும் சைவத்திற்கும் தொண்டுபுரிந்த அறிஞர் பலருள் திருக்களர் மு.சுவாமிநாத மாதவராயரும் ஒருவர். அவர் தமிழுக்கும் சைவத்திற்கும் உடல்,பொருள், ஆவி ஆகிய மூன்றினாலும் தொண்டாற்றியவர். சற்றேறக்குறைய ஒருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அன்னாரை நினைந்து போற்றும் அளவிற்கு அவருடைய தொண்டு உண்மை மிக்கதாயிருந்தது என்பதை அவர்தம் ஆக்கங்களின் வழி அறியலாம்.காலத்தால் அழிக்க முடியாத தொண்டால் இறவாப் புகழுக்கு உரியவரானார்.இவர் தோன்றிய குலமாகிய கள்ளர் குலத்திற்கு இவர் ஆற்றியுள்ள பணி மிகப் பெரியதாகும்.அரச பரம்பரையைச் சேர்ந்த கள்ளர் இனத்தின் பெருமையைச் சூரிய குலக் கள்ளர் சரித்திரம் என்னும் நூல் வழி ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்நூல் கள்ளர் இனத்திற்குக் கிடைத்த அரிய வரலாற்றுப் பெட்டகமாகும்.வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இவ்வினத்திற்கு ஏற்பட்டிருந்த பழியைத் துடைக்க இவரும் அரும்பாடுபட்டார் என்பதை இவர்தம் மாணவர்கள் இன்றும் பெருமையுடன் பேசுகின்றனர்.
வனப்பான உடல் வளத்தோடு அறிவுச் சுரங்கமாய்த் திகழ்ந்த இவர், திருக்களரில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றினை அமைத்து ஏழை எளிய மாணவர்களுக்கு இலவயமாகக் கல்வி வழங்கினார்.இலக்கண, இலக்கியங்களையும் கற்பித்து வந்த இவர் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றிவந்தார்.எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த இவர் தம் வாழ் நாள் முழுவதும் ஒரு சைவ ஞானியாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த மகானிடம் கல்வி பயின்ற மாணவர் சிலர் திருக்களரில் இருக்கின்றனர். எழுபது வயது முதியவர் ஒருவர் கண்களில் கண்ணீர் மல்க “ வாத்தியாரைப் பற்றிக் கேட்கிறீர்களா..? ஆள் நல்ல வாட்ட சாட்டமா இருப்பார், கணுக்காலுக்கு மேலே ஏற்றிக் கட்டிய ஒரு நாலு முழ வேட்டி.. அதேஅளவுக்கு மேலே ஒரு துண்டு போர்த்தியிருப்பார்.கட்டை மிதியடி தான் அணிவார்.. அவர் தெருவில் நடந்துவந்தால் யாரும் சத்தமாகப் பேசமாட்டார்கள்., அவ்வளவு மரியாதை.அவருக்குத் தெரிந்து யாரும் தெருவில் மீன் வாங்க மாட்டார்கள்.வாத்தியார் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர் வாத்தியார் வரும்பொழுது வேண்டுமென்றே மீன் வாங்குவார், வாத்தியார் தன் வீட்டுக்குநேராக நின்றுகொண்டு வெண்பாவில் ஒரு வசைப் பாட்டு பாடிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிடுவார்.
இவர் பிறப்பு, வளர்ப்பு, கல்வி போன்ற செய்திகளை விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும் இவர் எழுதிய திருக்களர் வைபவம் என்னும் நூலில் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளனன. அந்நூலிலும் இவர் தன்னைப் பற்றி எழுதவேண்டும் என்று எழுதவில்லை. திருக்களர் தேவஸ்தானத்தில் சிவத்துரோகம் செய்தோரைக் கண்டித்து எழுத, அதற்காகச் சிலர் இவரைத் தூற்றியுள்ளனர். அதற்குப் பதில் கூறும் முகமாகத் தம் குடிப்பெருமை, குலப்பெருமை, குணப்பெருமை முதலியவற்றை எடுத்துக்காட்டி, அவ்வழியில் வந்தவன், வாழ்பவன், பழி. பாவம் ஏதும் அறியாதவன் என எடுத்துக் காட்டியுள்ளார். அக்குறிப்புகளே இப்போது அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்குத் துணை புரிகின்றன.
திருக்களர் பெருமை
தாம் பிறந்து வளர்ந்து, தமிழுக்கும், சைவத்திற்கும் தொண்டாற்றிய திருக்காளர் என்ற ஊரைப் பற்றிக் குறிப்பிடும் போது கடல் புடை சூழ்ந்த நெடு நிலவுலகிலே, தண்டமிழ் மண்டலத்திலே எண்ணிறந்த கோடி திருத்தலங் களுளொன்றாயும், மூவரருளிய தேவாரத்திருப்பதிகங்கள் பெற்ற திருத்தலங் களுளொன்றாயும், தேவாரத்திருப்பதிகமுடைய (275) இருநூற்றெழுபத்தைந்து திருத்தலங்களுள் (7) ஏழு நீங்கலாக (268) இருநூற்றறுபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும், சோழவள நாட்டில் தேவாரத் திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (191) நூற்றுத் தொண்ணுற்றொரு தலங்களுளொன்றாயும் காவிரி நதிக்குத் தென்புறத் தேவாரமுடையனவாய் விளங்கும் (128) நூற்றிருபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய ஒவ்வொரு திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (105) நூற்றைந்து தலங்களுளொன்றாயும் விளங்கி நின்றது இத்தலம் என்பார்.
கல்வியும் தொழிலும்
கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.
திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம். பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர். நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள் உரைக்கின்றனர்.
சிவத்தொண்டு
திருக்களர் தேவஸ்தானம் பாவிகள் வசம் இருந்ததைக் கண்டு புழுங்கிய இந்த மகான் ஆலய நிர்வாகத்தைச் சீரமைத்துத் திருப்பணி செய்யப் பெரிதும் முயன்றார். களவு, காமம் முதலியவற்றின் இருப்பிடமாகக் கோயில் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். கையில் ஒரு காசு கூட இல்லாது, இறைவன் திருவருளை மட்டுமே துணையாகக் கொண்டு கோயில் திருப்பணி முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் உயிருக்கு நேர்ந்த காலத்துங்கூட அவர் கலங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக அவர் சந்தித்த துன்பங்களும். தொல்லைகளும் கொஞ்சமல்ல. அதைப் பற்றி அவரே கூறுகின்றார். 1898-ஆம் வருடம் முதல் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியாரவர்களுக்கு ஓய்வின்றி எண்ணிறந்த மகசர், மனுக்கள் எழுதினார். நீலலோசனி, யார்த்தவசனி, என்னும் பத்திரிக்கைகளின் வாயிலாக இடைவிடாமல் கதறினார். இத்தல சம்பந்தமாகவுள்ள வைகளையெல்லாம் ஒரே புத்தகமாகத் திரட்டியும், 1902-ம் வருடத்தில் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு போய், இரயில் மோட்டார், இல்லாத அக்காலத்தில் தேவகோட்டை, காரைக்குடி வகையறாத் தொண்ணுற்றாறு நகரங்களிலும் பரப்பினார். காரைக்குடிக்கடுத்த கோவிலூர் மடாலயத்தில் ஐந்தாங்குருமார்தமாயெழுந்தருளியிருந்த வீரசேகர மகாமுனிவர், திருச்சன்னிதானத்தில் சமர்ப்பித்து வணங்கி விண்ணப்பஞ் செய்தார். இந்த நிலைமையில் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியில் கிருபாநிதியாகிய பி.ஆர்.நடேச ஐயரவர்கள் புதிதாகத் தலைமைப் பதவி வகித்ததை மேற்படி மு.சுவாமிநாத உபாத்தியாயர் கேள்விப்பட்டு, காரைக்குடியிலிருந்தபடியே தஞ்சாவூருக்குப் போய் மேற்படி பி.ஆர்.நடேச ஐயரவர்களுடைய காலில் விழுந்து இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரக்கூடியவர் களைப் பஞ்சாய்தார்களாக நியமித்திருக்கிறதாக வாக்களித்தால் கால்களை விடுவேன் இல்லையேல் உயிரை விடுவேன் என்று அழுது அரற்றினார். மேற்படி பி.ஆர். நடேச ஐயரவர்கள், கே. திருவேங்கட முதலியாரவர்கள், வி.அப்பாசாமி வாண்டையாரவர்கள், சாம்பமூர்த்திராயரவர்கள் இந்நான்கு கனவான்களும் திருக்களர்க்கோவிலை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரத் திருவுளங் கொண்டும், மேற்படி மு. சுவாமிநாத உபாத்தியாயருடைய துக்கத்தை நிவர்த்தி செய்தும் வைத்தனர்.
இப்பெருமகனின் பெருமுயற்சியால் காடு மூடிக்கிடந்த திருக்களர் பெரிய கோவில் புதுப் பொலிவு பெற்றது. கோவிலூர் ஸ்ரீமத் வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் திருவுளப்படி மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து திருக்களர் கோவிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலி ஐயாயிரத்துப் பன்னிரண்டுக்குச் சரியான (கி.பி.1911) விரோதிகிருது வருடம். சித்திரை மாசம் குருவாரம் புனர்பூச நட்சத்திரங் கூடிய நற்றினத்தில் அட்டபந்தன மகாகும்பாபிடேகம் நடைபெற்றுக் கோவில் நன்னிலைக்குத் திரும்பியது. திரு. மாதவராயருடைய பெருமுயற்சியால் சிவன் விரும்பி உறையும் திருத்தலங்களுள் திருக்களரும் ஒன்றானது.
தமிழ்ப்பணி
இம்மகானின் சைவப் பணியும், தமிழ்ப்பணியும் அளவிடற்கரியதாகும். நவீன வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் நாடு முழுவதும் நடையாய் நடந்து நற்பணியாற்றியுள்ளார். இவரெழுதிய சைவசமயமும் தமிழ்ப்பாடையும் (1921) என்றும் நூலில் தமிழின் பெருமைகளை வியந்து போற்றியுள்ளார். அக்காலத்திலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அவர் எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கனவாகும். நம்முடைய தமிழ்த் தேயத்திலே பூர்வீகத் தமிழர் மரபிலே பிறந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் கூடிய வரையில் முயற்சி செய்து ஆங்காங்கு பற்பல தமிழ்ப் பாடசாலைகளை ஏற்படுத்தி (இடைக் காலத்தில் சொரூப பேதமடைந்த ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, னா, னை, னெ, னே இவ்வெழுத்துக்களுக்குப் பதிலாக ஆதிகாலத்திலிருந்தபடி ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, இவ்வெழுத்துக்களை அமைத்தும், ஆரிய பாடையிலிருந்து சேர்ந்திருக்கும் ஐ, ஸ, ஷ, க்ஷ, ஹ இவ்வெழுத்துக்களில் வகையறா அறுபத்தைந்து எழுத்துக்களை நீக்கியும்) சுத்தத் தமிழில் யாவும் கற்கவும் கற்பிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
இவரெழுதிய நூல்கள் பல. இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இவரெழுதிய நூல்களைப் பற்றி இவரே குறிப்பிட்டுள்ளார். திருக்களர்ப்புராணம், திருக்களர்ச்சார சங்கீரகம் திருக்களர் விளக்கம் ( 2,3,4, பாகங்கள்) திருக்களர் வீரசேகரஞான தேசிகர் சரித்திரம், களப்பாள் கசேந்திரவரதர் புராணம், களப்பாள் சிவசேத்திர விளக்கம், திருச்சிற்றேமம் சிவசேத்திர விளக்கம். திருவிடும்பாவனம் சிவசேத்திர விளக்கம். முப்பொருள் விளக்கம் (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதிமகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்க மகிமை, பஞ்சாக்கர மகிமை) திருவிடைவாய் கல்வெட்டினின்று 1917-ம் வருடங்கண்டு பிடித்தது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருவிடைவாய்த் தேவாரம், சைவ சமயமும் தமிழ்ப்பாட்டையும், சூரியகுலக் கள்ளர் சரித்திரம். செந்தமிழாரம்பப் போதனாமுறை என்னும் புத்தகங்களை அச்சிற் பதிப்பித்து பலருக்கும் இனாமாகக் கொடுத்தார். கள்வர் கோமான் என்னும் பத்திரிகையும் நடத்தினார் என்ற செய்திகளை அறிய முடிகிறது.
4. மக்கள் தொண்டர் மாணிக்கம் ஏற்றாண்டார். 1917 - 1987
திருச்சி மாவட்ட ஏற்றாண்டார் பட்டி (நடராசபுரம்) என்னும் சிற்றூரில் உயர் திரு பரிமணம் ஏற்றாண்டார் உண்ணாமலை அம்மாள் என்னும் கள்ளர் குல தம்பதியினற்கு மகனாக 1917ம் வருடம் மாணிகம் பிறந்தார். இவரது பெற்றோர் மிகுந்த வளமிக்க விவசாய குடும்பதை சார்ந்தவர்கள், இக்குடும்பம் கிராமத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் கொண்ட பாரம்பரிய குடுபமாகும்.
தனது பள்ளிப்படிப்பை ஈ.ஆர் உயர் நிலை பள்ளியில் துவங்கிய இவருக்கு இவருடன் படித்த சக பிராமண மாணவர்களின் நய்யாண்டி செயல்கள் ஆரம்ப முதலே பிடிக்கவில்லை. நீ இவ்வளவு பணக்காரனாய் இருந்துகொண்டு ஏன் இங்கு படிக்க வரவேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாத மாணிக்கம் இப்பள்ளியை விட்டு நீங்கி லால்குடியில் இருந்த அரசு மேல் நிலை பள்ளியில் சேர்ந்து தனது கல்வியை தொடர்ந்தார். இங்கு இவருடன் கல்வி பயின்ற சக மாணவருள் அன்பில் தருமலிங்கமும் ஒருவர். வருமையில் வாழும் பிறருக்கு உதவி செய்வதில் அன்பில் தர்மலிங்கமும் அதிக ஆக்கமும் ஊக்கமும் உடையவர்.
வறுமையில் வாழும் பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட இருவரும் ஒன்று சேர்ந்து வசதி இன்றி சிரமப்படும் மணவர்களுக்கு உணவு வழங்கும் செயல்களில் ஈடுபட்டனர். பின்நாட்களில் இருவருமினைந்து வசதியின்றி தவிக்கும் கள்ளர் குல மாணவர்கள் தங்கிப்படிக்கும் கள்ளர் மானவர் விடுதி ஒன்றினை லால்குடியில் ஆரம்பித்தனர். இக் கள்ளர் குல விடுதியே பின்நாளில் மிகவும் பிரசித்த பெற்ற விடுதியாக லால்குடியில் விளங்கியது. இவ்விடுதியில்தான் ராஜ ராஜன் பண்பாட்டுக்கழக அமைப்பாளர் திரு. சந்திரகாசன் ஐ.ஏ.ஏஸ் தங்கிப்படித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
இவ்வாறு மாணவர்களின் பணிகளை செய்து வந்த மாணிக்கம் ஏற்றாண்டார் பரிமணம் ஆரம்பப் பள்ளியை நிறுவி ஏழை மாணவர்களுக்கு உதவினார். இந்திய விடுதலைக்கு முன்னர் கல்வி பயில வசதியற்ற மாணவர்களின் நிலை உணர்ந்து 1945ம் ஆண்டு திருவரும்பூரில் தனது உறவினர், நண்பர்கள், தன்னை அறிந்தவர்கள் மூலம் நிதி திரட்டி முக்குலத்தோர் பள்ளி என்று ஒரு கல்வி நிறுவணத்தையும் ஆரம்பித்தார். இப்பள்ளிக்கு நடிகர் திலகம் திரு சிவாஜிகணேசன் மண்ராயரும் நிதி அளித்தமை குறிப்படத்தக்கது. இக்கால கட்டங்களில் மாணிக்கம் ஏற்றாண்டார் உரிமை முரசு என்னும் வார பத்திரிக்கை ஒன்றையும் துவக்கி நிறுவனராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டார். இத்துடன் முக்குலத்தோர் சங்கத்தையும் ஏற்படுத்தி அதன் பொதுச்செயளராகவும் பணிபுரிந்தார்.
உரிமை முரசு ஓங்கி வளர்ந்த நிலையில் பள்ளியில் படிக்க வசதியின்றி படிக்கமுடியாமலும் உணவின்றி தவிக்கும் தாய், தந்தை இல்லாத குழ்ந்தைகளின் நிலைகண்டு வருந்தி இவர்களுக்கு உதவிடும் நோக்குடன் தமிழ் நாடு மறவர் இல்லத்தினை திருச்சி கைலாசபுரத்தில் தோற்றுவித்து இலவச கல்வியையும், உணவினையும் ஏழை எளிய மணவர்களுக்கு அளித்து மாணவ சமுதாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.
பசும்பொன்முத்துராமலிங்க தேவர், மூக்கையாதேவர், ஆண்டியப்பத்தேவர் முதலானோருடன் சேர்ந்து முக்குலத்தோர் சங்கத்தினையும் நிறுவி பொதுஸ் செயளாளர் பதவியையும் ஏற்றார். மாணிக்கம் ஏற்றாண்டார் அந் நாட்களில் இருந்து வந்த பிராமண சாதி வெறியாளர்களை புறம் தள்ளி
பிற்படுத்தபட்டவர்களின் முன்ணேற்றத்திற்கும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் எழுப்பி தேசியளவில் விழிப்புணர்சியை ஏற்படுத்தினார். முக்குலத்தோர் சங்கம் இவரின் பணிகளை பாராட்டி முக்குலத்தோர் சங்க பொன் விழாவில் மக்கள் குலவேந்தர் என்ற கௌரவ பட்டத்தையும் வழங்கி இவரை கௌரவித்தது.
இவரின் அயராத உழைப்பிணை உணர்ந்து இவருடன் இணைந்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புதுக்கோட்டை தியாகராச காடுவெட்டியார், பூண்டி வாண்டையார் ஆவார்கள். இவர்களின் பகளிப்பு பின்நாட்களில் முக்குலத்தோர் முன்னேற்றத்திற்கு ஈடு இனையற்றதாக விளங்கியது. 24 அக்டோபர் மாதம்1987ல் மக்கள் தொண்டர் மாணிக்கம் ஏற்றாண்டார் இயற்கை எய்தினார். இறுதி மூச்சுவரை அயராது உழைத்த இப்பெருமகனாரின் உடல் தமிழ்நாடு மறவர் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
5. வில்வையா மன்னையார் சாம்பசிவம் 1880 - 1953
மருத்துவ அகராதி தந்த மேதை
சாம்பசிவம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடியைச் சேர்ந்த வில்வையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மாளுக்கும் பிறந்தவர். இவர் தமிழறிஞரும் சென்னை நகரப் போலிஸ் துணை ஆணையாளருமான பவானந்தம் சகோதரி மகள் துரைக்கண்ணு அம்மையாரை 1903இல் மணந்துகொண்டார்.
இவர் 1931ஆம் ஆண்டில் மருத்துவக் கலைச்சொல் அகராதியை வெளியிட்டுள்ளார். சாம்பசிவம் ஏற்படுத்திக்கொண்ட The Research Institute of Siddhars Science, Madras என்ற பெயரளவிலான நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார். அகராதியின் இரண்டு தொகுதிகள் 1938இல் ரூபாய் 12,000க்கும் அதிகமான செலவில் வெளிவந்துள்ளன. 1949இல் சென்னை மாநில அரசு 5,000 ரூபாய் உதவித் தொகையும் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வீடும் வழங்கிற்று என்ற விவரமும் உள்ளது. மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில் 1953இல் சாம்பசிவம் காலமானார். 1966இல் மறைமலை அடிகள் நூல் நிலைய நிறுவனர் வ. சுப்பையா பிள்ளை சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அகராதியின் கையெழுத்துப் படிவங்களையும், அச்சிட்ட படிவங்களையும் எடுத்து வந்ததாகவும் அவை 1972இல் அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.
சாம்பசிவம் கருத்தியல் பின்புலம் தெளிவாக வெளிப்படவில்லை. இவருடைய குடும்பத்தில் எவருக்கும் முறையான மருத்துவப் பயிற்சி இருந்ததாகவும் தெரியவில்லை. காவல் துறை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் இவர். இவருடைய பாட்டனார் எழுதி வைத்திருந்த சில பழைய மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்தன என 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் குறிப்பிட்டுள்ளார். சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டுக் கட்டப்பட்ட பிரதிகளைக் கண்ணுற இயலவில்லை
4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச்சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு கருவி நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி. தமிழ் அகராதியியலில் பெருஞ் சாதனையாகத் திகழும் இந்த அகராதி உருவான (1912 - 1936) அதே காலகட்டத்தில் மற்றொரு சிறந்த அகராதியும் உருவாகியிருக்கிறது. பல்கலைக்கழக அகராதி ஒரு பெரும் கல்வி நிறுவனத்தால், பல லட்சம் பணச் செலவில், ச. வையாபுரிப் பிள்ளை என்ற பேரறிஞரின் தலைமையில், மு. ராகவையங்கார், ஜி.யு. போப், அனவரத விநாயகம் பிள்ளை, பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி முதலான பல அறிஞர்களின் பங்களிப்போடு தயாரான தென்றால், இந்த அகராதி ஒரு தனிமனிதரின் முயற்சியில், அவர் ஒருவரின் பொருட்செலவில் மட்டுமே உருவானது. பெப்ரிசியஸ், வின்சுலோ போன்ற முன்னோடிகள் சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்குக் கைகாட்டியாக விளங்கினரென்றால் ஒரு சிறப்பகராதி என்ற முறையில் இவ்வகராதிக்கு முன்னோடியே இல்லை. தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கிய மருத்துவ அகராதியான A Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences என்ற அரிய சாதனையே இங்குச் சுட்டப்படுகிறது.
ஐந்து பெருந்தொகுதிகளும் 4,000 பக்கங்களும் 80,000 தலைச்சொற்களும் கொண்ட இவ்வகராதி இன்றைக்கும் மலைப்பை ஏற்படுத்துவது. தமிழ்ச் சித்த மருத்துவத் துறையில் இன்றும் நினைவில் கொள்ளப்படுவதோடு நடைமுறைப் பயனும் கொண்டதாக இந்த அகராதி இருக்கிறது. பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் சாம்பசிவம் பிள்ளையின் அகராதியிலிருந்து 'சா. அக.' என்ற குறுக்கத்தோடு எடுத்தாளப்பட்ட ஏராளமான தலைச்சொற்களுக்கான சொற்பிறப்பும், விளக்கமும், ஆங்கில இனச் சொல்லும் அமைந்திருப்பதைப் பரக்கக் காணலாம். சொல்லப் போனால் 'சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்கு அடுத்தபடியாகப் பயன்படுவது, சாம்பசிவம் பிள்ளை தமிழ் - ஆங்கில அகரமுதலியாகும். மருத்துவத் துறையில் அது நல்கும் அறிவு மதிப்பிடுந் தரமன்று' என்றே பாவாணரின் அகரமுதலி முன்னுரை சுட்டுகின்றது.
இருப்பினும் இந்த அகரமுதலி பற்றியும் இதனை உருவாக்கிய மேதையினையும் தமிழுலகம் போதுமான அளவு அறியவோ, போற்றவோ இல்லை. பெருமுயற்சியால் திருவினையாக்கிய டி.வி. சாம்பசிவம் பிள்ளை தம் வாழ்நாளில் இந்த அகராதியை அச்சு வடிவில் முழுமையாகக் காணவும் கொடுத்துவைக்கவில்லை. பண்டை நூல்களை மட்டுமே 'நுண்பல் சிதலைகள்' தாக்கி அழிக்கும் என்ற நினைப்புக்கு மாறாக, இருபதாம் நூற்றாண்டிலும் கரையான்களும் ஈசல்களும் சிலந்திகளும் தமிழோடு விளையாடி இருக்கின்றன. இந்தத் துன்பியல் நாடகத்தை மீட்டுமொரு முறை உரைக்க இக்கட்டுரை தலைப்படுகிறது.
சாம்பசிவம் பிள்ளை அகராதியின் சிறப்புகளை அத்துறை வல்லாரே முழுவதுமாக மதிப்பிட முடியும். உடற்கூறு, நோய்கள், மருந்துகள், மருத்துவ முறைகள், மூலிகைகள், தாவரங்கள், ரசாயனங்கள், ரசவாதம், கானியம், யோகம், மந்திரம், தந்திரம், தத்துவம் முதலான பலவற்றையும் உள்ளடக்கியதாக இந்த அகராதி விளங்குகிறது. இது அடிப்படையில் மருத்துவ அகராதியே ஆயினும் தமிழின் வளத்தையும் செழுமையினையும் காட்டக்கூடிய ஒரு கருவி நூலாகும். அகராதி அமைப்பைக் கொண்டதாயினும், பொருள் விளக்கங்கள் முதலானவை கலைக்களஞ்சியம் எனத்தக்க அளவில் விரிவாக அமைந்துள்ளன (எ-டு: 'அவுரி'; 'காடி'). 'ஔஷத வகுப்பு' போன்ற தலைச்சொற்களுக்கான விளக்கம் ஒரு தனிக் கட்டுரையாகவே சாம்பசிவம் பிள்ளை எழுதியுள்ளார். பல தலைச்சொற்களுக்கு விரிவான அடிக்குறிப்புகளும் எழுதியுள்ளார். மூலிகைகளுக்கான விளக்கங்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்று சொல்லுமளவுக்கு, Materia Medica போல் மிக விரிவாக அமைந்துள்ளன.
சாம்பசிவம் பிள்ளை வகை தொகையாக ஏராளமான தலைச்சொற்களை வழங்கியுள்ளார். 'அத்தி'க்கு 14 வகை, 'சங்கு'க்கு 23 வகை என ஏராளமான செய்திகள் உள்ளன. 'பேய்' என்ற முன்னொட்டோ டு அமைந்துள்ள பதின் கணக்கான தலைச்சொற்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன. இதேபோல் தீவிர நாடி, துள்ளு நாடி, வன்னாடி, அபல நாடி, நெருங்கிய நாடி, நிறை நாடி, கதி நாடி, தடங்கு நாடி, இடை விடு நாடி, தளம்பு நாடி, ஒழுங்கு நாடி, சுடர் நாடி, மென்னாடி, நுன்னாடி, கம்பி நாடி, மரண நாடி, விகற்ப நாடி, சன்னி நாடி, பூத்த மங்கை நாடி, ஒடுங்கு நாடி, துடி நாடி, உதர நாடி, இரட்டை நாடி, குதிரையோட்ட நாடி, தெறிக்கு நாடி எனப் பட்டியலிட்டிருப்பது தமிழ் மருத்துவத்தின் நோயறி திறனை வியப்புறக் காட்டுகிறது. இதேபோல் தாவர வகைகளையும் மூலிகை வகைகளையும் இவ்வகராதி அடக்கியுள்ளது.
விரிவாக அமைந்த தமிழ் விளக்கங்களோடு ஆங்கிலத்திலும் விளக்கங்கள் உள்ளன. மிகச் செறிவானதும் துல்லியமானதுமான ஆங்கிலத்தில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 'திகைப்பூண்டு மிதித்தால்' ஏற்படும் மருட்சியைச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி 'bewilderment' என்னும். சாம்பசிவம் பிள்ளையோ 'stupefaction' என்பார். சாம்பசிவனாரின் பொருட்சுட்டலே நுட்பமும் பொருத்தமும் உடையது. 'மயிர் நீப்பின் உயிர்வாழாக்' கவரிமான் என்ற விலங்கினை Tibetian yak என்று இவர் மா. கிருஷ்ணனுக்கு முன்பே இனங் கண்டுள்ளார். தாவர, மூலிகைப் பெயர்களுக்கு அவர் கூடுமானவரை இலத்தீனில் அமைந்த அறிவியல் பெயர்களையும் வழங்கியுள்ளார். தாம் அறியாதவற்றை 'unknown', 'unidentified' என்று அவர் குறித்திருக்கும் அறிவு நேர்மை இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஒரு பாடமாகும்.
6. தொ.மு. பாஸ்கர தொண்டமான் 1904 - 1965
சோழர்கள் ஆட்சியில் தஞ்சைத் தரணியில் ஆலயங்கள் பொலிவு பெற்று விளங்கின. மாடக்கோயிலகள் மூலமாக அந்தப் பொலிவுக்குப் புதிய வடிவுகண்டான் கோட்செங்கட்சோழன். செங்கற் கோயில்களை கருங்கற் கோவில்களாக அமைத்து அந்த வடிவுக்குப் புதிய வலிமை கண்டனர் பராந்தகனும், கண்டரரதித்தனும் அவன் மனைவியார் செம்பியன் மாதேவியாரும்.
விண்னை முட்டும் கோபுரமும் படைத்து அந்த வலிமைக்கு புதிய வனப்பும் சேர்த்தனர் ராசராசனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும். இத்தகைய சிறப்பு மிக்க ஆலயங்கள் அந்நியர் படையெடுப்பிலும், ஆட்சியிலும் பொலிவு குன்றி இருட்டடிப்புக்கு ஆளாயின.
ஆலயங்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வித்திட்ட பெருமை கொண்டவர் அமரர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். வேங்கடம் முதல் குமரி வரை என்ற கட்டுரை தொடர்களை கல்கி வார மலர்களில் வெளியிட்டு பக்தியில் பரவசத்துடன் பயனிக்க வைத்தவர் ஆன்மீகச் செம்மல் பாஸ்கர தொண்டைமான் அவர்கள்
அரசுப் பணியில் இருந்தவண்ணம் அருந்தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இப்போதெல்லாம் தினசரிகளும் சரி, வார சஞ்சிகைகளும் சரி போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் பற்றியும், சரித்திரப் பிரசித்தி பெற்ற தலங்களைப் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் "கலைமணி" தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்தான்.
நெல்லை மாவட்டம் தமிழுக்கு அளித்திருக்கும் கொடைகள் ஏராளம் ஏராளம். பல தமிழறிஞர்கள் நெல்லைத் தரணியில் தோன்றி மொழிப் பணியாற்றி இருக்கின்றனர். அந்த வரிசையில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி நெல்லையில், தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.
இவரது தந்தை வழிப் பாட்டனார் சிதம்பரத் தொண்டைமான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்றால், தகப்பனார் முத்தையாவோ தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற அறிஞர். இப்படிப்பட்ட மொழி ஆளுமைமிக்க குடும்பத்தில் பிறந்த பாஸ்கரத் தொண்டைமானுக்கு இயற்கையிலேயே தமிழில் நாட்டமும், கலைகளில் ஈடுபாடும் ஏற்பட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
அன்றைய வழக்கப்படி, கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்து கொண்டுவிட்ட பாஸ்கரத் தொண்டமானின் மாணவர் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. கல்லூரி நாள்களில் பாஸ்கரத் தொண்டைமானிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இருவர்.
ஒருவர் தொண்டைமான் படித்த இந்துக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர்.
இன்னொருவர், "சொல்லின் செல்வர்" இரா.பி.சேதுப்பிள்ளை.இரா.பி.சேதுப்பிள்ளையின் தூண்டுதலின் பேரில்தான் பாஸ்கரத் தொண்டைமான் தனது கல்லூரி நாள்களிலேயே "ஆனந்தபோதினி" பத்திரிகையில் கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதினார். கம்பனின் கவிதையில் காதல் வசப்பட்டவர்கள் இரசிகமணியின் இரசனை வட்டத்திற்குள் இழுக்கப்படுவது என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதானே?
"இரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியாரின் பரிச்சயமும், அவருடன் அமர்ந்து கம்பனை வரிவரியாக இரசித்துப் படிக்கும் அனுபவமும் பாஸ்கரத் தொண்டைமானின் தமிழ்ப் பித்துக்கு மெருகும் உரமும் ஊட்டின. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற கையோடு, அரசு உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. இன்றைய "வனவள"த் துறைக்கு அப்போது "காட்டிலாகா" என்று பெயர். காட்டிலாகாவில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே, பாஸ்கரத் தொண்டைமான் வருவாய்த் துறை ஆய்வாளரானார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், மாவட்ட உதவி ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்தார் அவர்.
இவரது சேவையைக் கருதி, அரசு இவரை இந்திய அரசுப் பணி (ஐ.ஏ.எஸ்.) தகுதியை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தது.1959ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பாஸ்கரத் தொண்டைமான் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்பிவிட்டார். தமது பாரம்பரியமான வீட்டில் தங்கி தமது இலக்கியப் பணியைக் கடைசிக் காலம்வரை தொடர்ந்தார் என்பது மட்டுமல்ல, அவர் எழுதிக் குவித்ததும் ஏராளம் ஏராளம். பாஸ்கரத் தொண்டைமான் எங்கெல்லாம் பணியாற்றினாரோ அங்கெல்லாம் அரசுப் பணியுடன் தமிழ்ப் பணியும் ஆற்றினார் என்பதுதான் அவரது தனிச் சிறப்பு.
தஞ்சையில் அவர் பணி புரிந்தபோது அங்கே கிடைத்தற்கரிய கலைச் செல்வங்களும், சிற்பப் படிவங்களும், சரித்திரத்தின் அடிச்சுவடுகளும் கேள்வி கேட்பாரற்று வீணாகிப் போவதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவைகளை எல்லாம் முறையாக சேமித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்துத் தமிழரின் சரித்திரத்துக்கு வலு சேர்த்த பெருமை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுடையது!
நெல்லை வண்ணாரப்பேட்டையில் அப்போதெல்லாம் தமிழகமெங்கும் உள்ள தேர்ந்தெடுத்த இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றுகூடுவார்கள். அவர்கள் ஒன்றுகூடும் இடம் "இரசிகமணி" டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வீடு. சாரல் பருவம் வந்துவிட்டால், இவர்கள் குற்றாலத்தில் இருக்கும் இரசிகமணியின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் நடு முற்றமாக வட்டவடிவில் அமைந்த தொட்டிக்கட்டு அமைப்பில்தான் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரசிகமணியின் நண்பர் வட்டம் கூடும். அவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவர், சங்க இலக்கியம் என்று இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்தில் டாக்டர் சாமுவேல் ஜான்சன் தனது நண்பர் வட்டத்தைக் கூட்டி இலக்கியக் கழகம் என்ற பெயரில் இலக்கிய ஆய்வுகள் நடத்துவாராம். அதேபோல, இலக்கிய ஆய்வு நடத்தும் திருநெல்வேலியிலுள்ள இரசிகமணியின் நண்பர் வட்டம், "வட்டத் தொட்டி" என்று வழங்கலாயிற்று.
வட்டத் தொட்டியின் தலைவர் இரசிகமணி டி.கே.சி. என்றால் அதன் தூண்களில் ஒருவராகச் செயல்பட்டவர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.
- "கம்பர் அடிப்பொடி" சா.கணேசன்
- மு.அருணாசலப் பிள்ளை
- நீதிபதி மகாராஜன்
- மீ.ப.சோமு
- நாமக்கல் கவிஞர்
- "கவிமணி" தேசிக விநாயகம் பிள்ளை
- தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வரும், ஆங்கிலப் பேராசிரியருமான ஆ.சீனிவாச இராகவன்
- ஏ.சி. பால் நாடார் மற்றும்
- வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்
அவர்களும் சேர்ந்து கொண்டால், வட்டத் தொட்டியின் கலகலப்புக்கும், இலக்கிய சர்ச்சைக்கும் கேட்கவே வேண்டாம். இந்த இலக்கிய சர்ச்சைகளில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் பங்களிப்பு மிகவும் அதிகம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் எண்பதாவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று நெல்லையிலுள்ள நண்பர்கள் முடிவெடுத்து ஒரு விழா எடுப்பது என்று தீர்மானித்தனர்.
"வெள்ளைக்காலை வாழ்த்த உத்தமதானபுரத்திற்குத்தான் தகுதியுண்டு" என்பது இரசிகமணியின் கருத்து. அவரே "தமிழ்த் தாத்தா" உ.வே. சாமிநாத அய்யரவர்களுக்குக் கடிதம் எழுதி அவரது இசைவையும் பெற்று விட்டார். இந்துக் கல்லூரி மாடியில் நடந்த விழாவுக்கு அறிஞர்களும், தமிழன்பர்களும் திரண்டு வந்திருந்தனர். விழாத் தலைவரான "மகா மகோபாத்தியாய" டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு முதிர்ந்த பருவம். அவரை அழைத்துக் கொண்டு, வழிநடத்திச் சென்று தலைமைப் பீடத்தில் அமரவைத்த இளைஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.
விழாத் தலைவர் உ.வே.சா. பேசும்போது அவர் குறிப்பிட்டதை அப்படியே தருகிறோம்:- "என்னைப் பலகாலும் வற்புறுத்தி நீ மேலேற வேண்டும். எனவே, படி, படி என்று தூண்டி உற்சாகப்படுத்தி வந்தவர் எனது ஆசிரியர் பெருமானாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பார் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யத் தொடங்கிவிட்டீர்கள். நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை பல உள்ளன என்பதையும், அவற்றை எல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். மேலும் படி, படி என்று சொல்ல ஆசிரியப் பெருமானாகிய பிள்ளை அவர்கள் இல்லாத குறையும் இன்று தீர்ந்தது. என்னை அழைத்து வந்தானே ஒரு பிள்ளையாண்டான். அவன் வயதிலும், உருவத்திலும் சிறியவன்தான். ஆனால், அவன்தான் என் ஆசிரியப் பெருமானின் ஸ்தானத்தை இன்று வகித்தவன். ரெயிலடியில் இறங்கியது முதல் இங்கு வந்து அமரும் வரை என் கூடவே வந்து, படி, படி என்று கூறி வழியும் காட்டி, மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேனிலைக்கே கொண்டு வந்து தலைமைப் பீடத்திலும் அமர்த்திச் சென்றுவிட்டான். பிள்ளையவர்கள் ஸ்தானத்தை வகித்து "என்னை ஆண்டான்" என்ற பொருள்பட இந்தத் தம்பியைப் "பிள்ளையாண்டான்" என்று குறிப்பிட்டேன். இந்தத் தம்பி பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க!"
இதைக் கேட்ட வெள்ளக்கால் எண்பதாண்டு விழாக் குழுவில் செயலாளராக இருந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்கு நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி. "தமிழ்த் தாத்தா" தன்னைத் தம்பி என்று அழைத்ததால் பிற்காலத்தில் "தம்பி" என்ற புனைப்பெயரில் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் தொ.மு.பா. எழுதினார்.
"தமிழ்த் தாயின் தவப் புதல்வர் திருவாயால் வாழ்த்துப் பெறவும், "தம்பி" என்று அவர் அமுதூர அழைக்கவும் என்ன பாக்கியம் செய்தேன்!" என்று பாஸ்கரத் தொண்டைமான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழ்வாராம்.
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், நெல்லைக்குத் திரும்பினாலும், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றில் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் நுணுகி ஆராய்ந்து கட்டுரைகளாக வடித்தார் பாஸ்கரத் தொண்டைமான். இந்தக் கட்டுரைகள் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் "கல்கி" வார இதழில் தொடராக வந்தது.
- வேங்கடத்துக்கு அப்பால்
- பிள்ளைவாள்
- தமிழறிஞர் முதலியார்
- இரசிகமணி டி.கே.சி.
- கலைஞன் கண்ட கடவுள்
- கல்லும் சொல்லாதோ கவி
- அமர காதலர்
- தென்றல் தந்த கவிதை
- தமிழர் கோயில்களும் பண்பாடும்
- கம்பன் கண்ட இராமன்
- அன்றும் இன்றும்
இவரது நூல்கள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கிறது.
முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. இரகுநாதன் இவருடைய இளைய சகோதரர்.
நீதிபதி மகாராஜன் தொகுத்தது போல, பாஸ்கரத் தொண்டைமானுக்கு இரசிகமணி எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. காரைக்குடி கம்பன் விழா என்றால், தவறாமல் ஆஜராகி விடுவார்கள்,
தொண்டைமான்
மகாராஜன்
ஆ.சி.ரா. போன்ற வட்டத்தொட்டி நண்பர்கள்.
இவர்களது உரையைக் கேட்பதற்காகவே இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் காரைக்குடி நோக்கிப் படையெடுக்கும். அது ஒரு காலம்!
தமிழும், கலையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதி வாழும் வரை, இவரது நூலும் வாழும். இவரது புகழும் வாழும்!
7. சிதம்பரம் கண்டியர் துரைராசா 1905 - 1970
தஞ்சை மாநில சிராங்குடி சிதம்பரம் கண்டியர், அஞ்சலை அம்மாள் தம்பதியினருக்கு 5 செப்டெம்பர் 1905இல் துரைராசர பிறந்தார்.
முதன் முதலில் அயல் நாடுகளில் கள்ளர் மகாசபையை உருவாக்கியவரும் இவரே. 1942ல் கள்ளர் மகா சபையை உருவாக்கி இறப்பு வரை நிர்வகித்த பெருமை இவரை சாரும். கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 1948ல் கள்ளர் மகாசபை 903 தஞ்சை கள்ளர்களை அங்கத்தினர்களாக கொண்டு செயல்பட்டதாக இலங்கையில் கண்டி மாநகர அரசுப் பதிவகத்தில் பதிவாகியுள்ளது. 1967ம் ஆண்டு அறிக்கையின் படி கள்ளர் மகாசபை 1643 அங்கத்தினர்களை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றது.
மேலும் 1942 முதல் 1967 வரை தொடர்ந்து 26 ஆண்டுகள் திரு துரைராச கண்டியர் (கண்டி)தலைவராகவும், திரு சுப்பையா விஜயதேவர் (வத்துகாமம்)தொடர்ந்து 23ஆண்டுகள் செயளாளராகவும், கோவிந்தசாமி கங்கைநாட்டார் (கெங்காலை) 19 ஆண்டுகள் பொருளாளராகவும் செயல்புரிந்தமையும், திரு கோபால் ராஜாளியார்(அம்பிட்டி), திரு வேதமுத்து தெங்கொண்டார் (கலகா), திரு சௌமியமூர்த்தி தொண்டைமான்(ரம்பொடை), ரத்தினம் கிளாமுடையார்(கொழும்பு), ராஜமுத்தையா காலிங்கராயர்(மடுல்களை), வேலு சாளுவர்(பண்டாரவளை), நாரயணசாமி தஞ்சைராயர்(உடுவரை) போண்றோர் ஆயுல் கால செயல் உருப்பினர்களாக இருந்தமையயும் அரசுப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.
திரு துரைராச கண்டியர் முற்போக்கு சிந்தனையாளராகவும் பல்வேறு உதவிகளையும் பல்வேறு மக்களுக்கு செய்தமையால் 1955ல் இலங்கை அர்சு இவருக்கு சமாதான நீதிமான் (ஜெ.பி.யு.எம்) என்ற கௌரவ பட்டத்தினை வழங்கியுள்ளது. இப்பட்டத்தினை பெற்ற முதல் தமிழர் இவராவார். இவர் இலங்கையில் இருப்பிடமாக கொண்ட மல்பானை என்னுமிடத்தில் முதல் கூட்டுரவு பண்டகசாலை மையத்தை 1956ல் உருவாக்கி பெருமை படைத்துள்ளார். கிருத்துவ மிஷனரி மூலம் தமில் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக ராஜவலை மெதடிஸ்ட் மிஷன் என்ற பெயரில் பள்ளி ஒன்றினையும் 1950ல் ஆரம்பித்துள்ளார். இப் பள்ளி தற்போது அரசுடமையாக்கப்பட்டு 1200 தமிழ் மாணவர்கள் பயிலும் கல்விக்கூடமாக இருந்துவருகிறது. 1969ம் வருடம் வரையிலும் கண்டியரே பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராகவும் இப் பள்ளியில் செயல் பட்டுள்ளார்.
மல்பானை புத்த விகாரையில் தமிழ் தெய்வங்களுக்கு முருகன் மற்றும் அம்மன் கோவில்களையும் கட்டியுள்ளார். கிராம மக்கள் பயன்பாட்டிற்காக 14 கிணறுகளையும் அமைத்து குடிநீர் தேவைகளையும் பூர்த்திசெய்துள்ளார். மேலும் 1951 முதல் தனது இறப்பு வரை கதிர்காமத்தில் தெய்வாணை அம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில்,சந்தனமலை கோவில், கதிரைமலை கோவில், செல்வக்கதிர்காமக் கோவில் அனைத்திற்க்கும் அறங்காவலராகவும்,கண்டி பிள்ளையார் கோவில் அறங்காவலராகவும் பணியாற்றியுள்ளார். கதிர்காமத்தில் பக்தர்கள் தங்கும் வசதிக்காக 30 அறைகள், நூலகம், உணவு அளிக்கும் அண்ணதானகூடம் உற்பட்ட தெய்வானை அம்மன் மடத்தையும் கட்டி நிர்வகித்த பெருமையும் கொண்டார். இவரை கதிர்காமக் கண்டியர் என்றே பலரும் அழைப்பர்.
பேச்சு வலக்கில் தவறாக உச்சரிக்கப்படும் கள்ளர் மறவர் அகம்படியர் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆனார் என்பது தவறு என்றும் உண்மையில் இச் சொல்வாக்கு கள்ளர், மரவார்,அகமுடையார் மெல்ல மெல்ல வள்ளல் ஆனார் என்பதே ஆகும் என்று உரக்க குரல் கொடுத்தவரும் இவரே. இலங்கையில் பெரும்பாலன கள்ளர் குல திருமணங்கள் இவர் தலைமையிலேயே நடந்துள்ளன. இவர் 24 டிசம்பர் மாதம் 1970ல் இயற்கை எய்தினார்.
8. சின்னையாப்பிள்ளை மன்றாயர் கணேசன். 1927 - 2001
புகழ் பெற்ற தமிழ்திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர்,பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில்பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.
திரைப்பட வாழ்க்கை 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத்திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா,வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன்,வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
அரசியல் வாழ்க்கை
1955வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர்,1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி,தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
விருதுகளும் கௌரவங்களும்
- ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
- பத்ம ஸ்ரீ விருது (1966)
- பத்ம பூஷன் விருது (1984)
- செவாலியே விருது (1994)
- தாதா சாகேப் பால்கே விருது (1997)
- 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்ட பூண்டியில் 1899 இல் பாரம்பரிய மிக்கச் சான்றோர்கள் தோன்றிய மிகவும் பிரபலமான கள்ளர் குடியில் பிறந்தவர் திரு வீரையாவாண்டையார். வேளான்மையில் மேம்பாடு எய்தியமைக்காக பேராசி விக்டோரியா மகாராணியடம் விருது பெற்ற பேராளர். சமுதாய,நாட்டு நலப்பணிகளில் பங்கேற்று நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு உழைத்துப் புகழ் பெற்றவர். ஆங்கில அரசின் நட்பையும் பாராட்டுகளையும் பெற்று இராவ்பகதூர் பட்டமும் பெற்று சிறப்பிக்கப்பட்டவர். குடந்தையும், பாபநாசமும் ஒரே தாலுகாவாக இருந்தபோது தலைவராக 10 ஆண்டுகள் கடமையாற்றி தனது பயணப்படி ஊதியமான ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று 10 ஆண்டுகளும் வாங்காதவர் இவர் ஒருவரே.
6000 ஏக்கருக்கதிபதியாய் ஆளுவோரின் ஆரவணைப்பில் ஆட்சி மன்ற தலைவராய் இருந்தது தான் பிறந்த சமுதாயத்தை மறக்காது அதன் எழுச்சிக்காக பாடுபட்ட சமுதாய காவலர் இவரே. 1928ல் திருக்காட்டுபள்ளியிலும், 1933ல் தஞ்சையிலும் கள்ளர் இன இளைஞர் மாநாடு நடத்தியும், 1933 வரை கள்ளர் மகா சங்கச்செயலாளாரகப் பணியாற்றிய பெருமையயும் மிக்கவர். 1945ல் கள்ளர் இனமாணவர்களின் வசதிக்காக விடுதிகள் அமைக்க திட்டமிட்டு இரகுநாத இராசாளியார், ந.மு.வேங்ககட சாமிநாட்டாரின் தம்பி கோவிந்தராயநாட்டார், தஞ்சை வழக்குறைஞர் சுயம்பிரகாசம் ஆகிய பெருமக்களையும் இணைத்து நன்கொடைகள் வசூலித்து துறையூர் ஜமீந்தாருக்கு சொந்தமான தஞ்சை வடக்கு வீதி கட்டிடத்தையும், மேலவீதியில் அமைந்த கட்டிடங்களையும் கள்ளர் சங்கத்துக்காக வாங்கி முறையே பெண்கள் விடுதியும், ஆண்கள் விடுதியும் நடத்த ஏற்பாடுகள் செய்தார்.
இவரது மணைவியார் திருமதி சேதுக்கண்ணம்மாள் 1950 மறைந்தார். துணைவியர் பிரிந்த துயரத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள விரும்பியும் அறிவுலகம் கான விரும்பியும் 1954ல் தனது ஐரேப்பிய பயனத்தை கப்பல் மூலம் மேற்கொண்டார். 6 மாத கடல்பயணத்தில் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ஒல்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து முதலிய நாடுகளின் வளர்ச்சிகளையும், கலைச்செல்வங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தார். இக்கால கட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தையும் பார்வையிடும் வாய்ப்பினையும் பெற்றார். இதன் பிரதிபலிப்பாக தான் பிறந்த மண்ணில் தன் உறவும் சமுதாயமும் வளர்ச்சியுற்று வளம் பெற விரும்பி 1956ல் பூண்டி புஸ்பம் கல்லூரியை ஒரு முன் மாதிரி கல்விக் கழகமாகநிறுவி தஞ்சை வாழ் ஏழை எளிய மற்றும் பிற்பட்ட வகுபினரை சார்ந்த ஆயிரகனக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க உதவியவர் வாண்டைய்யர் அவர்கள். தங்கள் குலதெய்வமான புஸ்ப வாணேஸ்வரனை நினைவில் கொண்டு ஸ்ரீ புஸ்பம் கல்லூரி எனவும் பெயருமிட்டார்.
இக் கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம் கள்ளர் குல மாணவர்கள் பல் ஆயிரம் பேர் இலவச உயர்கல்வி பெரும் வாய்ப்பினைப் பெற்று இன்று பொருளாதர நிலையில் மேன்மை அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. தஞ்சை, திருவாரூர்,நாகை மாவட்டங்களிலும், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி போன்ற பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய இளைஞர்கள் இன்று பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், உயர்நிலை அலுவலர்களாகவும் விளங்க காரணம் இக்கல்வித் திருக்கோயில் தான். கள்ளர் மகாசங்கத்தில் தன்னை இனைத்துக்கொண்டு கள்ளர் குல மக்கள் உயர்வடைய வேண்டும் என்ற பெரு நோக்கில் அயராது உழைத்தவர் திரு வீரையா வாண்டையார் அவர்கள்.
தான் வெகுநாட்களாக தலைமை ஏற்று நடத்திவந்த கள்ளர் மகாசங்கத்தை முக்குலத்தோர் நலத்தை கருத்தில் கொண்டு முக்குலத்தோர் சங்கத்துடன் இனைத்து திரு மாணிக்கம் ஏற்றாண்டார் தலமையில் நாடு தழுவிய வறுமை ஒழிப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக உழைத்த பெருமை இவருக்கு உண்டு. தனது சமூகம் சார்ந்த மற்றும் வறுமையில் வாடிய மாணவ மக்களுக்கு தனது கல்லூரியில் இலவச படிப்பும் உணவும் அளித்து அவர்களின் வாழ்கையில் மறுமளர்ச்சி ஏற்படுத்தியது என்றும் மறக்கமுடியாத ஒரு வரமாகும்.
தங்கள் குடும்ப சொத்தான நெற்களஞ்சிய நிலங்களை நாட்டின் அறிவுக் களஞ்சியமாக்கிய வீரையா வாண்டையார் 1970ம் ஆண்டில் மறைந்தும் மாணவர்கள் மத்தியில் வாழும் ஒரு அற்புதமான வரலாற்றுச்சிற்பி. இன்றும் தமிழக ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி கிடைத்திட வழிவகுத்த இப்பெருமானாரின் முயற்சியினால் கல்விப்பணியில் உயர்ந்து ஓங்கி நிற்கிறது இக் கல்லூரி
10. சௌமியமூர்த்தி தொண்டைமான். 1913 - 1999
இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராகப் பதவி வகித்தார்.
ஆரம்ப வாழ்க்கை
தொண்டைமானின் தந்தையார் கருப்பையா தொண்டைமான். இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார். இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது. இதனால் கருப்பையா இலங்கையில் காப்பி தோட்டத்துக்கு வேலை செய்ய சென்றவர்களுடன் இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார்.
பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை 1903 இல் திருமணம் செய்துக் கொண்டார். மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா தொண்டைமான் இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். கருப்பையா தொண்டைமானின் நான்கு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி தொண்டமான் 1913 அக்டோபர் 30 இல் பிறந்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு கருப்பையா தொண்டைமான் சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார்.
1927இல், மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார். அவரில் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
திருமணமும் குடும்பமும்
1932 ஆம் ஆண்டு, இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது. அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 இல் கருப்பையா தொண்டமான் காலமானார்.
அரசியல் பிரவேசம்
ஜூலை 24, 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13, 1939 இல் சௌமியமூர்த்தி தொண்டைமான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தோட்டத் தொழிலாளர்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார். இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது.
இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தி தொண்டைமான் தெரிந்தெடுக்கப்பட்டார்.. இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும். 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.
முதலாவது தொழிற்சங்க போராட்டம்
1946 இல் கேகாலையில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர், அவர்களுக்கு வேலையும் மறுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டைமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு, இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன், இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலை, இறப்பர், கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார். மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார். வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது. அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி. எஸ். சேனநாயக்கா இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார்.
பாராளுமன்ற அங்கத்தவர்
1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு தொகுதிகளுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டைமான் நுவரெலியா தொகுதியில் போடியிட்டு, 9386 வாக்குகள பெற்று பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சியில் அமர்ந்தார். தொண்டைமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.
இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டைமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டைமான் இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார்.
இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டைமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.
1952 சத்தியாகிரகம் ஏப்ரல் 28,
1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டைமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் ஆரம்பித்தார். ஏப்ரல் 29, 1952 இல் பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர்.
இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் இலங்கை சனநாயக காங்கிரஸ் என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தலைவராக சௌமியமூர்த்தி 1955 முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் பதவி வகித்தார்.
1956 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.
1960 இல் தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார். 1978 முதல் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார்.
11. மன்னை கோபால்சாமி தென்கொண்டார்.
மன்னார்குடி கோபால்சாமி தென்கொண்டார் கள்ளர் சமுதாயத்தின் மிகச்சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர். முதன் முதலாக மன்னார்குடி நகர் மன்ற தலைவராக செயல்பட்டு மன்னை நகரத்திற்கு சிறந்த சீர்த்திருத்தங்களை செய்தவர். மன்னை இராசகோபாலசாமி ஆலயம் கள்ளர்குல மா மன்னன் இராசராசன் வழித்தோன்றல் முதலாம் குழோத்துங்கனால் கட்டப்பட்டது என்பதை யாவரும் அறிவர். இவ்வாலயத்தின் பங்குனி உற்சவ திருவிழா 18 நாட்களுக்கு நடைபெரும். இத் திருவிழா நாட்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் முதல் யாதவர் சமூகத்தினர் வரை அனைத்து சமூகத்தினருக்கும் மண்டகப்படி இருந்தது. ஆனால் கள்ளர் குல மன்னனால் கட்டப்பட்ட ஆலயத்திற்கு கள்ளர் சமூக மண்டகப்படி இல்லை. இந்த அவல நிலையை மாற்றி வெண்ணெய்தாழி உற்சவத்தன்று இரவு நடக்கும் தங்கக்குதிரை வாகன மண்டகபடியை தொடர்ந்து விடியும் வரை கள்ளர் சமூக மண்டகப்படியாக ஏற்படுத்தினார்.கள்ளர் சங்கத்தையும் தோற்றுவித்து அதன் தலைவராக வீற்றிருந்த பெருமை படைத்தவர் மன்னை கோபால்சாமி தென்கொண்டார். கள்ளர் குல மக்களை எல்லாம் ஒன்று திரட்டி மாபெரும் விழாவாக வெண்ணெய்தாழி உற்சவத்தன்று கள்ளர் மண்டகப்படியை ஏற்படுத்தி அதனை இன்று வரை கள்ளர் சங்கத்தால் செயல் படுத்த வித்திட்ட பெருமை இவருக்கு என்றென்றும் உண்டு.
கள்ளர் சமூகத்தை சார்ந்த படித்த இளைஞர் பலருக்கு இரயில்வேயில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், ஊட்டி போட்டோ தொழிற்சாலையில், திருவெறும்பூர் கனரக தொழிற்சாலையில் வேலைகள் கிடைத்திட பல்வேறு உதவிகளை நாகை பாராளுமன்ற உறுப்பினாராக இருந்த காலத்தில் செய்துள்ளார். தனது மண்டல அதிகாரத்திற்கு உட்பட்ட காரியங்களில் தன்னால் இயன்ற அளவு கள்ளர் சமூக மக்களின் உயர்வுக்கு பாடு பட்ட இன் உணர்வு மிக்க பழம்பெரும் அரசியல்வாதி தெங்கொண்டார் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
இவர் இராசகோபால் ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவராக இருந்தபோது தான் ஆலயத்தின் பழுதுகள் செய்யப்பட்டு ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்ந்தது. மேலும் இவர் வீட்டுக்கருகில் இருந்த கமலாதேவி காளியம்மன் கோவில் நவராத்திரி விழாவையும் மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்திய பெருமையும் இவரயே சேரும்
12. வித்வான் வடிவேல் சோழகர். 1909 - 1980
தஞ்சை மாவட்டம் புதைகரை என்னும் சிற்றூரில் திரு அப்புசோழகர் பெரிய வீட்டாயி அம்மாளுக்கும் 22/07/1909 ல் வடிவேலனார் பிறந்தார். தஞ்சைத் திரு நகரில் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். கல்வியில் திருவையாறு அரசர் கல்லூரியில் வித்வான் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதர் பயிற்சியும் பெற்றார். திருக்காட்டுப்பள்ளியில் தமிழ்வேள் உமாமகேசுவரனரர் தலைமையிலும்,
திரு பன்னீர்செல்வம் முன்னிலையிலும் 1933ல் நாரயணசாமி நாட்டார் மகள் செல்வி இரஞ்சிதத்துடன் திருமணம் நடைபெற்றது. தஞ்சை கல்யாணசுந்தரம் உயர்நிலை பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராக 39 ஆண்டுகள் பணியாற்றிய பெருமை படைத்தவர்.இதனை அடுத்து
தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பதிபியல் செயலராகவும்
கரந்தை தமிழ் சங்கத்தில் மன்ற உறுப்பினராகவும்
தமிழாசிரியர் கழகத்தில் செயலாலராகவும்
தஞ்சை மாவட்ட ஆசிரியர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும்
கள்ளர் மகா சங்கத்தில் அமைப்பாளராகவும்
தஞ்சை கம்பன் கழகத்தில் உறுப்பினராகவும்
இராணிவாய்க்கால் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும்
பல்வேறு பதவிகளை திறம்பட நடத்திய பெருமைகளையும் உடையவர்.
மேலும் பல்லவ மன்னர்கள், இலக்கணவிளக்கம், திருக்குறள் உரை, விஞ்ஞான மேதைகள், செந்தமிழ்செல்வம், தமிழ்மணிக்கோவை, பைந்தமிழ் இலக்கணம், வடிவேலன் வழிகாட்டி என்ற நூகளையும் தமிழ்மண்ணில் இயற்றி பதிபித்துள்ளார். சோழகர் என்றாலே அது வடிவேல் சோழகரைத் தான் குறிக்கும் என்ற அளவுக்கு வாழ்ந்து காட்டியவர் வடிவேலனார்.
அடக்கமான தமிழ்பணி, அமைதி, புன்சிரிப்போடுகூடிய நிதானம்,படபடப்பு இல்லா நெறி, ஆடம்பர உடை அணியா போக்கு, எப்பணியுலும் ஒரு தெளிவு இவையே இவரின் அடையாளமாக இருந்தன. தமிழாசிரியர்கள் முன்னேற்றம் எய்திட வழிகள் பல கண்ட பெருமக்களில் இவர் குறிப்பிடதக்கவராவார். தமிழாசிரியர்கள் இடையே நிலவிய தாழ்வு மனப்பான்மை நீங்கவும் ஆசிரியர்கள் உலகில் தமிழாசிரியர்கள் தலைநிமிர்ந்து வலம் வரவும் இவர் வழிகாட்டியுள்ளார். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலைய மதிப்பியல் செயலராக பொறுப்பேற்று ஆற்றிய சீரிய பணியும், தமிழ் உணர்வை வளர்த்த பெருமைக்குரிய கரந்தைத் தமிழ்ச்சங்க வளர்ச்சியில் இவர் கொண்டிருந்த ஆர்வமும் எந்நாளும் நினைவில் நிற்பன.
தஞ்சையில் கள்ளர் மகாசங்கம் பிறப்பதற்கு காரணரும் பல்லாயிரக்கனக்கில் வீறுகொண்ட கள்ளர் மாணவச்செல்வங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை முதுபெரும்புலவரும், வித்துவான் வடிவேல் சோழகரையே சேரும். அவ்ர் அடி தொடர்ந்து நடப்போம்.
13. அன்பில் தர்மலிங்கம்.
முடியுமா? முடியும்! என்று உழைப்பால் உயர்ந்தவர் அன்பில் தர்மலிங்கம்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அன்பில் தர்மலிங்கம், உழைப்பால் உயர்ந்தவர். கள்ளர் குல மக்களின் அன்பைப் பெற்றவர். தன் வாழ்நாளில் பல பதவிகளை வகித்தவர். ஊராட்சி மன்றத்தலைவராக, கூட்டுறவு சங்க இயக்குநராக, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக, சென்னை கூட்டுறவு வங்கி இயக்குனராக, திருச்சி மாவட்ட சட்டமன்ற உறுப்பினராக, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். வேளாண்மைத் துறை அமைச்சராக மட்டுமல்லாமல், உள்ளாட்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளையும் பொறுப்பேற்று நடத்தியவர்.
கள்ளர் சமுதாயம் வெடித்துக் கிடக்கும் வயல்போல், பட்டுப்போகும் நிலையில் உள்ள மரம்போல், உலர்ந்து கொண்டு வரும் கொடிபோல், வற்றிக்கொண்டிருக்கும் குளம் போல் ஏமாளிச் சமுதாயமாய்க் காட்சியளித்தது. நாம் முன்னேற அந்த முன்னேற்றம் நிலைபெற நம் சமுதாய விடுதலைதான் அடிப்படை; அவ்விடுதலை இல்லாமல் அரசியல் விடுதலையும் பொருளாதார விடுதலையும் நிரந்தர முன்னேற்றத்தைத் தராது என்று அன்பில் தர்மலிங்கம் தன் வாழ்நாளில் கண்டார்
"முடியுமா? முடியும்! என்று எண்ணுவோரின் தொகையையும், உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் வாங்கி, முகமன் கூறி அழைத்ததும், முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும், அணி அணியாக வந்தார்கள். அன்பில் தர்மலிங்கத்தின் பிரச்சாரத் திறனும் ஓயா உழைப்பும் உயர்தரமான அறிவாற்றலும் தமக்குப் பயன்படும் என்று அரசியல் சூதாடிகள் எண்ணி, அவரை வரவேற்று உபசரித்து, முகமன் கூறி முறுவல் காட்டினர்.
14. முத்துக்குமார் காங்கேயர் சந்திரகாசன். இ.ஆ.ப.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த நத்தமாங்குடி என்ற சிறு கிராமம், கூழையாறும் நந்தையாறும் ஒன்று சேர்ந்து கொள்ளிடம் நதியில் சங்கமாகுமிடம். இங்கு திரு முத்துக்குமார் காங்கேயருக்கும் வள்ளிநாயகம் திருமட்டிக்கும் நன்மகனாய் 25/03/1922ல் பிறந்தார் சந்திரகாசன் காங்கேயர் பிறந்தார். ஐந்து வயதில் தனது சிற்றூர்த் தொடக்கப் ப்ள்ளியில் கல்வி பயின்று, ஐந்து முதல் எட்டாம் வகுப்புவரை ஓரத்தூர் டி.பி. செல்லசாமி அய்யர் பள்ளீயிலும், 10ம் வகுப்பினை லால்குடி கழக உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பினை (பி.ஏ) திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரியிலும் பயின்றார்.
1943ம் ஆண்டு தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழக அரசுப்பணியாளர் தேர்வும் எழுதி அதிலும் தேர்வடைந்து 7/4/1944ல் இளநிலை உதவியாளர் எனும் அரசுப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக உச்ச நிலை அடைந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலராகவும் பணியாற்றி 31/01/1980ல் ஓய்வு பெற்றார்.
தனது சமுதாயச் சிந்தனைகளை வளர்ச்சியடைய வைத்தவர்கள் முன்னாள் அமைச்சர் திரு புரவலர் அன்பில் தருமலிங்கம், திரு. ந.ப. மாணிக்கம் ஏற்றாண்டார், திரு கோதண்டபாணி மூவரையர் என்று தனது மலரும் நினைவுகள் நூலில் குறிப்பிடுகிறார்.
மனைவி குளித்தலை திரு இரத்தினச் சோழகர் மகள் ஞானாம்பாள், இவர்களுக்கு இளங்கோவன் , டாக்டர் கருணாநிதி, மதிக்குமார் என்ற மூன்று மகன்களும் வாசுகி என்ற மகளும் உண்டு.
தனது அரசுப்பணி ஓய்வின்பின் சமூகத்தொண்டில் தன்னை இனைத்துக்கொண்டு கள்ளர் குல் முண்ணேற்றத்திற்கு அரும்பாடு பட்டுள்ளார். இராசராசன் கல்வி பண்பாட்டுக்கழகத்தின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தொண்டினை நாம் அனைவரும் உனர்ந்து அவர் வழியில் செயல் ஆற்றிட வேண்டும்.
இராசராசன் கல்விப் பன்பாட்டுக் கழகம் 16/03/1986ம் ஆண்டு நிருவப் பட்டு, 16/07/1986ல் பதிவு செய்யப்படது. 66 அங்கத்தினர்களை மட்டுமே கொண்டிருந்த இக் கழகத்தின் தலைவராக ஒருமனதாக 12/07/1987ம் ஆண்டு திரு சந்திரகாசன் காங்கேயர் தேர்வு செய்யப்பட்டார். இத் தேர்வுக்குபின் காங்கேயரின் முயற்ச்சியால் அங்கத்தினர்களின் என்னிக்கை வளர்ந்தது.
1986 - 1987 66 ஆக இருந்த அங்கத்தினர்களின் என்னிக்கை
1987 - 1988 266
1988 - 1989 682
1990 - 1991 1236
1991 - 1992 1700
1992 - 1993 2130
1993 - 1994 2401
1994 - 1995 2741 ஆக உயர்ந்தது.
உறுப்பினர்களின் சேர்க்கை விரிவடைந்து கழகத்தின் நிதி நிலையும் கணிசமாக உயர்ந்தது.
இராசராசன் கல்விப் பண்பாட்டு கழகத்தில் தனிக்குழுக்கள் அமைத்து சாதனை
திரு சந்திரகாசன் காங்கேயர் எட்டு ஆண்டுகள் கழக மேம்பாட்டிற்காகவும், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் நிறைவெற்றப்பட்ட
தீர்மாணங்களை நடை முறைப்படுத்தி வெற்றியும் கண்டார். தான் தலைமையேற்ற காலகட்டத்தில்
உறுப்பினர் சேர்க்கை குழு,
திருமணத் தகவல் தொடர்புக் குழு,
பண்பாட்டுக் குழு
இராசராசன் செய்தி மலர்க்குழு
நிதி மற்றும் கட்டக்குழு
மண்டலக் குழு
மகளீர் அணி போன்ற உள் அமைப்புகளை தோற்றுவித்து கழகத்தை நெறிபடுத்தினார். இதனுடன் உறுபினர் பட்டியலும், ஆறாவது ஆண்டு விழா மலர், இலவச மருத்துவ முகாம், நூலகத் திறப்பு விழ போன்ற நிகழ்வுகளையும் செயல்படுத்தி ந்ம் குல மக்களுக்கு அரும்பெரும் சேவைகள் பல செய்துள்ளார்.
தமிழ்நாடு கள்ளர் பேரவை தோற்றமும் செயல்பாடுகளும்
ஒரு வலுவான சமுதாய அமைப்பின் பின்னனி இருந்தால் தான் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து அரசுத்துறைகளிலும் உள்ள குறைபாடுகளை அரசின் தனி கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வு அல்லது பரிகாரம் பெறமுடியும். நமது சமுதாயப் பெரியோர்களால் நிறுவப்பட்டு வந்த சங்கங்கள் எல்லாம் நகர, வட்டார, இடங்களில் தான் இயங்கி வந்தன. இவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு அமைப்பு சமுதாய நலன் காக்க வேண்டும் என்று 15/12/1990ல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் நடந்த செயற்குழு கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
அதன் விளைவாக 14/04/1991 தமிழ் புத்தாண்டு நாள் அன்று தமிழ்நாடு கள்ளர் பேரவை தொடங்கப்பெற்றது. பின் இப் பேரவையை எல்லா மாவட்டங்க்களிலும் நிறுவ திரு சந்திரகாசன் காங்கேயர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
திரு சந்திரகாசன் காங்கேயர் தலைமையில் தமிழ்நாடு கள்ளர் பேரவை 14/04/1991 முதல் 27/04/1997 வரை செயல்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, திருச்சி, புதுகை, போன்ற மாவட்டங்களில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் எம் இன மக்களை ஒன்று திறட்டி மா பெரும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளது. பேரணிகளில் புரவலர் அன்பில் தர்மலிங்கம், திருவாளர்கள் அய்யாறு வாண்ைட்யார், தங்கமுத்து நாட்டார், துரை கோவிந்தவாசன், தியாகராச காடுவெட்டியார், காளிதாஸ் முடிபூண்டார், சோமசுந்தர தேவர், விஜயரெகுநாதப் பல்லவராயர் முதலாய சமுதாய பெரியோர்கள் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள்.
இவ்வாறு சிறப்புடன் செயல் பட்டுவந்த திரு சந்திரகாசன் காங்கேயர் 27/04/1997 நாளன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொருப்பில் இருந்து நிறுவனத் தலைவராகவும் திரு இராமச்சந்திரப் பல்லவராயர் மாநிலத் தலைவராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின் திரு சந்திரகாசன் காங்கேயர் நிறுவனத் தலைவராக செயல்பட்ட போதிலும் மாநில தலைவர்களின் கருத்து வேற்றுமையால் தமிழ்நாடு கள்ளர் பேரவையின் செயல்பாடுகள் தொய்வடைந்து விட்டது.
அளவற்ற அன்பு, மட்டற்ற மரியாதை ஆகிய பண்புகளை வளர்த்து விட்ட எம் குல மாமனிதனுக்கு ந்ன்றி சொல்லுவோம்
15. ராஜபூசனம் மன்னையார். 1936 - 2009
அண்ணாமலை மன்னையார்,கல்யாணி அம்மாளுக்கும் அம்மாப்பேட்டைக்கு அருகில் உள்ள கம்மந்தங்குடி என்னும் கமுகஞ்சேந்தகுடியில் பிறந்தவராவார்.தொடக்கக் கல்வியை அம்மாப்பேட்டையில் திண்ணைப் பள்ளியில் ஆரம்பித்தார்.பின்னர் அம்மாப்பேட்டை உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுப்பெற்று குடந்தை அரசினர் கல்லூரியில் பி.எஸ்.சி கணித பாடத்தில் பட்டமும் பெற்றார். சென்னை தலைமை செயலகத்தில் உதவியாளராகவும்,மாநிலத் தேர்வாணை தலநல நிதிக் கணக்குத் துறையிலும்,பின்னர் தமிழ்நாட்டு மின்சார வாரியத்தில் உதவியாளராக சேர்ந்து தன் முயற்சியின் மூலம் படிப்படியாக பதவி உயர்வுகள் பலபெற்று துணைச்செயலாளராக பதவி வகித்து 1994ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பின்னர் இராசராசன் கல்விப்பண்பாட்டுக் கழகத்தில் இனைந்து முக்குலத்துச் சாதனையாளர்களையும், அறிஞர்களையும் நேர்காணல் செய்து கழக செய்தி மலரில் வெளியிட்டும் வந்தார். ஞானகுரு வேணுகோபால சுவாமிகளை தனது குருவாக ஏற்று அவர் வழி பின்பற்றி தம்நேரத்தை தியானம்,ஆன்மீகம்,மெய்ஞ்ஞானம் ஆகியவற்றில் ஈடுபடுத்தி வந்தார்.இதனிடையே கள்ளர் குலம்பற்றிய ஒரு நூல் எழுதவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு குறிபுகள்,புத்தகங்கள், கல்வெட்டு சம்பந்தமான நூல்கள், தொல்பொருள் ஆய்வு நூல்கள் என பல்வேறு நூல்களையும் வாங்கியும், படித்தும் தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் கள்ளர் குல வரலாறு என்னும் சீர் மிகு நூலையும் வெளியிட்டுள்ளார்.
16. பேராசிரியர் பி.விருத்தாசல நாட்டார். 1940 - 2010
தன் வரலாற்றுக் குறிப்புகள்.
தென்காவேரி என்பது என்னை ஈன்று புறந்தந்த தாயின் பெயர். பொ.பிச்சையா நாட்டார் என்னைச் சான்றோன் ஆக்கிய என் தந்தையின் பெயர். என் பிறந்தநாள் 22-05-1940. ஆனாலும் நான் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது என் அண்ணன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்து நானும் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடித்து, நடுத்தெருவில், புழுதிமண்ணில் கிடந்து புரண்டு அழுது, ஆர்ப்பாட்டம் செய்த என் தொல்லை பொறுக்கமாட்டாமல், என் தாய் எனக்கு போட்டுவிடக் கால்சட்டையோ மேல் சட்டையோ இல்லாத நிலையில், என் தந்தையின் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றிவிட்டு என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
எப்படியோ காலம் விரைந்து ப்றந்தோடி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் பிறந்த ஊரான மேலத்திருப்பூந்துருத்தியில் எட்டாம் வகுப்புவரை படித்துத் தேர்ச்சிபெற்றேன். திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப்பள்ளி, பூண்டி திரு புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து படித்தேன். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றேன். சென்னையில் தமிழாசிரியராக பணிபுரிந்துகொண்டே தனியாகப் படித்து பி.ஏ. பட்டம் பெற்றேன். கரந்தைப் புலவர் கல்லுரியில் 25-06-1969 இல் பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தனியாகப் படித்துத் தேர்வெழுதி எம்.ஏ பட்டம் பெற்றேன். இது படித்துப் பட்டம் பெற்ற வரலாறு.
என் ஊனிலும் உயிரிலும் கலந்து என்னை இயக்கி வரும் இலக்கிய வரிகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
3. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
4. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
5. அறிவை விரிவு செய்; அகண்டம் ஆக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
இனியும் என் தொண்டுகள் தொடரும்
நாடுவாழ நான் வாழ்வேன்
பி. விருத்தாசலம்
தங்கச் சாலையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும், சென்னைப் பெரம்பூரில் உள்ள சமாலியா மேல்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்தவர்.
தஞ்சையருகே உள்ள கரந்தையில் உள்ள உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியில் 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இதில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எளிய நிலையில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் உணர்வு செறிந்த மாணவர்களுக்கும் இவர் தந்தையராகவும் காப்பாளராகவும் இருந்து உதவியவர்.
சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆட்சிக்குழு, கல்விக்குழு உறுப்பினராக இருந்து பணிபுரிந்தவர். இங்கெல்லாம் தமிழுக்கு ஆக்கமான நிலையில் குரல்கொடுத்தவர்.
தமிழகத்துக் கல்லூரிகள் பலவும் பிலிட் என்னும் இளங்கலைத் தமிழ் இலக்கிய வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இணைத்துப் பயிற்றுவிக்கத் துணிந்தபொழுது தஞ்சாவூரில் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் பயில வாய்ப்பமைத்தவர்.
சிலப்பதிகாரத்திலும் பாவேந்தர் படைப்புகளிலும் பழந்தமிழ் நூல்களிலும் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.
'கெடல் எங்கே தமிழின் நலம்,அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க'.
என்னும் பாடல் அடிகளுக்கேற்ப வாழ்ந்து வந்தவர் பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள்.
தனித்தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் தமிழியக்கம் தழைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார்கள். குறிப்பாக, சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்தபோது சென்னைப் பல்கலைக்கழக அடையாளச் சின்னத்தில் இருந்த
DOCTRINA VIM PROMOVET INSITAM
என்னும் குறிக்கோள் மொழியைத் தமிழில் மாற்ற வேண்டுமென 8.11.1976, 30.3. 1977, 30.11.1977
ஆகிய நாள்களில் நடைபெற்ற மூன்று பேரவைக் கூட்டங்களில் தீர்மானங்கள் தந்து போராடியதன் விளைவாக சென்னைப் பல்கலைக்கழ அடையாளச் சின்னத்தில்
கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
என மாற்றியதையும்,சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் வழங்கப்பெற்றதை, தமிழிலும் வழங்க வேண்டும் கூறி மாற்றியதையும் கூறலாம்.
தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தின் அருகில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி என்னும் சிற்றூரில்
திருவாட்டி தென்காவேரியம்மையாருக்கும்,திருவாளர் பொ.பிச்சை நாட்டார் என்பாருக்கும்அருமை மகவாய் 22-5-1940-இல் தோன்றினார்.
இவர் திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப் பள்ளி, பூண்டி திரு.புட்பம் கல்லூரி,திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் பயின்று,தங்கசாலையில் உள்ள தொண்ட மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும், சென்னை பெரம்பூரில் உள்ள சமாலியா மேனிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்து,பின்பு தஞ்சையருகே யுள்ள உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் 28 ஆண்டுகளில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து பணிபுரிந்து சிறப்பித்துள்ளார்கள்.
பேராசிரியராக இருந்த காலத்து மாணக்கருக்கு பாடம் சொல்லும் திறம் அனைவனரும் விரும்பத்தக்கதாக இருந்தது தெளிவான குரல்,ஆழமான கருத்து,ஓசை நயத்த்தோடு செய்யுளை எடுத்துரைக்கும் முறை,பழம்
நூல்களின் தோய்வு காரணமாக பல மேற்கோள்கள்,நகைச்சுவையோடு கூடிய உலகியல் பார்வை, சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த அகன்ற நுட்பமான பார்வை உடையதால் இசையோடும் நயத்தோடும் விளக்கும் திறன் என இவருடைய கற்பிக்கும் முறையால் தமிழ் வகுப்புக்கள் மாணவர்களால் பெரிதும் விரும்பப் பெற்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1976,1977,1978 ஆகிய மூன்று ஆண்டுகள் பேரவை(senate) உறுப்பினராகவும்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1982 முதல் பேரவை உறுப்பின்னராகவும்,ஆட்சிகுழு உறுப்பினராகவும் (syndicate) கல்விப் பேரவையிலும்(standing committee for Academic affair)
பாடத்திட்டக் குழுக்களிலும், பல்கலைக்கழகத் திட்ட குழுக்களிலும் உறுப்பினராக இருந்து தமிழியக்கம் தழைக்க பல தீர்மானங்கள் கொண்டு வந்து அதில் 120 தீர்மானங்களை நிறைவேற்றி சிறப்பாக செயலாற்றியுள்ளார்கள்.
நாவலர் ந.மு. வேங்கடசாமி ஐயா அவர்கள் தமிழகத்து மாந்தரனைவரும் தாய்மொழி வழி
ஒரு தலையாகக் கல்வி கற்று மேன்மையனைய வேண்டும் என்ற விருப்பினால் 1921 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் திருகாட்டுப்பள்ளிக்கு அருகே திருவருள் கல்லூரி ஒன்று நிறுவக் கருதி , அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அம் முயற்சியைப் பாராட்டி தந்தை பெரியார் நன்கொடையாக உரூபா
ஐம்பது தந்துள்ளார் என்பது குறிப்பிடப்பக்கது. ஆனால் இம் முயற்சி வெற்றி பெறவில்லை.
பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்பு ந.மு.வே.ஐயாவினுடைய
எண்ணத்தை நிறைவேற்றும் வகையில்,தஞ்சையருகே வெண்ணாற்றங்கரை கபிலர் நகரில் இயற்கை சூழலோடு கூடிய இடத்தில் 14-10-1992 ஆம் ஆண்டு திருவருள் கல்லூரி என்னும் பெயருடன் நாட்டாரையா அவர்களுடைய பெயரையும் இணைத்து ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் புலவர் கல்லூரி நிறுவி மேலாண்மை அறங்காவலராக இருந்து சிறப்புடன் வழிநடத்தி வந்துள்ளார்
பேராசிரியர் பி. விருத்தாசலம் தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், தமிழின அவலத்தைப் போக்கவும் போராடியவர். இன உணர்வாளர், தமிழ்ப் பண்பாளர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தனித் தமிழ்ப் புலவர் படிப்பை கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வந்தவர். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். தமிழ் வழிக் கல்விக்காகப் பல மாநாடுகள் நடத்தியவர். தமிழக அரசு உருவாக்கியுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவையில், இந்திய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உறுப்பினராக பணிபுரிந்தார். .
.
மாணவப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது பற்றுக் கொண்டிருந்தார். புகழ்பெற்ற கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராக 28 ஆண்டுகள் அவர் பணிபுரிந்தபோது ஆயிரக்கணக்கில் உணர்வுள்ள தமிழாசிரியர்களை உருவாக்கினார். 1982 முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேரவை ஆட்சிக் குழு, பாடத் திட்டக் குழுக்களில் இடம்பெற்று பல அரிய பணிகள் செய்தார்.
தமிழின் உயர்விற்காக, தமிழனின் உயர்ந்த வாழ்வுக்காக, தமிழ் வழிக் கல்விக்காக, தமிழ் படித்தோர் வேலைவாய்ப்புக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். தமிழ், தமிழர் எழுச்சிக்காக “என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற நூலை வெளியிட்டார். இவரின் படைப்புக்கள் தமிழ் மண் பதிப்பகம் மூலம் 26 தொகுதிகளாக வந்துள்ளது. உலக நாடுகள் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் சங்க இலக்கியம் பற்றி ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார்.
இவரது தமிழ் வாழ்வைப் போற்றி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை வழங்கிக் கௌரவித்தது. இவரது தமிழ்ச் சேவையைப் போற்றி 2009ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதய திருவிழாவில் இராசராசன் விருது வழங்கப்பட்டது.
பேராசிரியர் பி. விருத்தாசலம் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் அயராது போராடியவர் ஆவார். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றி தமிழ் வழிக் கல்விக்காக பல மாநாடுகளை நடத்தியவர்.
1982ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, பேரவை, பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெற்று அரிய தொண்டுகள் பல செய்தார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார். உலக நாடுகள் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் சங்க இலக்கியம் குறித்து சிறப்பான ஆய்வுரைகள் நிகழ்த்தியுள்ளார்.
இவரது தமிழ்த்தொண்டினைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை வழங்கியது. இவரின் தமிழ்ப் பணியைப் போற்றி 2009 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதயத் திருவிழாவில் இராசராசன் விருது வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு சனவரியில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது இவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதிலும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்த உலகப் பெருந்தமிழர் பி. விருத்தாசலனார்
பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்ற தமிழ்ப் பாட்டன் கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மேடை தோறும் முலங்கிய பெருமையும் ஐயா விருத்தாசல நாட்டாரையே சாரும். தான் அமைத்த திருவருள் கல்லூரியில் கபிலர் இலக்கிய கழகம்,இமயவரம்பன் உடற்பயிற்சிக்கழகம் என வளாகத்தில் தமிழ் மணம் கொஞ்சுவதுடன் கல்லூரி அமைவிடத்தையும் கபிலர் நகர் என்றே பெயரும் இட்டு உயர்வுஸ் சிறப்பும் பெற்றார். இன்றளவும் நாட்டார் கல்லூரி வளாகம் த்மிழுணர்வாளர்கள் சங்கமிக்கும் வேடந்தாங்கலாகவே திகழ்கிறது. இக்கல்லூரியின் வகுப்பறைகளில் இலக்கணம் வழுவா இலக்கியம் கற்பிப்பதோடு கெடல் எங்கே த்மிழன் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என தமிழ் போராட்ட உணர்வுகளையும் ஊட்டியுள்ளார்.
வெண்ணாற்றங்கரையிலமைந்துள்ள நாவலர் நாட்டார் கல்லூரி உலகப்புகழ் எய்த வேண்டும். இத்தகு தமிழ் ஆர்வலர், உணர்வாளர், சாதனையாளர் தொடங்கிய இக்கல்லூரி நின்று நிலைத்து வளர்ந்து வாகை சூடிட நம்மால் முடிந்தனைத்தும் செய்திடல் கள்ளர்களின் நம் கடமையாகும்.
பேராசிரியர் பி.விருத்தாசலனார் நூல்கள்
சான்றோர் சிந்தனைகள்
காவிரிக்கரை வேங்கடம்
தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்
கண்ணகி சிலம்பீந்த காரணம்
மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
சிந்தனைச் சுடர்
17. தியாகராஜர் காடுவெட்டியார்
18. மன்னை நாரயனசாமி
19. திருமதி டி. என். அனந்தநாயகி
1931 இல் பிறந்த அனந்தநாயகி, பாபநாசத்தில் பள்ளிக்கல்வியும் இராணி மேரி கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்கல்வியும் கற்றார். இவர் 1946 ம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்; இரு முறை சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தவர்.
ஒரு அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மூன்றுமுறை - 1957, 1962 மற்றும் 1971ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
20. எஸ்.டி.சோமசுந்தரம். 1923 - 2001
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செண்டாங்க்காடு என்ற கிராமத்தில் பிறந்து, பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். இவர் படித்த இந்த பள்ளியில் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன் ஆகியோரும், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமனும் படித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவராக இருக்கும்போதே அரசியளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். பள்ளி படிப்பை முடித்த திரு எஸ்.டி.எஸ் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ பொறியியல் பட்ட படிப்புக்காக சேர்ந்தார். தடகள விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். பள்ளியிலும், அண்ணாமலை பல்கலைகழகத்திலும் ஓட்டபந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தை பெற்றுவந்தார்.
1951-ல் அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வகுப்புவாரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மாணவப் பருவத்திலேயே போராட்டத்தில் கலந்து கொண்டவர்.1955-ல் தமிழர்கள் வாழும் பகுதியான தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியவை கேரளாவுடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அப்போது இவர் திராவிட மாணவர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக இருந்தார்.
1957-1967 மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல மாநாடுகளை நடத்தி மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வுகளை ஏற்படுத்தியவர். மாணவர் பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களின் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர். 1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகததில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்று தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார்.
1967-1978 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். மூன்று முறை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முறையே முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன், மதுக்கூர் ஜமீன்தார் கிருஷ்ணசாமி கோபாலர், திரு. எல்.கணேசன் ஆகியோரை தோற்க்கடித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலாவதாக தேர்ந்த்தேடுக்கப்பட்ட எம்.பியும் இவரேயாவார். 1980 சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு ஏ.ஆர். மாரிமுத்து அவர்களை தோற்க்கடித்தார்.
1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க ஆரம்பித்தபோது, அவருடன் தோளோடு தோள் நின்று அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்கினார். அவரால் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர். எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கும் போது அவருக்கு துணை நின்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ணசாமி, முனுஆதி, குழ.செல்லையா, எஸ்.ஆர்.இராதா, கே.சௌந்தரராசன், இரா.மோகனரங்கம், என்.எஸ்.இளங்கோ, முசிறிப்புத்தன் ஆகியோர்கள். மற்ற தலைவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை கண்டு பின்பு தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு எஸ்.டி.எஸ் அவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள், புதுவை மாநில பொதுத் தேர்தல்கள் ஆகியவற்றில் தேர்தல் பணிக்குழு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றி வெற்றிக்காக பாடுபட்டவர். அப்போதைய ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஏற்படுத்தப்பட்ட போராட்ட நடவடிக்கை குழுவுக்கு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.
1973 ஆம் ஆண்டு அக்டோபரில், மாஸ்கோவில் உலக சமாதானக் கழக மாநாடு நிகழவிருந்தது. அதில் கலந்து கொள்ளும்படியும் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் அந்த மாநாட்டுக்குத் தம் பிரதிநிதிகளக எஸ்.டி.சோமசுந்தரம் ,கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோரை அனுப்பி வைத்தார். அ.தி.மு.கவின் பிரச்சார செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார். தந்தை பெரியார் சிலை அமைப்பு குழுவின் தலைவராகவும், பெரியார் சிலை திறப்பு வரவேற்புகுழு தலைவராகவும் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.
1978-1984 வருவாய்த்துறை அமைச்சர்
வருவாய்த்துறை அமைச்சருக்கு என்னை போன்றவர்களின் பாராட்டு மட்டுமே வருவாய் என்று எம்.ஜி.ஆரால் புகழாரம் சூட்டப்பட்டவர். எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் கிராமங்களில் இருந்த மணியகாரர் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்து, கிராம முறையை மாற்றி அமைத்து செம்மையாக்கினார். இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்களின் பாராட்டையும் பெற்றார்.
இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டிருந்தார். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு ஏற்ப்பட வேண்டும் என்று விரும்பியவர். அப்பிரச்சனையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிறந்த ஆலோசகராக திகழ்ந்தார். இலங்கையில் 1983 இனப்படுகொலை நடந்தபோது மனம் கொதித்து தனது எதிர்ப்பை கருப்பு சட்டை போராட்டங்கள் மூலம் தெரிவித்தவர். 1985-ல் இலங்கைத் தமிழருக்காக மதுரையில் மிகப்பெரிய எழுச்சி பேரணியை நடத்தி இரயில் மறியல் போராட்டத்தின் மூலம் சிறை சென்றவர்.
1983-ல் பட்டுக்கோட்டை பகுதியில் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவி ஏழைகள் தொழில் கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தார். 1995-ல் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்திக்காட்டி அனைவரின் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவரானார். சுற்றுச்சாலை, இரயிவே மேம்பாலம், புதிய பேருந்து நிலையம் போன்றவற்றை தஞ்சாவூருக்கு ஏற்ப்படுத்தி கொடுத்தார்.
ரஷ்யா,ஜப்பான்,ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
எஸ்.டி.எஸ் நூல்கள்
தமிழின படுகொலை,
காவேரித் தாய்க்கு கருணாநிதி செய்த கேடுகள்,
இலங்கை இனப்படுகொலை பற்றி இந்திய பிரதமருக்கு எஸ்.டி.எஸ்ஸின் பத்து கோரிக்கைகள்,
மதுவிலக்கு கொள்கையில் தமிழக முதல்வர்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். .
"போர்வாள்" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
1984-ல் திருச்சியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்திற்கிடையே நமது கழகம் என்ற கட்சியை தொடக்கி பிரகடனப்படுத்தினார்.
1987-ல் எம்.ஜி.ஆர் அவர்களின் அழைப்பை ஏற்று அ.இ.அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1987-ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் பணியாற்றினார்.
1991 சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தி.மு.கவைச் சேர்ந்த அப்போதைய அமைச்சர் திரு எஸ்.என்.எம்.உபயத்துல்லா அவர்களை தோற்க்கடித்தார்.
1991-1996 சட்டப்பேரவை உறுப்பினர், வருவாய்த்துறை அமைச்சர்.
ஆயிரக்கணக்கான சுயமரியாதை தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்து சுயமரியாதை சுடராக விளங்கியவர். மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லாதபோது சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.
பொதுமக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் அனைவராலும் "பாசமிகு எஸ்.டி.எஸ்" என்று அழைக்கப்பட்டவர்.அரசியலில் சுடர் விட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.டி.சோமசுந்தரம். ஏனோ அவரது மறைவு (06.12.2001) யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் இறந்ததாலோ என்னவோ?